யாழ்ப்பாணத்தில் கடந்த ஆண்டு இடம்பெற்ற களவுச் சம்பவம் தொடர்பில் நான்கு சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இரவு வேளையில் இடம்பெற்ற இந்தக் களவுச் சம்பவத்தில் சுமார் 17 இலட்சம் ரூபாய் பெறுமதியான பொருட்கள் திருடப்பட்டதாகக் குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.
இந்நிலையில், யாழ்ப்பாணம் மாவட்ட குற்றத்தடுப்புப் பிரிவு பொலிஸார் முன்னெடுத்த நடவடிக்கையில், குறித்த நான்கு சந்தேகநபர்களும் நேற்று இரவு கைது செய்யப்பட்டுள்ளனர்.
இதற்கிடையில், களவாடப்பட்ட பெறுமதியான பொருட்களும் பொலிஸாரால் மீட்கப்பட்டுள்ளன.
சந்தேகநபர்களிடம் மேலதிக விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருவதுடன், விசாரணைகளின் பின்னர் அவர்களை நீதிமன்றில் முற்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.
யாழில் ரூ.17 இலட்சம் பெறுமதியான பொருட்கள் எங்கே இறுதியில் சிக்கிய நால்வர் யாழ்ப்பாணத்தில் கடந்த ஆண்டு இடம்பெற்ற களவுச் சம்பவம் தொடர்பில் நான்கு சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.இரவு வேளையில் இடம்பெற்ற இந்தக் களவுச் சம்பவத்தில் சுமார் 17 இலட்சம் ரூபாய் பெறுமதியான பொருட்கள் திருடப்பட்டதாகக் குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.இந்நிலையில், யாழ்ப்பாணம் மாவட்ட குற்றத்தடுப்புப் பிரிவு பொலிஸார் முன்னெடுத்த நடவடிக்கையில், குறித்த நான்கு சந்தேகநபர்களும் நேற்று இரவு கைது செய்யப்பட்டுள்ளனர்.இதற்கிடையில், களவாடப்பட்ட பெறுமதியான பொருட்களும் பொலிஸாரால் மீட்கப்பட்டுள்ளன.சந்தேகநபர்களிடம் மேலதிக விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருவதுடன், விசாரணைகளின் பின்னர் அவர்களை நீதிமன்றில் முற்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.