• Nov 10 2026

புதிய சட்டமூலத்திலும் தொடரும் ஆபத்துகள்? இலங்கைக்கு ஐ.நா. விடுத்துள்ள எச்சரிக்கை!

Chithra / Nov 10th 2026, 10:33 am
image



இலங்கை அரசாங்கத்தால் முன்மொழியப்பட்டுள்ள அரசினைப் பயங்கரவாதத்திலிருந்து பாதுகாக்கும் சட்டமூலம் சர்வதேச மனித உரிமைகள் சட்டங்களுக்கு அமைவாகத் திருத்தப்பட வேண்டும் என ஐக்கிய நாடுகள் சபை வலியுறுத்தியுள்ளது.


இது தொடர்பாக ஐ.நா. நிபுணர்கள் வெளியிட்டுள்ள விசேட அறிக்கையிலேயே இந்த வலியுறுத்தல் விடுக்கப்பட்டுள்ளது.


1979 ஆம் ஆண்டின் 48 ஆம் இலக்க பயங்கரவாதத் தடைச் சட்டத்தை (PTA) ரத்து செய்வதற்கு அரசாங்கம் முன்மொழிந்துள்ள நடவடிக்கையைத் தாம் வரவேற்பதாகவும் நிபுணர்கள் குறிப்பிட்டுள்ளனர்.


முந்தைய பயங்கரவாதத் தடைச் சட்டத்தின் கீழ் சிறுபான்மை சமூகங்கள், மனித உரிமைச் செயற்பாட்டாளர்கள், ஊடகவியலாளர்கள் மற்றும் சிவில் சமூகத்தினர் பல்வேறு நெருக்கடிகளுக்கு உள்ளாகியிருந்ததாகவும் அவர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.


இந்நிலையில், அரசாங்கத்தால் முன்மொழியப்பட்டுள்ள புதிய சட்டமூலத்தில் சில சாதகமான அம்சங்கள் காணப்பட்டாலும், தீர்க்கப்பட வேண்டிய முக்கியமான குறைபாடுகள் பல உள்ளதாக ஐ.நா. நிபுணர்கள் தெரிவித்துள்ளனர்.


குறிப்பாக, தடுப்புக் காவல் உத்தரவுகள் விரைவானதும் பயனுள்ளதுமான நீதித்துறை மேற்பார்வைக்கும் கட்டுப்பாட்டுக்கும் உட்படுத்தப்பட வேண்டும் என அவர்கள் வலியுறுத்தியுள்ளனர்.


அத்துடன், தடுப்புக் காவல் தொடர்பான மேன்முறையீடுகளை விசாரிக்கும் சுயாதீன மீளாய்வுக் குழு உண்மையான சுயாதீனத்துடன் செயற்படுவதை உறுதிப்படுத்த வேண்டும் என்றும் கோரிக்கை விடுத்துள்ளனர்.


மேலும், 'பயங்கரவாதம்' என்பதற்கான வரைவிலக்கணம் திட்டமிட்ட கொலை அல்லது கடுமையான உடல் காயத்தை ஏற்படுத்தும் செயல்களுக்கு மாத்திரம் மட்டுப்படுத்தப்பட வேண்டும் எனவும், சொத்துக்களுக்கான சேதங்களை அதற்குள் உள்ளடக்கக்கூடாது எனவும் ஐ.நா. நிபுணர்கள் வலியுறுத்தியுள்ளனர். 


புதிய சட்டமூலத்திலும் தொடரும் ஆபத்துகள் இலங்கைக்கு ஐ.நா. விடுத்துள்ள எச்சரிக்கை இலங்கை அரசாங்கத்தால் முன்மொழியப்பட்டுள்ள அரசினைப் பயங்கரவாதத்திலிருந்து பாதுகாக்கும் சட்டமூலம் சர்வதேச மனித உரிமைகள் சட்டங்களுக்கு அமைவாகத் திருத்தப்பட வேண்டும் என ஐக்கிய நாடுகள் சபை வலியுறுத்தியுள்ளது.இது தொடர்பாக ஐ.நா. நிபுணர்கள் வெளியிட்டுள்ள விசேட அறிக்கையிலேயே இந்த வலியுறுத்தல் விடுக்கப்பட்டுள்ளது.1979 ஆம் ஆண்டின் 48 ஆம் இலக்க பயங்கரவாதத் தடைச் சட்டத்தை (PTA) ரத்து செய்வதற்கு அரசாங்கம் முன்மொழிந்துள்ள நடவடிக்கையைத் தாம் வரவேற்பதாகவும் நிபுணர்கள் குறிப்பிட்டுள்ளனர்.முந்தைய பயங்கரவாதத் தடைச் சட்டத்தின் கீழ் சிறுபான்மை சமூகங்கள், மனித உரிமைச் செயற்பாட்டாளர்கள், ஊடகவியலாளர்கள் மற்றும் சிவில் சமூகத்தினர் பல்வேறு நெருக்கடிகளுக்கு உள்ளாகியிருந்ததாகவும் அவர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.இந்நிலையில், அரசாங்கத்தால் முன்மொழியப்பட்டுள்ள புதிய சட்டமூலத்தில் சில சாதகமான அம்சங்கள் காணப்பட்டாலும், தீர்க்கப்பட வேண்டிய முக்கியமான குறைபாடுகள் பல உள்ளதாக ஐ.நா. நிபுணர்கள் தெரிவித்துள்ளனர்.குறிப்பாக, தடுப்புக் காவல் உத்தரவுகள் விரைவானதும் பயனுள்ளதுமான நீதித்துறை மேற்பார்வைக்கும் கட்டுப்பாட்டுக்கும் உட்படுத்தப்பட வேண்டும் என அவர்கள் வலியுறுத்தியுள்ளனர்.அத்துடன், தடுப்புக் காவல் தொடர்பான மேன்முறையீடுகளை விசாரிக்கும் சுயாதீன மீளாய்வுக் குழு உண்மையான சுயாதீனத்துடன் செயற்படுவதை உறுதிப்படுத்த வேண்டும் என்றும் கோரிக்கை விடுத்துள்ளனர்.மேலும், 'பயங்கரவாதம்' என்பதற்கான வரைவிலக்கணம் திட்டமிட்ட கொலை அல்லது கடுமையான உடல் காயத்தை ஏற்படுத்தும் செயல்களுக்கு மாத்திரம் மட்டுப்படுத்தப்பட வேண்டும் எனவும், சொத்துக்களுக்கான சேதங்களை அதற்குள் உள்ளடக்கக்கூடாது எனவும் ஐ.நா. நிபுணர்கள் வலியுறுத்தியுள்ளனர். 

Advertisement

Advertisement

Advertisement