• Nov 09 2026

ஹட்டன் வீதியில் ஆபத்து ஸ்தம்பித்த போக்குவரத்து.. சாரதிகளுக்கு எச்சரிக்கை

Aathira / Nov 9th 2026, 9:03 pm
image

ஹட்டன் – நுவரெலியா பிரதான வீதியின் குடாகம மற்றும் மல்லிப்பூ சந்தி பகுதிகளில் மண் திட்டுகள் சரிந்து விழுந்துள்ளதால் போக்குவரத்து தடைப்பட்டுள்ளது.

இதனை ஹட்டன் போக்குவரத்துப் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

மேலும் கினிக்கத்தேன ஹட்டன், ஹட்டன் நுவரெலியா, ஹட்டன் பொகவந்தலாவ, ஹட்டன் சாமிமலை, ஹட்டன் மஸ்கெலியா, ஹட்டன் நோட்டன், 

ஆகிய பகுதிகளுக்கு செல்லும் பிரதான சாலையில் வாகனங்கள் செலுத்தும் சாரதிகள் மிகவும் அவதானமாக வாகனங்களை செலுத்துமாறு கேட்டுக் கொள்ள படுகின்றனர்.

குறித்த பகுதிகளில் எந்த நேரத்திலும் மண் திட்டுகள் சரிந்து விழும் அபாயம் காணப்படுவதாகவும் எச்சரிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை, இன்று மதியம் முதல் இடி, மின்னலுடன் கூடிய கனமழை தொடர்ந்து பெய்து வருவதால், சில பகுதிகளில் மின்தடையும் ஏற்பட்டுள்ளது.

ஆறுகள் மற்றும் ஓடைகளிலும் நீர்மட்டம் அதிகரித்து வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது.

சாமிமலை ஓயா, காட்மோர் ஓயா, சியத்தலகங்குல ஓயா, மரே ஓயா உள்ளிட்ட ஆறுகளிலும், மகாவலி கங்கை மற்றும் அதன் கிளை ஆறுகளிலும் நீர்வரத்து அதிகரித்துள்ளது.

அத்துடன், கெசல்கமு ஓயாவிலும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளதுடன், மரே, மோகினி எல்ல, காட்மோர், லக்சபான, டெவன் மற்றும் 

சென் கிளையர் ஆகிய நீர்வீழ்ச்சிகளிலும் நீர்ப்பெருக்கு அதிகரித்துள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதன் காரணமாக கென்யோன் நீர்த்தேக்கத்தின் வான் கதவுகள் ஊடாகவும், விமல் சுரேந்திர நீர்த்தேக்கத்தின் மதகுகள் ஊடாகவும் நீர் வெளியேற்றப்படுகிறது.

எனவே, களனி கங்கை மற்றும் மகாவலி கங்கையின் கரையோரப் பகுதிகளில் வசிக்கும் மக்கள் மிகுந்த அவதானத்துடன் இருக்குமாறு நுவரெலியா மாவட்ட அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் அறிவுறுத்தியுள்ளது.

ஹட்டன் வீதியில் ஆபத்து ஸ்தம்பித்த போக்குவரத்து. சாரதிகளுக்கு எச்சரிக்கை ஹட்டன் – நுவரெலியா பிரதான வீதியின் குடாகம மற்றும் மல்லிப்பூ சந்தி பகுதிகளில் மண் திட்டுகள் சரிந்து விழுந்துள்ளதால் போக்குவரத்து தடைப்பட்டுள்ளது.இதனை ஹட்டன் போக்குவரத்துப் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.மேலும் கினிக்கத்தேன ஹட்டன், ஹட்டன் நுவரெலியா, ஹட்டன் பொகவந்தலாவ, ஹட்டன் சாமிமலை, ஹட்டன் மஸ்கெலியா, ஹட்டன் நோட்டன், ஆகிய பகுதிகளுக்கு செல்லும் பிரதான சாலையில் வாகனங்கள் செலுத்தும் சாரதிகள் மிகவும் அவதானமாக வாகனங்களை செலுத்துமாறு கேட்டுக் கொள்ள படுகின்றனர்.குறித்த பகுதிகளில் எந்த நேரத்திலும் மண் திட்டுகள் சரிந்து விழும் அபாயம் காணப்படுவதாகவும் எச்சரிக்கப்பட்டுள்ளது.இதேவேளை, இன்று மதியம் முதல் இடி, மின்னலுடன் கூடிய கனமழை தொடர்ந்து பெய்து வருவதால், சில பகுதிகளில் மின்தடையும் ஏற்பட்டுள்ளது.ஆறுகள் மற்றும் ஓடைகளிலும் நீர்மட்டம் அதிகரித்து வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது.சாமிமலை ஓயா, காட்மோர் ஓயா, சியத்தலகங்குல ஓயா, மரே ஓயா உள்ளிட்ட ஆறுகளிலும், மகாவலி கங்கை மற்றும் அதன் கிளை ஆறுகளிலும் நீர்வரத்து அதிகரித்துள்ளது.அத்துடன், கெசல்கமு ஓயாவிலும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளதுடன், மரே, மோகினி எல்ல, காட்மோர், லக்சபான, டெவன் மற்றும் சென் கிளையர் ஆகிய நீர்வீழ்ச்சிகளிலும் நீர்ப்பெருக்கு அதிகரித்துள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.இதன் காரணமாக கென்யோன் நீர்த்தேக்கத்தின் வான் கதவுகள் ஊடாகவும், விமல் சுரேந்திர நீர்த்தேக்கத்தின் மதகுகள் ஊடாகவும் நீர் வெளியேற்றப்படுகிறது.எனவே, களனி கங்கை மற்றும் மகாவலி கங்கையின் கரையோரப் பகுதிகளில் வசிக்கும் மக்கள் மிகுந்த அவதானத்துடன் இருக்குமாறு நுவரெலியா மாவட்ட அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் அறிவுறுத்தியுள்ளது.

Advertisement

Advertisement

Advertisement