அம்பாந்தோட்டை, வீரவில திறந்தவெளி சிறைச்சாலையில் புனர்வாழ்வு பெற்று வந்த கைதியொருவர் எதிர்பாராத விதமாக உயிரிழந்துள்ளார்.
சிறைச்சாலை வளாகத்தில் துப்புரவுப் பணியில் ஈடுபட்டிருந்தபோது, அங்கு சுதந்திரமாக நடமாடிய மான் ஒன்று அவரைத் தாக்கியுள்ளது.
இதில் படுகாயமடைந்த அவர், உடனடியாக தெம்பரகவெவ வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
ஆனால், அங்கு சிகிச்சை பலனின்றி அவர் உயிரிழந்துள்ளார்.
உயிரிழந்தவர் வரபலான பகுதியைச் சேர்ந்த 30 வயதுடையவர் எனத் தெரிவிக்கப்படுகிறது.
அவரது சடலம் தெம்பரகவெவ வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளதுடன், இன்று (09) பிரேத பரிசோதனை முன்னெடுக்கப்படவுள்ளது.
சம்பவம் தொடர்பில் வீரவில பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
துப்புரவுப் பணியில் ஈடுபட்ட கைதிக்கு நேர்ந்த துயரம் அம்பாந்தோட்டையில் அதிர்ச்சி சம்பவம் அம்பாந்தோட்டை, வீரவில திறந்தவெளி சிறைச்சாலையில் புனர்வாழ்வு பெற்று வந்த கைதியொருவர் எதிர்பாராத விதமாக உயிரிழந்துள்ளார்.சிறைச்சாலை வளாகத்தில் துப்புரவுப் பணியில் ஈடுபட்டிருந்தபோது, அங்கு சுதந்திரமாக நடமாடிய மான் ஒன்று அவரைத் தாக்கியுள்ளது.இதில் படுகாயமடைந்த அவர், உடனடியாக தெம்பரகவெவ வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.ஆனால், அங்கு சிகிச்சை பலனின்றி அவர் உயிரிழந்துள்ளார்.உயிரிழந்தவர் வரபலான பகுதியைச் சேர்ந்த 30 வயதுடையவர் எனத் தெரிவிக்கப்படுகிறது.அவரது சடலம் தெம்பரகவெவ வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளதுடன், இன்று (09) பிரேத பரிசோதனை முன்னெடுக்கப்படவுள்ளது.சம்பவம் தொடர்பில் வீரவில பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.