• Nov 14 2026

தமிழீழ விடுதலை இயக்க அமைப்பாளர் மீது 3:30 மணி நேரம் பயங்கரவாத தடுப்பு பிரிவு விசாரணை

Aathira / Nov 9th 2026, 8:04 pm
image

கிளிநொச்சி மாவட்ட தமிழீழ விடுதலை இயக்க அமைப்பாளர் கனகசபை  கணேசகுமாரன்  மீது 3:30 மணி நேரம் யாழ்ப்பாணம் பயங்கரவாத தடுப்பு பிரிவினரால்  விசாரணைக்கு உட்படுத்தப்பட்டுள்ளார்.

யாழ்ப்பாணம் - வல்வெட்டித்துறையில் அமைந்துள்ள கூட்டிமணி தங்கத்துரை ஆகியோர்களுக்கு சிலை அமைப்பது தொடர்பாகவே மூன்றரை மணிநேரம் விசாரணைக்கு உட்படுத்தப்பட்டுள்ளதாகவும்,  இதில் குட்டிமணி, தங்கத்துரை ஆகியோரது சிலை அமைப்பதற்கு நிதி எவ்வாறு கிடைத்தது என்பது தொடர்பாகவும்,  

யார் யார் எவ்வளவு நிதியுதவி வழங்கினார்கள் என்றுமே தன்னிடம் விசாரணை மேற்கொண்டதாகவும்,  கிளிநொச்சி மாவட்ட தமிழீழ விடுதலை இயக்க அமைப்பாளர்  (telo) கனகசபை  கணேசகுமாரன்  தெரிவித்தார்.

குட்டிமணி தங்கத்துரை ஆகியோரது சிலைகளை வல்வெட்டித்துறையில் நிறுவுவதற்கு கடந்த 2026/07/25 ம் திகதி ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டிருந்த நிலையில்  அதற்கு முதல் நாள்  வல்வெட்டித் துறை போலீசாரல் சிலை நிறுவுவதற்கு எதிராக தடை உத்தரவு கோரி பொதுத் தொல்லை சட்டத்தின் கீழ் பருத்தித்துறை நீதவான் நீதிமன்றில் வழக்கு தாக்கல் செய்யப்பட்டநிலையில் அவ் வழக்கு தள்ளுபடி செய்யப்பட்டிருந்தது.

எனினும் கிளிநொச்சியில் சிலை செய்யப்பட்டதனால்  சிலையை கிளிநொச்சி போலீசார் கைப்பற்றி வைத்துள்ளமையால் குறித்த சிலை இன்னும் நிறுவப்படாதுள்ள நிலையில் சிலை நிறுவும் பிரதான ஏற்பாட்டாளர் மீது கிளிநொச்சி நீதிமன்றில் வழக்கு தொடரப்பட்டிருந்ததுடன் பயங்கரவாத தடுப்பு மற்றும் விசாரணை பிரிவினரால் விசாரணைக்கு உட்படுத்தப்பட்டார். 

இந் நிலையில் கிளிநொச்சி மாவட்ட தமிழீழ விடுதலை இயக்க அமைப்பாளர் கனகசபை  கணேசகுமார் இன்று யாழ்ப்பாணம் பயங்கரவாத தடுப்பு பிரிவினாரால் விசாரணைக்கு உட்படுத்தப்பட்டுள்ளார்.

தமிழீழ விடுதலை இயக்க அமைப்பாளர் மீது 3:30 மணி நேரம் பயங்கரவாத தடுப்பு பிரிவு விசாரணை கிளிநொச்சி மாவட்ட தமிழீழ விடுதலை இயக்க அமைப்பாளர் கனகசபை  கணேசகுமாரன்  மீது 3:30 மணி நேரம் யாழ்ப்பாணம் பயங்கரவாத தடுப்பு பிரிவினரால்  விசாரணைக்கு உட்படுத்தப்பட்டுள்ளார்.யாழ்ப்பாணம் - வல்வெட்டித்துறையில் அமைந்துள்ள கூட்டிமணி தங்கத்துரை ஆகியோர்களுக்கு சிலை அமைப்பது தொடர்பாகவே மூன்றரை மணிநேரம் விசாரணைக்கு உட்படுத்தப்பட்டுள்ளதாகவும்,  இதில் குட்டிமணி, தங்கத்துரை ஆகியோரது சிலை அமைப்பதற்கு நிதி எவ்வாறு கிடைத்தது என்பது தொடர்பாகவும்,  யார் யார் எவ்வளவு நிதியுதவி வழங்கினார்கள் என்றுமே தன்னிடம் விசாரணை மேற்கொண்டதாகவும்,  கிளிநொச்சி மாவட்ட தமிழீழ விடுதலை இயக்க அமைப்பாளர்  (telo) கனகசபை  கணேசகுமாரன்  தெரிவித்தார்.குட்டிமணி தங்கத்துரை ஆகியோரது சிலைகளை வல்வெட்டித்துறையில் நிறுவுவதற்கு கடந்த 2026/07/25 ம் திகதி ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டிருந்த நிலையில்  அதற்கு முதல் நாள்  வல்வெட்டித் துறை போலீசாரல் சிலை நிறுவுவதற்கு எதிராக தடை உத்தரவு கோரி பொதுத் தொல்லை சட்டத்தின் கீழ் பருத்தித்துறை நீதவான் நீதிமன்றில் வழக்கு தாக்கல் செய்யப்பட்டநிலையில் அவ் வழக்கு தள்ளுபடி செய்யப்பட்டிருந்தது.எனினும் கிளிநொச்சியில் சிலை செய்யப்பட்டதனால்  சிலையை கிளிநொச்சி போலீசார் கைப்பற்றி வைத்துள்ளமையால் குறித்த சிலை இன்னும் நிறுவப்படாதுள்ள நிலையில் சிலை நிறுவும் பிரதான ஏற்பாட்டாளர் மீது கிளிநொச்சி நீதிமன்றில் வழக்கு தொடரப்பட்டிருந்ததுடன் பயங்கரவாத தடுப்பு மற்றும் விசாரணை பிரிவினரால் விசாரணைக்கு உட்படுத்தப்பட்டார். இந் நிலையில் கிளிநொச்சி மாவட்ட தமிழீழ விடுதலை இயக்க அமைப்பாளர் கனகசபை  கணேசகுமார் இன்று யாழ்ப்பாணம் பயங்கரவாத தடுப்பு பிரிவினாரால் விசாரணைக்கு உட்படுத்தப்பட்டுள்ளார்.

Advertisement

Advertisement

Advertisement