• Aug 12 2026

கடும் காற்று, சீறும் கடல்! நாளை வரை தொடரும் ஆபத்து

Chithra / Aug 12th 2026, 3:45 pm
image


நாட்டைச் சூழவுள்ள சில கடற்பரப்புகளில் பலத்த காற்று மற்றும் கடல் கொந்தளிப்பு நிலைமை ஏற்படக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் எச்சரிக்கை விடுத்துள்ளது.


வளிமண்டலவியல் திணைக்களத்தின் இயற்கை அனர்த்தங்கள் பற்றிய முன்னெச்சரிக்கை மத்திய நிலையத்தினால் இன்று (12) நண்பகல் இந்த எச்சரிக்கை அறிவித்தல் வெளியிடப்பட்டுள்ளது. குறித்த அறிவித்தல் நாளை (13) நண்பகல் 12.00 மணி வரை 24 மணித்தியாலங்களுக்கு செல்லுபடியாகும்.


இதன்படி, மாத்தறையிலிருந்து ஹம்பாந்தோட்டை ஊடாக பொத்துவில் வரையிலான கடற்கரைக்கு அப்பாலான கடற்பரப்புகளிலும், சிலாபத்திலிருந்து புத்தளம் மற்றும் மன்னார் ஊடாக காங்கேசன்துறை வரையிலான கடற்கரைக்கு அப்பாலான கடற்பரப்புகளிலும் மிகுந்த அவதானத்துடன் செயற்படுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.


குறித்த கடற்பரப்புகளில் காற்றின் வேகம் அவ்வப்போது மணித்தியாலத்திற்கு 50 கிலோமீற்றர் வரை அதிகரிக்கக்கூடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.


மேலும், இந்தக் கடற்பரப்புகள் அவ்வப்போது கொந்தளிப்பான தன்மையைக் கொண்டிருக்கக்கூடும் எனவும் வளிமண்டலவியல் திணைக்களம் சுட்டிக்காட்டியுள்ளது.


நிலவும் பலத்த காற்று மற்றும் கடல் கொந்தளிப்பு காரணமாக, குறித்த கடற்பரப்புகளில் மீன்பிடி மற்றும் கடற்பயண நடவடிக்கைகளில் ஈடுபடும் மக்கள் மிகுந்த அவதானத்துடனும் விழிப்புடனும் செயற்படுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.


கடும் காற்று, சீறும் கடல் நாளை வரை தொடரும் ஆபத்து நாட்டைச் சூழவுள்ள சில கடற்பரப்புகளில் பலத்த காற்று மற்றும் கடல் கொந்தளிப்பு நிலைமை ஏற்படக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் எச்சரிக்கை விடுத்துள்ளது.வளிமண்டலவியல் திணைக்களத்தின் இயற்கை அனர்த்தங்கள் பற்றிய முன்னெச்சரிக்கை மத்திய நிலையத்தினால் இன்று (12) நண்பகல் இந்த எச்சரிக்கை அறிவித்தல் வெளியிடப்பட்டுள்ளது. குறித்த அறிவித்தல் நாளை (13) நண்பகல் 12.00 மணி வரை 24 மணித்தியாலங்களுக்கு செல்லுபடியாகும்.இதன்படி, மாத்தறையிலிருந்து ஹம்பாந்தோட்டை ஊடாக பொத்துவில் வரையிலான கடற்கரைக்கு அப்பாலான கடற்பரப்புகளிலும், சிலாபத்திலிருந்து புத்தளம் மற்றும் மன்னார் ஊடாக காங்கேசன்துறை வரையிலான கடற்கரைக்கு அப்பாலான கடற்பரப்புகளிலும் மிகுந்த அவதானத்துடன் செயற்படுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.குறித்த கடற்பரப்புகளில் காற்றின் வேகம் அவ்வப்போது மணித்தியாலத்திற்கு 50 கிலோமீற்றர் வரை அதிகரிக்கக்கூடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.மேலும், இந்தக் கடற்பரப்புகள் அவ்வப்போது கொந்தளிப்பான தன்மையைக் கொண்டிருக்கக்கூடும் எனவும் வளிமண்டலவியல் திணைக்களம் சுட்டிக்காட்டியுள்ளது.நிலவும் பலத்த காற்று மற்றும் கடல் கொந்தளிப்பு காரணமாக, குறித்த கடற்பரப்புகளில் மீன்பிடி மற்றும் கடற்பயண நடவடிக்கைகளில் ஈடுபடும் மக்கள் மிகுந்த அவதானத்துடனும் விழிப்புடனும் செயற்படுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.

Advertisement

Advertisement

Advertisement