• Aug 13 2026

மாகாண சபைகளுக்கான நிதி ஒதுக்கீடு கணிசமாக அதிகரிப்பு: மட்டக்களப்பு நாடாளுமன்ற உறுப்பினர் கந்தசாமி பிரபு பெருமிதம்!

Tamil nila / Aug 12th 2026, 6:32 pm
image

கடந்த காலத்தில் நாட்டை ஆட்சி செய்தவர்கள் மாகாண சபைகளுக்கான நிதி ஒதுக்கீடுகளைக் மிகக் குறைந்த அளவிலேயே வழங்கி வந்தனர்; ஆனால், தேசிய மக்கள் சக்தி அரசாங்கம் ஆட்சிப் பொறுப்பேற்ற பின்னர், எவ்வித தங்குதடையுமின்றி மாகாண சபைகளுக்கான நிதி தாராளமாக விடுவிக்கப்பட்டு வருகிறது என மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் கந்தசாமி பிரபு தெரிவித்துள்ளார்.

மட்டக்களப்பு, ஓந்தாச்சிமடத்தில் 27 மில்லியன் ரூபாய் செலவில் புதிதாக நிர்மாணிக்கப்பட்ட ஆயுர்வேத வைத்தியசாலை விடுதிக் கட்டடத்தை திறந்து வைத்து உரையாற்றுகையிலேயே அவர் இதனைக் குறிப்பிட்டார்.

நிகழ்வில் தொடர்ந்து உரையாற்றிய அவர் தெரிவித்ததாவது:

"2025-ஆம் ஆண்டைக் காட்டிலும் 2026-ஆம் ஆண்டில் கிழக்கு மாகாண சபைக்கு அதிக நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. வரவிருக்கும் 2027-ஆம் ஆண்டில் இந்த தொகையை மேலும் உயர்த்த நாம் தயாராக உள்ளோம்.

முறையான பொருளாதாரக் கட்டமைப்பு, அதிகரித்த அரசு வருவாய் மற்றும் சரியான நிதி முகாமைத்துவம் ஆகியவற்றின் மூலமே இந்த சாதனை சாத்தியமாகியுள்ளது. இவ்வாறாகப் பெறப்படும் நிதிகள் கல்வி, சுகாதாரம் மற்றும் உட்கட்டமைப்பு மேம்பாட்டிற்குத் தாராளமாகப் பயன்படுத்தப்பட்டு வருகின்றன."

நவீன ஆங்கில மருத்துவம் வளர்ந்திருந்தாலும், பொதுமக்கள் பாரம்பரிய சுதேச மருத்துவத்தின் மீது இன்றும் அதிக நம்பிக்கை வைத்துள்ளனர். மக்களின் இந்த ஆர்வத்திற்கு ஏற்ப, மருத்துவர்களும் சிறப்பாகப் பணியாற்றி வருகின்றனர். கிழக்கு மாகாண ஆளுநரின் வழிகாட்டுதலில் பாடசாலைக் கட்டடங்கள், வீதி அபிவிருத்தி மற்றும் வைத்தியசாலைகளின் தேவைகள் ஒவ்வொன்றாகப் பூர்த்தி செய்யப்பட்டு வருகின்றன.

மண்முனை தென் எருவில் பற்று பிரதேச சபை அரசாங்கத்தின் சட்ட திட்டங்களைச் சரியாகப் பின்பற்றி மாதிரிச் சபையாகச் செயல்படுகிறது. கட்சி பேதங்களைக் கடந்து மக்கள் சேவை ஆற்றிவரும் அதன் தவிசாளர், சபையிடம் உள்ள நிதியைப் பயன்படுத்தி அப்பகுதி மக்களுக்கு மேலும் பல அபிவிருத்தித் திட்டங்களை விரைந்து முன்னெடுக்க வேண்டும் என்றும் அவர் கேட்டுக்கொண்டார்.

மாகாண சபைகளுக்கான நிதி ஒதுக்கீடு கணிசமாக அதிகரிப்பு: மட்டக்களப்பு நாடாளுமன்ற உறுப்பினர் கந்தசாமி பிரபு பெருமிதம் கடந்த காலத்தில் நாட்டை ஆட்சி செய்தவர்கள் மாகாண சபைகளுக்கான நிதி ஒதுக்கீடுகளைக் மிகக் குறைந்த அளவிலேயே வழங்கி வந்தனர்; ஆனால், தேசிய மக்கள் சக்தி அரசாங்கம் ஆட்சிப் பொறுப்பேற்ற பின்னர், எவ்வித தங்குதடையுமின்றி மாகாண சபைகளுக்கான நிதி தாராளமாக விடுவிக்கப்பட்டு வருகிறது என மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் கந்தசாமி பிரபு தெரிவித்துள்ளார்.மட்டக்களப்பு, ஓந்தாச்சிமடத்தில் 27 மில்லியன் ரூபாய் செலவில் புதிதாக நிர்மாணிக்கப்பட்ட ஆயுர்வேத வைத்தியசாலை விடுதிக் கட்டடத்தை திறந்து வைத்து உரையாற்றுகையிலேயே அவர் இதனைக் குறிப்பிட்டார்.நிகழ்வில் தொடர்ந்து உரையாற்றிய அவர் தெரிவித்ததாவது:"2025-ஆம் ஆண்டைக் காட்டிலும் 2026-ஆம் ஆண்டில் கிழக்கு மாகாண சபைக்கு அதிக நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. வரவிருக்கும் 2027-ஆம் ஆண்டில் இந்த தொகையை மேலும் உயர்த்த நாம் தயாராக உள்ளோம்.முறையான பொருளாதாரக் கட்டமைப்பு, அதிகரித்த அரசு வருவாய் மற்றும் சரியான நிதி முகாமைத்துவம் ஆகியவற்றின் மூலமே இந்த சாதனை சாத்தியமாகியுள்ளது. இவ்வாறாகப் பெறப்படும் நிதிகள் கல்வி, சுகாதாரம் மற்றும் உட்கட்டமைப்பு மேம்பாட்டிற்குத் தாராளமாகப் பயன்படுத்தப்பட்டு வருகின்றன."நவீன ஆங்கில மருத்துவம் வளர்ந்திருந்தாலும், பொதுமக்கள் பாரம்பரிய சுதேச மருத்துவத்தின் மீது இன்றும் அதிக நம்பிக்கை வைத்துள்ளனர். மக்களின் இந்த ஆர்வத்திற்கு ஏற்ப, மருத்துவர்களும் சிறப்பாகப் பணியாற்றி வருகின்றனர். கிழக்கு மாகாண ஆளுநரின் வழிகாட்டுதலில் பாடசாலைக் கட்டடங்கள், வீதி அபிவிருத்தி மற்றும் வைத்தியசாலைகளின் தேவைகள் ஒவ்வொன்றாகப் பூர்த்தி செய்யப்பட்டு வருகின்றன.மண்முனை தென் எருவில் பற்று பிரதேச சபை அரசாங்கத்தின் சட்ட திட்டங்களைச் சரியாகப் பின்பற்றி மாதிரிச் சபையாகச் செயல்படுகிறது. கட்சி பேதங்களைக் கடந்து மக்கள் சேவை ஆற்றிவரும் அதன் தவிசாளர், சபையிடம் உள்ள நிதியைப் பயன்படுத்தி அப்பகுதி மக்களுக்கு மேலும் பல அபிவிருத்தித் திட்டங்களை விரைந்து முன்னெடுக்க வேண்டும் என்றும் அவர் கேட்டுக்கொண்டார்.

Advertisement

Advertisement

Advertisement