ஜனாதிபதி நிதியத்திலிருந்து உரிய நேரத்தில் நிதி ஒதுக்கீடுகள் கிடைக்காததன் காரணமாக, 25,000க்கும் மேற்பட்ட இதய அறுவை சிகிச்சைகளுக்கான காத்திருப்போர் பட்டியல் முடங்கியுள்ளதாக வைத்திய மற்றும் சிவில் உரிமைகளுக்கான வைத்தியர்களின் தொழிற்சங்க கூட்டமைப்பின் தலைவர் விசேட வைத்திய நிபுணர் சமல் சஞ்சீவ தெரிவித்துள்ளார்.
கொழும்பில் இன்று (12) ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும்போதே அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.
இதய அறுவை சிகிச்சைகளுக்கான நீண்டகால காத்திருப்போர் பட்டியலைக் குறைப்பதற்காக ஜனாதிபதி நிதியத்திலிருந்து நிதி ஒதுக்கப்படும் என அறிவிக்கப்பட்டிருந்த போதிலும், அந்தத் திட்டம் இதுவரை நடைமுறைக்கு வரவில்லை என அவர் குறிப்பிட்டுள்ளார்.
ஏழை நோயாளிகளுக்காக ஜனாதிபதி நிதியத்திலிருந்து ஒதுக்கப்படும் நிதியை அதிகரிப்பதன் மூலம், அரச வைத்தியசாலைகளில் காத்திருப்போர் பட்டியலில் உள்ள நோயாளிகளுக்கு நிர்ணயிக்கப்பட்ட கட்டணங்களின் அடிப்படையில் தனியார் வைத்தியசாலைகளில் இதய அறுவை சிகிச்சைகளை மேற்கொள்ள வாய்ப்பு ஏற்படுத்த முடியும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
மேலும், அரச வைத்தியசாலைகளில் நாளாந்தம் மேற்கொள்ளப்படும் அறுவை சிகிச்சைகளின் எண்ணிக்கையை அதிகரிப்பதற்காக வைத்தியர்கள் மற்றும் சுகாதாரப் பணியாளர்களுக்கு முறையான கொடுப்பனவுகளை வழங்கி மேலதிக சேவைகளைப் பெற்றுக்கொள்வதன் மூலமும் இந்த நெருக்கடியைத் தணிக்க முடியும் என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
தற்போதைய நிலைமை காரணமாக இதய அறுவை சிகிச்சைகளுக்கான காத்திருப்போர் பட்டியல் 2029ஆம் ஆண்டு வரையிலும் நீண்டுள்ளதாகவும், இதய சிகிச்சைகள் மாத்திரமன்றி சிறுநீரக மற்றும் ஏனைய உறுப்பு மாற்று அறுவை சிகிச்சைகளுக்கான காத்திருப்போர் பட்டியலிலும் நோயாளிகளின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருவதாகவும் விசேட வைத்திய நிபுணர் சமல் சஞ்சீவ தெரிவித்துள்ளார்.
இதன் காரணமாக நாட்டின் ஒட்டுமொத்த சுகாதாரக் கட்டமைப்பும் கடுமையான பணிச்சுமை மற்றும் அழுத்தத்திற்கு உள்ளாகியுள்ளதாக அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.
25,000க்கும் மேற்பட்டோர் இதய அறுவை சிகிச்சைகளுக்கு காத்திருப்பு – ஜனாதிபதி நிதி ஒதுக்கீட்டில் தாமதம் ஜனாதிபதி நிதியத்திலிருந்து உரிய நேரத்தில் நிதி ஒதுக்கீடுகள் கிடைக்காததன் காரணமாக, 25,000க்கும் மேற்பட்ட இதய அறுவை சிகிச்சைகளுக்கான காத்திருப்போர் பட்டியல் முடங்கியுள்ளதாக வைத்திய மற்றும் சிவில் உரிமைகளுக்கான வைத்தியர்களின் தொழிற்சங்க கூட்டமைப்பின் தலைவர் விசேட வைத்திய நிபுணர் சமல் சஞ்சீவ தெரிவித்துள்ளார்.கொழும்பில் இன்று (12) ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும்போதே அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.இதய அறுவை சிகிச்சைகளுக்கான நீண்டகால காத்திருப்போர் பட்டியலைக் குறைப்பதற்காக ஜனாதிபதி நிதியத்திலிருந்து நிதி ஒதுக்கப்படும் என அறிவிக்கப்பட்டிருந்த போதிலும், அந்தத் திட்டம் இதுவரை நடைமுறைக்கு வரவில்லை என அவர் குறிப்பிட்டுள்ளார்.ஏழை நோயாளிகளுக்காக ஜனாதிபதி நிதியத்திலிருந்து ஒதுக்கப்படும் நிதியை அதிகரிப்பதன் மூலம், அரச வைத்தியசாலைகளில் காத்திருப்போர் பட்டியலில் உள்ள நோயாளிகளுக்கு நிர்ணயிக்கப்பட்ட கட்டணங்களின் அடிப்படையில் தனியார் வைத்தியசாலைகளில் இதய அறுவை சிகிச்சைகளை மேற்கொள்ள வாய்ப்பு ஏற்படுத்த முடியும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.மேலும், அரச வைத்தியசாலைகளில் நாளாந்தம் மேற்கொள்ளப்படும் அறுவை சிகிச்சைகளின் எண்ணிக்கையை அதிகரிப்பதற்காக வைத்தியர்கள் மற்றும் சுகாதாரப் பணியாளர்களுக்கு முறையான கொடுப்பனவுகளை வழங்கி மேலதிக சேவைகளைப் பெற்றுக்கொள்வதன் மூலமும் இந்த நெருக்கடியைத் தணிக்க முடியும் என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.தற்போதைய நிலைமை காரணமாக இதய அறுவை சிகிச்சைகளுக்கான காத்திருப்போர் பட்டியல் 2029ஆம் ஆண்டு வரையிலும் நீண்டுள்ளதாகவும், இதய சிகிச்சைகள் மாத்திரமன்றி சிறுநீரக மற்றும் ஏனைய உறுப்பு மாற்று அறுவை சிகிச்சைகளுக்கான காத்திருப்போர் பட்டியலிலும் நோயாளிகளின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருவதாகவும் விசேட வைத்திய நிபுணர் சமல் சஞ்சீவ தெரிவித்துள்ளார்.இதன் காரணமாக நாட்டின் ஒட்டுமொத்த சுகாதாரக் கட்டமைப்பும் கடுமையான பணிச்சுமை மற்றும் அழுத்தத்திற்கு உள்ளாகியுள்ளதாக அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.