• Aug 13 2026

நிலத் தகராறில் பெண்ணின் காதைக் கடித்த நபர் - நீதி கிடைக்கவில்லை என குற்றச்சாட்டு

Chithra / Aug 12th 2026, 1:32 pm
image


நுவரெலியா – சீத்தாஎலிய, போலகந்த பகுதியில் நிலத் தகராறு காரணமாகப் பெண்ணொருவரின் காதைக் கடித்த நபருக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கத் தவறியதாக நுவரெலியா பொலிஸார் மீது குற்றச்சாட்டு எழுந்துள்ள நிலையில், சம்பவம் தொடர்பில் இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழு நுவரெலியா பிரதேச செயலாளருக்கு பரிந்துரைகளை அனுப்பியுள்ளது.


சீத்தாஎலிய பகுதியைச் சேர்ந்த நோனா பட்டோன் என்பவரின் காணிக்கு முன்பாக உள்ள பாதையைப் பயன்படுத்துவது தொடர்பாக, கடந்த மார்ச் 4ஆம் திகதி அயல் வீட்டாருடன் ஏற்பட்ட தகராறின்போது அவரது காது கடிக்கப்பட்டு காயமடைந்ததாக தெரிவிக்கப்படுகிறது.


சம்பவம் தொடர்பில் நுவரெலியா பொலிஸில் முறைப்பாடு செய்யப்பட்டிருந்த போதிலும், பொலிஸாரும் கிராம உத்தியோகத்தரும் ஒருதலைப்பட்சமாகச் செயற்பட்டு, மத அடிப்படையில் பாரபட்சம் காட்டி சந்தேகநபருக்கு ஆதரவாக நடந்துகொண்டதாக பாதிக்கப்பட்ட தரப்பு குற்றஞ்சாட்டியுள்ளது.


இதனைத் தொடர்ந்து ‘United Human Rights Organization’ அமைப்பினால் இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவில் முறைப்பாடு தாக்கல் செய்யப்பட்டது.


குறித்த முறைப்பாட்டை விசாரணை செய்த மனித உரிமைகள் ஆணைக்குழு, 1996ஆம் ஆண்டு 21ஆம் இலக்க மனித உரிமைகள் ஆணைக்குழுச் சட்டத்தின் கீழ் நுவரெலியா பொலிஸார் மற்றும் சம்பந்தப்பட்ட அதிகாரிகளின் அணுகுமுறை தொடர்பில் பரிந்துரைகளை முன்வைத்து, கடந்த ஜூலை 31ஆம் திகதி நுவரெலியா பிரதேச செயலாளருக்கு கடிதம் அனுப்பியுள்ளது.


சம்பவம் இடம்பெற்று ஆறு மாதங்கள் நெருங்கியுள்ள நிலையிலும் பாதிக்கப்பட்ட பெண்ணுக்கு இதுவரை நீதி கிடைக்கவில்லை என மனித உரிமைகள் அமைப்பின் பணிப்பாளர் பிரணீதா வர்ணகுலசூரிய தெரிவித்துள்ளார்.


அரச அதிகாரிகள் எந்தவித மதப் பாகுபாடுமின்றி வெளிப்படையானதும் நியாயமானதுமான விசாரணைகளை முன்னெடுத்து, பாதிக்கப்பட்ட பெண்ணுக்கு உடனடியாக நீதியைப் பெற்றுத்தர வேண்டும் என அவர் வலியுறுத்தியுள்ளார்.

நிலத் தகராறில் பெண்ணின் காதைக் கடித்த நபர் - நீதி கிடைக்கவில்லை என குற்றச்சாட்டு நுவரெலியா – சீத்தாஎலிய, போலகந்த பகுதியில் நிலத் தகராறு காரணமாகப் பெண்ணொருவரின் காதைக் கடித்த நபருக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கத் தவறியதாக நுவரெலியா பொலிஸார் மீது குற்றச்சாட்டு எழுந்துள்ள நிலையில், சம்பவம் தொடர்பில் இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழு நுவரெலியா பிரதேச செயலாளருக்கு பரிந்துரைகளை அனுப்பியுள்ளது.சீத்தாஎலிய பகுதியைச் சேர்ந்த நோனா பட்டோன் என்பவரின் காணிக்கு முன்பாக உள்ள பாதையைப் பயன்படுத்துவது தொடர்பாக, கடந்த மார்ச் 4ஆம் திகதி அயல் வீட்டாருடன் ஏற்பட்ட தகராறின்போது அவரது காது கடிக்கப்பட்டு காயமடைந்ததாக தெரிவிக்கப்படுகிறது.சம்பவம் தொடர்பில் நுவரெலியா பொலிஸில் முறைப்பாடு செய்யப்பட்டிருந்த போதிலும், பொலிஸாரும் கிராம உத்தியோகத்தரும் ஒருதலைப்பட்சமாகச் செயற்பட்டு, மத அடிப்படையில் பாரபட்சம் காட்டி சந்தேகநபருக்கு ஆதரவாக நடந்துகொண்டதாக பாதிக்கப்பட்ட தரப்பு குற்றஞ்சாட்டியுள்ளது.இதனைத் தொடர்ந்து ‘United Human Rights Organization’ அமைப்பினால் இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவில் முறைப்பாடு தாக்கல் செய்யப்பட்டது.குறித்த முறைப்பாட்டை விசாரணை செய்த மனித உரிமைகள் ஆணைக்குழு, 1996ஆம் ஆண்டு 21ஆம் இலக்க மனித உரிமைகள் ஆணைக்குழுச் சட்டத்தின் கீழ் நுவரெலியா பொலிஸார் மற்றும் சம்பந்தப்பட்ட அதிகாரிகளின் அணுகுமுறை தொடர்பில் பரிந்துரைகளை முன்வைத்து, கடந்த ஜூலை 31ஆம் திகதி நுவரெலியா பிரதேச செயலாளருக்கு கடிதம் அனுப்பியுள்ளது.சம்பவம் இடம்பெற்று ஆறு மாதங்கள் நெருங்கியுள்ள நிலையிலும் பாதிக்கப்பட்ட பெண்ணுக்கு இதுவரை நீதி கிடைக்கவில்லை என மனித உரிமைகள் அமைப்பின் பணிப்பாளர் பிரணீதா வர்ணகுலசூரிய தெரிவித்துள்ளார்.அரச அதிகாரிகள் எந்தவித மதப் பாகுபாடுமின்றி வெளிப்படையானதும் நியாயமானதுமான விசாரணைகளை முன்னெடுத்து, பாதிக்கப்பட்ட பெண்ணுக்கு உடனடியாக நீதியைப் பெற்றுத்தர வேண்டும் என அவர் வலியுறுத்தியுள்ளார்.

Advertisement

Advertisement

Advertisement