• May 03 2026

முச்சக்கர வண்டி கட்டணத்தை அதிகரிக்குமாறு கோரிக்கை

Chithra / May 3rd 2026, 3:13 pm
image

முச்சக்கர வண்டி கட்டணங்களிலும் குறிப்பிட்ட அளவு அதிகரிப்பை மேற்கொள்ள வேண்டும் என தேசிய ஒருங்கிணைந்த முச்சக்கர வண்டி சாரதிகள் மற்றும் தொழிலதிபர்கள் சங்கத்தின் பொதுச் செயலாளர் எல். ரோஹண பெரேரா தெரிவித்துள்ளார்.


பெற்றோல் விலை 12 ரூபாயினால் அதிகரித்துள்ளதால், இந்த கட்டணத் திருத்தம் அவசியமானது என அவர் குறிப்பிட்டுள்ளார்.


மேல் மாகாண வீதி பயணிகள் போக்குவரத்து அதிகாரசபையினால் முச்சக்கர வண்டி கட்டணங்கள் நிர்ணயிக்கப்படுவதால், எரிபொருள் விலை உயர்வை கவனத்தில் கொண்டு, தற்போது இரண்டாவது கிலோமீற்றருக்கு வசூலிக்கப்படும் 90 ரூபாய் கட்டணத்தை 10 ரூபாயினால் உயர்த்துமாறு தாம் கோரிக்கை விடுப்பதாக அவர் தெரிவித்தார்.


தற்போது முதல் கிலோமீற்றருக்கு 100 ரூபாயும், இரண்டாவது கிலோமீட்டருக்கு 90 ரூபாயும் வசூலிக்கப்படுகிறது. எனவே, இரண்டாவது கிலோமீற்றருக்கான கட்டணத்தையும் 100 ரூபாயாக உயர்த்துவது அத்தியாவசியமானது என அவர் சுட்டிக்காட்டினார்.


அத்துடன், முச்சக்கர வண்டி உரிமையாளர்கள் தமது வாழ்வாதாரத்தை முன்னெடுப்பதில் எரிபொருள் கட்டுப்பாடுகள் காரணமாக கடும் சிரமங்களை எதிர்நோக்குவதால், அவர்களுக்கான எரிபொருள் ஒதுக்கீட்டை  அதிகரிக்குமாறும் அவர் இதன்போது கோரிக்கை விடுத்தார்.

முச்சக்கர வண்டி கட்டணத்தை அதிகரிக்குமாறு கோரிக்கை முச்சக்கர வண்டி கட்டணங்களிலும் குறிப்பிட்ட அளவு அதிகரிப்பை மேற்கொள்ள வேண்டும் என தேசிய ஒருங்கிணைந்த முச்சக்கர வண்டி சாரதிகள் மற்றும் தொழிலதிபர்கள் சங்கத்தின் பொதுச் செயலாளர் எல். ரோஹண பெரேரா தெரிவித்துள்ளார்.பெற்றோல் விலை 12 ரூபாயினால் அதிகரித்துள்ளதால், இந்த கட்டணத் திருத்தம் அவசியமானது என அவர் குறிப்பிட்டுள்ளார்.மேல் மாகாண வீதி பயணிகள் போக்குவரத்து அதிகாரசபையினால் முச்சக்கர வண்டி கட்டணங்கள் நிர்ணயிக்கப்படுவதால், எரிபொருள் விலை உயர்வை கவனத்தில் கொண்டு, தற்போது இரண்டாவது கிலோமீற்றருக்கு வசூலிக்கப்படும் 90 ரூபாய் கட்டணத்தை 10 ரூபாயினால் உயர்த்துமாறு தாம் கோரிக்கை விடுப்பதாக அவர் தெரிவித்தார்.தற்போது முதல் கிலோமீற்றருக்கு 100 ரூபாயும், இரண்டாவது கிலோமீட்டருக்கு 90 ரூபாயும் வசூலிக்கப்படுகிறது. எனவே, இரண்டாவது கிலோமீற்றருக்கான கட்டணத்தையும் 100 ரூபாயாக உயர்த்துவது அத்தியாவசியமானது என அவர் சுட்டிக்காட்டினார்.அத்துடன், முச்சக்கர வண்டி உரிமையாளர்கள் தமது வாழ்வாதாரத்தை முன்னெடுப்பதில் எரிபொருள் கட்டுப்பாடுகள் காரணமாக கடும் சிரமங்களை எதிர்நோக்குவதால், அவர்களுக்கான எரிபொருள் ஒதுக்கீட்டை  அதிகரிக்குமாறும் அவர் இதன்போது கோரிக்கை விடுத்தார்.

Advertisement

Advertisement

Advertisement