பல்லேகலை – தும்பறை சிறைச்சாலையிலிருந்து தப்பிச் செல்ல முயன்ற கைதி ஒருவர், அங்கு இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டில் உயிரிழந்துள்ளார்.
நேற்று (01) பிற்பகல் இடம்பெற்ற இந்தச் சம்பவத்தின்போது, சிறைச்சாலையின் பாதுகாப்புக் கோபுரத்தின் மீது ஏறிய கைதி, அங்கு கடமையில் இருந்த அதிகாரியின் துப்பாக்கியைப் பறிக்க முயன்றதாகத் தெரிவிக்கப்படுகிறது.
இதனையடுத்து, கைதியைக் கட்டுப்படுத்தும் நோக்கில் அதிகாரி துப்பாக்கிச் சூடு நடத்தியுள்ளார்.
சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகள் தற்போது முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.
அதிகாரியின் துப்பாக்கியைப் பறிக்க முயன்ற கைதி - அடுத்து நடந்த விபரீதம் பல்லேகலை – தும்பறை சிறைச்சாலையிலிருந்து தப்பிச் செல்ல முயன்ற கைதி ஒருவர், அங்கு இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டில் உயிரிழந்துள்ளார்.நேற்று (01) பிற்பகல் இடம்பெற்ற இந்தச் சம்பவத்தின்போது, சிறைச்சாலையின் பாதுகாப்புக் கோபுரத்தின் மீது ஏறிய கைதி, அங்கு கடமையில் இருந்த அதிகாரியின் துப்பாக்கியைப் பறிக்க முயன்றதாகத் தெரிவிக்கப்படுகிறது.இதனையடுத்து, கைதியைக் கட்டுப்படுத்தும் நோக்கில் அதிகாரி துப்பாக்கிச் சூடு நடத்தியுள்ளார்.இதில் படுகாயமடைந்த கைதி உயிரிழந்துள்ளார்.உயிரிழந்தவர் விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த கைதி என சிறைச்சாலைகள் ஊடகப் பேச்சாளர் சேனக்க பள்ளேதென்ன தெரிவித்துள்ளார்.சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகள் தற்போது முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.