• Oct 17 2026

யாழ். மாநகர முதல்வர் மதிவதனியைச் சந்தித்தார் கியூபா தூதுவர்

Aathira / Oct 16th 2026, 11:13 am
image

இலங்கைக்கான கியூபா தூதுவர் பெட்ரிசியா லாசாரா பெகோ குவேராவுக்கும் யாழ்ப்பாணம் மாநகர முதல்வர் வி. மதிவதனிக்கும் இடையிலான உத்தியோகபூர்வ சந்திப்பு நேற்று (15) மாநகர முதல்வர் அலுவலகத்தில் நடைபெற்றது.

இதன்போது கியூபாவின் வரலாறு, தற்போதைய நிலைமை, பொருளாதாரப் பிரச்சினைகள், கல்வி மற்றும் தொழில் முயற்சிகள் தொடர்பில் தூதுவர் விளக்கமளித்தார். 

மேலும், கியூபாவின் புலமைப்பரிசில் திட்டத்தின் கீழ் மூன்று இலங்கை மாணவர்கள் அந்நாட்டுப் பல்கலைக்கழகத்தில் மருத்துவக் கல்வியைத் தொடர்ந்து வருவதாகவும் தெரிவித்தார்.

வடக்கு மாகாணத்துக்குத் தனது முதலாவது விஜயத்தை மேற்கொண்டுள்ள தூதுவரை வரவேற்ற மாநகர முதல்வர் மதிவதனி, இலங்கை மாணவர்களுக்கு கியூபா வழங்கும் கல்வி வாய்ப்புகளுக்கு நன்றி தெரிவித்தார். 

அத்துடன், கியூபா எதிர்கொள்ளும் பொருளாதார நெருக்கடிகள் குறித்து கவலை வெளியிட்டதுடன், அந்நாடு விரைவில் பொருளாதார ரீதியாக மீண்டெழ வேண்டும் எனவும் விருப்பம் தெரிவித்தார்.

இதன்போது, போர்க்காலத்தில் தமிழ் மக்கள் எதிர்கொண்ட இன்னல்கள், தற்போதைய நிலைமைகள், பொருளாதார முன்னேற்றத்தில் காணப்படும் மந்தநிலை, உரிமைகள் தொடர்பான தொடர்ச்சியான போராட்டங்கள் மற்றும் மக்களின் எதிர்பார்ப்புகள் குறித்தும் முதல்வர் தூதுவருக்கு விளக்கமளித்தார்.

இரு நாடுகளுக்கும் இடையிலான உறவுகளை மேலும் வலுப்படுத்தி, பரஸ்பரம் ஒத்துழைப்புடன் செயற்படுவது குறித்தும் கலந்துரையாடப்பட்டது. 

வடக்கு மாகாணத்துக்கான தனது முதலாவது விஜயத்தின்போது பெண் முதல்வராக மாநகர சபையை வழிநடத்தும் மதிவதனியைச் சந்தித்ததில் பெருமகிழ்ச்சி அடைவதாகத் தெரிவித்த தூதுவர், மாநகரத்துக்கான அவரது சேவைகளுக்கும் வாழ்த்துகளைத் தெரிவித்தார்.

மேலும், கியூபாவில் டெங்குக் காய்ச்சலைக் கட்டுப்படுத்துவதற்காக முன்னெடுக்கப்படும் தடுப்பு நடவடிக்கைகள் மற்றும் செயற்பாட்டு முறைகள் தொடர்பில், எதிர்காலத்தில் யாழ்ப்பாணம் மாநகர சபையின் துறைசார் அதிகாரிகள் மற்றும் உறுப்பினர்களுடன் இணையவழிக் கலந்துரையாடல்களை நடத்துவதற்கும் தீர்மானிக்கப்பட்டது.

 இதன் மூலம் யாழ்ப்பாண மாநகரப் பகுதியில் டெங்குப் பரவலைக் கட்டுப்படுத்துவதற்கான நடவடிக்கைகளை முன்னெடுப்பது குறித்தும் ஆராயப்பட்டது.

இந்தச் சந்திப்பில் மாநகரப் பிரதி முதல்வர் இ. தயாளன், மாநகர சபை உறுப்பினர்களான எஸ். கபிலன், என். எம். அப்துல்லாஹ் உள்ளிட்டோரும் கலந்துகொண்டனர்.

யாழ். மாநகர முதல்வர் மதிவதனியைச் சந்தித்தார் கியூபா தூதுவர் இலங்கைக்கான கியூபா தூதுவர் பெட்ரிசியா லாசாரா பெகோ குவேராவுக்கும் யாழ்ப்பாணம் மாநகர முதல்வர் வி. மதிவதனிக்கும் இடையிலான உத்தியோகபூர்வ சந்திப்பு நேற்று (15) மாநகர முதல்வர் அலுவலகத்தில் நடைபெற்றது.இதன்போது கியூபாவின் வரலாறு, தற்போதைய நிலைமை, பொருளாதாரப் பிரச்சினைகள், கல்வி மற்றும் தொழில் முயற்சிகள் தொடர்பில் தூதுவர் விளக்கமளித்தார். மேலும், கியூபாவின் புலமைப்பரிசில் திட்டத்தின் கீழ் மூன்று இலங்கை மாணவர்கள் அந்நாட்டுப் பல்கலைக்கழகத்தில் மருத்துவக் கல்வியைத் தொடர்ந்து வருவதாகவும் தெரிவித்தார்.வடக்கு மாகாணத்துக்குத் தனது முதலாவது விஜயத்தை மேற்கொண்டுள்ள தூதுவரை வரவேற்ற மாநகர முதல்வர் மதிவதனி, இலங்கை மாணவர்களுக்கு கியூபா வழங்கும் கல்வி வாய்ப்புகளுக்கு நன்றி தெரிவித்தார். அத்துடன், கியூபா எதிர்கொள்ளும் பொருளாதார நெருக்கடிகள் குறித்து கவலை வெளியிட்டதுடன், அந்நாடு விரைவில் பொருளாதார ரீதியாக மீண்டெழ வேண்டும் எனவும் விருப்பம் தெரிவித்தார்.இதன்போது, போர்க்காலத்தில் தமிழ் மக்கள் எதிர்கொண்ட இன்னல்கள், தற்போதைய நிலைமைகள், பொருளாதார முன்னேற்றத்தில் காணப்படும் மந்தநிலை, உரிமைகள் தொடர்பான தொடர்ச்சியான போராட்டங்கள் மற்றும் மக்களின் எதிர்பார்ப்புகள் குறித்தும் முதல்வர் தூதுவருக்கு விளக்கமளித்தார்.இரு நாடுகளுக்கும் இடையிலான உறவுகளை மேலும் வலுப்படுத்தி, பரஸ்பரம் ஒத்துழைப்புடன் செயற்படுவது குறித்தும் கலந்துரையாடப்பட்டது. வடக்கு மாகாணத்துக்கான தனது முதலாவது விஜயத்தின்போது பெண் முதல்வராக மாநகர சபையை வழிநடத்தும் மதிவதனியைச் சந்தித்ததில் பெருமகிழ்ச்சி அடைவதாகத் தெரிவித்த தூதுவர், மாநகரத்துக்கான அவரது சேவைகளுக்கும் வாழ்த்துகளைத் தெரிவித்தார்.மேலும், கியூபாவில் டெங்குக் காய்ச்சலைக் கட்டுப்படுத்துவதற்காக முன்னெடுக்கப்படும் தடுப்பு நடவடிக்கைகள் மற்றும் செயற்பாட்டு முறைகள் தொடர்பில், எதிர்காலத்தில் யாழ்ப்பாணம் மாநகர சபையின் துறைசார் அதிகாரிகள் மற்றும் உறுப்பினர்களுடன் இணையவழிக் கலந்துரையாடல்களை நடத்துவதற்கும் தீர்மானிக்கப்பட்டது. இதன் மூலம் யாழ்ப்பாண மாநகரப் பகுதியில் டெங்குப் பரவலைக் கட்டுப்படுத்துவதற்கான நடவடிக்கைகளை முன்னெடுப்பது குறித்தும் ஆராயப்பட்டது.இந்தச் சந்திப்பில் மாநகரப் பிரதி முதல்வர் இ. தயாளன், மாநகர சபை உறுப்பினர்களான எஸ். கபிலன், என். எம். அப்துல்லாஹ் உள்ளிட்டோரும் கலந்துகொண்டனர்.

Advertisement

Advertisement

Advertisement