• Oct 17 2026

ஷிரந்தி ராஜபக்சவுக்கு நீதிமன்றம் போட்ட முக்கிய தடை! வழக்கில் திடீர் திருப்பம்!

Chithra / Oct 16th 2026, 4:39 pm
image


‘சிரிலிய சவிய’ நிதியத்துடன் தொடர்புடைய நிதி முறைகேடு குற்றச்சாட்டுகளில் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவின் மனைவி ஷிரந்தி ராஜபக்சவுக்கு கொழும்பு பிரதம நீதவான் நீதிமன்றம் இன்று (16) பிணை வழங்கியுள்ளது.


கொழும்பு பிரதம நீதவான் அசங்க எஸ். போதரகம இந்த உத்தரவைப் பிறப்பித்துள்ளார்.


இதன்படி, தலா ஒரு கோடி ரூபா பெறுமதியான இரண்டு சரீரப் பிணைகளிலும், ஒரு இலட்சம் ரூபா ரொக்கப் பிணையிலும் ஷிரந்தி ராஜபக்சவை விடுவிக்க நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.


அத்துடன், அவருக்கு வெளிநாட்டுப் பயணத் தடையும் விதிக்கப்பட்டுள்ளது.


கொழும்பு தேசிய வைத்தியசாலையினால் சமர்ப்பிக்கப்பட்ட மருத்துவ அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ள விசேட விடயங்களைக் கருத்திற்கொண்டே நீதிமன்றம் இந்தத் தீர்மானத்தை எடுத்துள்ளது.


கடந்த 13ஆம் திகதி, ஷிரந்தி ராஜபக்சவுக்கு வழங்கப்பட்டு வரும் மருத்துவ சிகிச்சைகளின் முன்னேற்றம் தொடர்பான அறிக்கையை நீதிமன்றத்தில் சமர்ப்பிக்குமாறு சிறைச்சாலை அத்தியட்சகருக்கு உத்தரவிடப்பட்டிருந்தது.


இந்நிலையில், குறித்த மருத்துவ அறிக்கையைப் பரிசீலிக்க வேண்டியுள்ளதாக மேலதிக மன்றாடியார் நாயகம் திலீப பீரிஸ் தெரிவித்ததைத் தொடர்ந்து, வழக்கு இன்று பிற்பகல் ஒத்திவைக்கப்பட்டது.


பின்னர் பிற்பகல் 3 மணியளவில் வழக்கு மீண்டும் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது.


இதன்போது, ஷிரந்தி ராஜபக்ச சார்பில் முன்னிலையான ஜனாதிபதி சட்டத்தரணி அனில் சில்வா, அவரது இதயத்தின் இடது பிரதான தமனியில் 80 முதல் 90 சதவீத அடைப்பு காணப்படுவதாக நீதிமன்றத்தில் தெரிவித்தார்.


இதன் காரணமாக அவருக்கு அவசரமாக இதயப் பைபாஸ் அறுவை சிகிச்சை மேற்கொள்ள வேண்டியுள்ளதாகவும், அவரது உடல்நிலையைக் கருத்திற்கொண்டு பிணை வழங்குமாறும் அவர் கோரிக்கை விடுத்தார்.


இந்த மருத்துவக் காரணிகளைக் கவனத்தில் எடுத்த நீதிமன்றம், ஷிரந்தி ராஜபக்சவை கடுமையான பிணை நிபந்தனைகளின் கீழ் விடுவிக்க உத்தரவிட்டுள்ளது.


இதேவேளை, இந்த வழக்கின் முதலாவது சந்தேகநபரான பிரதீப் காரியவசம் ஏற்கனவே பிணையில் விடுவிக்கப்பட்டுள்ள நிலையில், அவர் இன்று திறந்த நீதிமன்றத்தில் முன்னிலையாகியிருந்தார்.


‘சிரிலிய சவிய’ அமைப்பின் ஊடாக கொழும்பு ரிஜ்வே சீமாட்டி சிறுவர் வைத்தியசாலைக்கு சி.டி. ஸ்கேன் இயந்திரம் வழங்குவதாகக் கூறி, தேசிய சேமிப்பு வங்கியிலிருந்து ஒரு கோடி ரூபா பெறப்பட்டு, அரச நிதி முறைகேடாகப் பயன்படுத்தப்பட்டதாகக் கூறப்படும் குற்றச்சாட்டுகளின் அடிப்படையில் இந்த வழக்குத் தொடரப்பட்டுள்ளது.


இந்த நிலையில், மருத்துவக் காரணங்களின் அடிப்படையில் ஷிரந்தி ராஜபக்சவுக்கு பிணை வழங்கப்பட்டுள்ள போதிலும், அவருக்கு எதிரான நிதி முறைகேடு குற்றச்சாட்டுகள் தொடர்பான வழக்கு விசாரணைகள் தொடர்ந்து முன்னெடுக்கப்படுகின்றன.

ஷிரந்தி ராஜபக்சவுக்கு நீதிமன்றம் போட்ட முக்கிய தடை வழக்கில் திடீர் திருப்பம் ‘சிரிலிய சவிய’ நிதியத்துடன் தொடர்புடைய நிதி முறைகேடு குற்றச்சாட்டுகளில் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவின் மனைவி ஷிரந்தி ராஜபக்சவுக்கு கொழும்பு பிரதம நீதவான் நீதிமன்றம் இன்று (16) பிணை வழங்கியுள்ளது.கொழும்பு பிரதம நீதவான் அசங்க எஸ். போதரகம இந்த உத்தரவைப் பிறப்பித்துள்ளார்.இதன்படி, தலா ஒரு கோடி ரூபா பெறுமதியான இரண்டு சரீரப் பிணைகளிலும், ஒரு இலட்சம் ரூபா ரொக்கப் பிணையிலும் ஷிரந்தி ராஜபக்சவை விடுவிக்க நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.அத்துடன், அவருக்கு வெளிநாட்டுப் பயணத் தடையும் விதிக்கப்பட்டுள்ளது.கொழும்பு தேசிய வைத்தியசாலையினால் சமர்ப்பிக்கப்பட்ட மருத்துவ அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ள விசேட விடயங்களைக் கருத்திற்கொண்டே நீதிமன்றம் இந்தத் தீர்மானத்தை எடுத்துள்ளது.கடந்த 13ஆம் திகதி, ஷிரந்தி ராஜபக்சவுக்கு வழங்கப்பட்டு வரும் மருத்துவ சிகிச்சைகளின் முன்னேற்றம் தொடர்பான அறிக்கையை நீதிமன்றத்தில் சமர்ப்பிக்குமாறு சிறைச்சாலை அத்தியட்சகருக்கு உத்தரவிடப்பட்டிருந்தது.இந்நிலையில், குறித்த மருத்துவ அறிக்கையைப் பரிசீலிக்க வேண்டியுள்ளதாக மேலதிக மன்றாடியார் நாயகம் திலீப பீரிஸ் தெரிவித்ததைத் தொடர்ந்து, வழக்கு இன்று பிற்பகல் ஒத்திவைக்கப்பட்டது.பின்னர் பிற்பகல் 3 மணியளவில் வழக்கு மீண்டும் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது.இதன்போது, ஷிரந்தி ராஜபக்ச சார்பில் முன்னிலையான ஜனாதிபதி சட்டத்தரணி அனில் சில்வா, அவரது இதயத்தின் இடது பிரதான தமனியில் 80 முதல் 90 சதவீத அடைப்பு காணப்படுவதாக நீதிமன்றத்தில் தெரிவித்தார்.இதன் காரணமாக அவருக்கு அவசரமாக இதயப் பைபாஸ் அறுவை சிகிச்சை மேற்கொள்ள வேண்டியுள்ளதாகவும், அவரது உடல்நிலையைக் கருத்திற்கொண்டு பிணை வழங்குமாறும் அவர் கோரிக்கை விடுத்தார்.இந்த மருத்துவக் காரணிகளைக் கவனத்தில் எடுத்த நீதிமன்றம், ஷிரந்தி ராஜபக்சவை கடுமையான பிணை நிபந்தனைகளின் கீழ் விடுவிக்க உத்தரவிட்டுள்ளது.இதேவேளை, இந்த வழக்கின் முதலாவது சந்தேகநபரான பிரதீப் காரியவசம் ஏற்கனவே பிணையில் விடுவிக்கப்பட்டுள்ள நிலையில், அவர் இன்று திறந்த நீதிமன்றத்தில் முன்னிலையாகியிருந்தார்.‘சிரிலிய சவிய’ அமைப்பின் ஊடாக கொழும்பு ரிஜ்வே சீமாட்டி சிறுவர் வைத்தியசாலைக்கு சி.டி. ஸ்கேன் இயந்திரம் வழங்குவதாகக் கூறி, தேசிய சேமிப்பு வங்கியிலிருந்து ஒரு கோடி ரூபா பெறப்பட்டு, அரச நிதி முறைகேடாகப் பயன்படுத்தப்பட்டதாகக் கூறப்படும் குற்றச்சாட்டுகளின் அடிப்படையில் இந்த வழக்குத் தொடரப்பட்டுள்ளது.இந்த நிலையில், மருத்துவக் காரணங்களின் அடிப்படையில் ஷிரந்தி ராஜபக்சவுக்கு பிணை வழங்கப்பட்டுள்ள போதிலும், அவருக்கு எதிரான நிதி முறைகேடு குற்றச்சாட்டுகள் தொடர்பான வழக்கு விசாரணைகள் தொடர்ந்து முன்னெடுக்கப்படுகின்றன.

Advertisement

Advertisement

Advertisement