• Nov 05 2026

கந்தளாயில் 5 ஏக்கர் பரப்பில் கஞ்சா வளர்க்க முற்பட்ட நபர் கைது

Aathira / Nov 4th 2026, 9:03 am
image

திருகோணமலை – கந்தளாய் திவுள்கஸ்வெவ சோமாவதி காட்டுப்பகுதியில், சுமார் ஐந்து ஏக்கர் நிலப்பரப்பில் கஞ்சா பயிர்ச்செய்கையை மேற்கொள்வதற்குத் தயாராக இருந்த நபர் ஒருவர் வனவிலங்கு அதிகாரிகளால் கைது செய்யப்பட்டுள்ளார்.

கந்தளாய் இராணுவப் புலனாய்வுப் பிரிவினருக்குக் கிடைத்த இரகசியத் தகவலையடுத்து, கந்தளாய் வனவிலங்கு அதிகாரிகளுக்கு இது தொடர்பில் அறிவிக்கப்பட்டுள்ளது.

இதனைத் தொடர்ந்து முன்னெடுக்கப்பட்ட விசேட தேடுதல் நடவடிக்கையின்போதே குறித்த சந்தேக நபர் கைது செய்யப்பட்டுள்ளார்.

இதன்போது, பயிரிடுவதற்குத் தயாரான நிலையில் இருந்த சுமார் 35 ஆயிரம் கஞ்சா செடிகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.

சோமாவதி காட்டுப்பகுதியில் சுமார் ஐந்து ஏக்கர் நிலப்பரப்பில் இந்தப் பயிர்ச்செய்கைக்கான ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டிருந்ததாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

கைது செய்யப்பட்ட சந்தேக நபர் இன்று ஹிங்குராங்கொட நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்படவுள்ளார்.

சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை கந்தளாய் வனவிலங்கு அதிகாரிகள் முன்னெடுத்து வருகின்றனர்.

 

கந்தளாயில் 5 ஏக்கர் பரப்பில் கஞ்சா வளர்க்க முற்பட்ட நபர் கைது திருகோணமலை – கந்தளாய் திவுள்கஸ்வெவ சோமாவதி காட்டுப்பகுதியில், சுமார் ஐந்து ஏக்கர் நிலப்பரப்பில் கஞ்சா பயிர்ச்செய்கையை மேற்கொள்வதற்குத் தயாராக இருந்த நபர் ஒருவர் வனவிலங்கு அதிகாரிகளால் கைது செய்யப்பட்டுள்ளார்.கந்தளாய் இராணுவப் புலனாய்வுப் பிரிவினருக்குக் கிடைத்த இரகசியத் தகவலையடுத்து, கந்தளாய் வனவிலங்கு அதிகாரிகளுக்கு இது தொடர்பில் அறிவிக்கப்பட்டுள்ளது.இதனைத் தொடர்ந்து முன்னெடுக்கப்பட்ட விசேட தேடுதல் நடவடிக்கையின்போதே குறித்த சந்தேக நபர் கைது செய்யப்பட்டுள்ளார்.இதன்போது, பயிரிடுவதற்குத் தயாரான நிலையில் இருந்த சுமார் 35 ஆயிரம் கஞ்சா செடிகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.சோமாவதி காட்டுப்பகுதியில் சுமார் ஐந்து ஏக்கர் நிலப்பரப்பில் இந்தப் பயிர்ச்செய்கைக்கான ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டிருந்ததாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.கைது செய்யப்பட்ட சந்தேக நபர் இன்று ஹிங்குராங்கொட நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்படவுள்ளார்.சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை கந்தளாய் வனவிலங்கு அதிகாரிகள் முன்னெடுத்து வருகின்றனர். 

Advertisement

Advertisement

Advertisement