• Aug 03 2026

மகாவலி கங்கையில் வெள்ள அபாயம் – 24 மணித்தியாலங்களுக்கு எச்சரிக்கை

Chithra / Aug 3rd 2026, 9:51 am
image


அடுத்த 24 மணித்தியாலங்களுக்குள் மகாவலி கங்கையை அண்மித்துள்ள பல தாழ்நிலப் பகுதிகளில் வெள்ளப்பெருக்கு ஏற்படும் அபாயம் நிலவுவதாக நீர்ப்பாசனத் திணைக்களம் தெரிவித்துள்ளது. 


​இந்த எச்சரிக்கை இன்று (04) நள்ளிரவு 12.30 மணி வரை அமுலில் இருக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது. 


​அதற்கமைய, மகாவலி கங்கையை அண்மித்துள்ள உடுநுவர, உடபலாத, யடிநுவர, கங்கஇஹல கோரள, பஸ்பாகே கோரள மற்றும் கங்கவட கோரள ஆகிய பிரதேச செயலகப் பிரிவுகளுக்குட்பட்ட தாழ்நிலப் பகுதிகளுக்கு இவ்வறிவித்தல் விடுக்கப்பட்டுள்ளது. 


​எனவே, அப்பகுதிகளில் மகாவலி கங்கையை அண்டியுள்ள மற்றும் தாழ்நிலப் பகுதிகளில் வாழும் மக்கள் மிகுந்த அவதானத்துடன் இருக்குமாறும், ஏற்படக்கூடிய வெள்ளப்பெருக்கிலிருந்து பாதுகாத்துக்கொள்ளத் தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுக்குமாறும் நீர்ப்பாசனத் திணைக்களம் கேட்டுக்கொண்டுள்ளது.  

மகாவலி கங்கையில் வெள்ள அபாயம் – 24 மணித்தியாலங்களுக்கு எச்சரிக்கை அடுத்த 24 மணித்தியாலங்களுக்குள் மகாவலி கங்கையை அண்மித்துள்ள பல தாழ்நிலப் பகுதிகளில் வெள்ளப்பெருக்கு ஏற்படும் அபாயம் நிலவுவதாக நீர்ப்பாசனத் திணைக்களம் தெரிவித்துள்ளது. ​இந்த எச்சரிக்கை இன்று (04) நள்ளிரவு 12.30 மணி வரை அமுலில் இருக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது. ​அதற்கமைய, மகாவலி கங்கையை அண்மித்துள்ள உடுநுவர, உடபலாத, யடிநுவர, கங்கஇஹல கோரள, பஸ்பாகே கோரள மற்றும் கங்கவட கோரள ஆகிய பிரதேச செயலகப் பிரிவுகளுக்குட்பட்ட தாழ்நிலப் பகுதிகளுக்கு இவ்வறிவித்தல் விடுக்கப்பட்டுள்ளது. ​எனவே, அப்பகுதிகளில் மகாவலி கங்கையை அண்டியுள்ள மற்றும் தாழ்நிலப் பகுதிகளில் வாழும் மக்கள் மிகுந்த அவதானத்துடன் இருக்குமாறும், ஏற்படக்கூடிய வெள்ளப்பெருக்கிலிருந்து பாதுகாத்துக்கொள்ளத் தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுக்குமாறும் நீர்ப்பாசனத் திணைக்களம் கேட்டுக்கொண்டுள்ளது.  

Advertisement

Advertisement

Advertisement