• Sep 22 2026

சொந்த மாவட்டங்களுக்கு இடமாற்றம் கோரி அபிவிருத்தி உத்தியோகத்தர்கள் ஆர்ப்பாட்டம்

Chithra / Sep 21st 2026, 4:17 pm
image


நியாயமான இடமாற்றத்தை வழங்குமாறு கோரி, கிழக்கு மாகாண ஆளுநர் அலுவலகத்திற்கு முன்பாக அபிவிருத்தி உத்தியோகத்தர்கள் இன்று திங்கட்கிழமை (21) காலை கவனயீர்ப்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.


2021 மற்றும் 2022ஆம் ஆண்டுகளில் திருகோணமலை மாவட்டத்தில் அபிவிருத்தி உத்தியோகத்தர்களாக நியமனம் பெற்ற தங்களுக்கு, சுமார் ஐந்து வருடங்கள் கடந்தும் சொந்த மாவட்டங்களுக்கு இடமாற்றம் வழங்கப்படவில்லை என மட்டக்களப்பு மற்றும் அம்பாறை மாவட்டங்களைச் சேர்ந்த உத்தியோகத்தர்கள் தெரிவித்தனர்.


2021 மற்றும் 2022ஆம் ஆண்டுகளில் அம்பாறை மற்றும் மட்டக்களப்பு மாவட்டங்களைச் சேர்ந்த சுமார் 500 பேருக்கு அபிவிருத்தி உத்தியோகத்தர்களாக நியமனம் வழங்கப்பட்டதாகவும், தற்போது அவர்களில் சுமார் 50 பேர் திருகோணமலையில் தொடர்ந்தும் கடமையாற்றி வருவதாகவும் அவர்கள் குறிப்பிட்டனர்.


வாழ்க்கைச் செலவு அதிகரிப்பு மற்றும் சம்பளப் பிரச்சினைகளுக்கு மத்தியில், உணவு, தங்குமிடம் மற்றும் போக்குவரத்து உள்ளிட்ட செலவுகளுக்காக தமது சம்பளத்தின் பெரும்பகுதியை செலவிட வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளதாகவும் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்கள் தெரிவித்தனர்.


மேலும், தம்மில் பெரும்பாலானோர் 40 வயதுக்கு மேற்பட்டவர்கள் எனவும், சுமார் 95 சதவீதமானோர் திருமணமானவர்கள் எனவும் அவர்கள் சுட்டிக்காட்டினர்.


சொந்த மாவட்டங்களுக்கு இடமாற்றம் வழங்குமாறு பல்வேறு சந்தர்ப்பங்களில் கோரிக்கை விடுத்த போதிலும், இதுவரை உரிய தீர்வு கிடைக்கவில்லை எனவும் அவர்கள் கவலை தெரிவித்தனர்.


இந்த நிலையில், 2027ஆம் ஆண்டுக்கான இடமாற்ற நடவடிக்கையின்போது தங்களை தங்களது சொந்த மாவட்டங்களுக்கு இடமாற்றம் செய்து தருவதற்கு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட அபிவிருத்தி உத்தியோகத்தர்கள் கோரிக்கை விடுத்தனர்.

சொந்த மாவட்டங்களுக்கு இடமாற்றம் கோரி அபிவிருத்தி உத்தியோகத்தர்கள் ஆர்ப்பாட்டம் நியாயமான இடமாற்றத்தை வழங்குமாறு கோரி, கிழக்கு மாகாண ஆளுநர் அலுவலகத்திற்கு முன்பாக அபிவிருத்தி உத்தியோகத்தர்கள் இன்று திங்கட்கிழமை (21) காலை கவனயீர்ப்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.2021 மற்றும் 2022ஆம் ஆண்டுகளில் திருகோணமலை மாவட்டத்தில் அபிவிருத்தி உத்தியோகத்தர்களாக நியமனம் பெற்ற தங்களுக்கு, சுமார் ஐந்து வருடங்கள் கடந்தும் சொந்த மாவட்டங்களுக்கு இடமாற்றம் வழங்கப்படவில்லை என மட்டக்களப்பு மற்றும் அம்பாறை மாவட்டங்களைச் சேர்ந்த உத்தியோகத்தர்கள் தெரிவித்தனர்.2021 மற்றும் 2022ஆம் ஆண்டுகளில் அம்பாறை மற்றும் மட்டக்களப்பு மாவட்டங்களைச் சேர்ந்த சுமார் 500 பேருக்கு அபிவிருத்தி உத்தியோகத்தர்களாக நியமனம் வழங்கப்பட்டதாகவும், தற்போது அவர்களில் சுமார் 50 பேர் திருகோணமலையில் தொடர்ந்தும் கடமையாற்றி வருவதாகவும் அவர்கள் குறிப்பிட்டனர்.வாழ்க்கைச் செலவு அதிகரிப்பு மற்றும் சம்பளப் பிரச்சினைகளுக்கு மத்தியில், உணவு, தங்குமிடம் மற்றும் போக்குவரத்து உள்ளிட்ட செலவுகளுக்காக தமது சம்பளத்தின் பெரும்பகுதியை செலவிட வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளதாகவும் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்கள் தெரிவித்தனர்.மேலும், தம்மில் பெரும்பாலானோர் 40 வயதுக்கு மேற்பட்டவர்கள் எனவும், சுமார் 95 சதவீதமானோர் திருமணமானவர்கள் எனவும் அவர்கள் சுட்டிக்காட்டினர்.சொந்த மாவட்டங்களுக்கு இடமாற்றம் வழங்குமாறு பல்வேறு சந்தர்ப்பங்களில் கோரிக்கை விடுத்த போதிலும், இதுவரை உரிய தீர்வு கிடைக்கவில்லை எனவும் அவர்கள் கவலை தெரிவித்தனர்.இந்த நிலையில், 2027ஆம் ஆண்டுக்கான இடமாற்ற நடவடிக்கையின்போது தங்களை தங்களது சொந்த மாவட்டங்களுக்கு இடமாற்றம் செய்து தருவதற்கு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட அபிவிருத்தி உத்தியோகத்தர்கள் கோரிக்கை விடுத்தனர்.

Advertisement

Advertisement

Advertisement