• Oct 23 2026

நெல் வயலில் மயங்கி விழுந்த காட்டு யானை – பொலித்தீன் கழிவுகளால் ஏற்பட்ட பரிதாப நிலை!

Chithra / Oct 22nd 2026, 11:15 am
image


அம்பாறை மாவட்டத்தின் சம்மாந்துறை பகுதியில் உள்ள நெல் வயலொன்றில் காட்டு யானை ஒன்று பலவீனமடைந்து எழுந்திருக்க முடியாத நிலையில் வீழ்ந்து கிடந்த சம்பவம் பெரும் கவலையை ஏற்படுத்தியுள்ளது.


கிழக்கு வனவிலங்கு மண்டலத்தின் அம்பாறை வனவிலங்கு அலுவலகத்தின் கீழ் இயங்கும் வளத்தாப்பிட்டி களப் பாதுகாப்புப் பிரிவுக்குட்பட்ட சம்மாந்துறை பிரிவு இலக்கம் 4 பகுதியில் உள்ள நெல் வயலொன்றிலேயே நேற்று (21) காலை குறித்த யானை கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.


சம்பவம் தொடர்பில் தகவலறிந்து அங்கு சென்ற வனவிலங்கு அதிகாரிகள் மேற்கொண்ட ஆரம்பகட்ட விசாரணைகளில், சுமார் 15 வயதுடைய ஆண் யானை ஒன்றே இவ்வாறு பலவீனமடைந்து வீழ்ந்துள்ளமை தெரியவந்துள்ளது.


மனிதர்களால் வீசப்படும் குப்பைகள் மற்றும் பொலித்தீன் கழிவுகளை உட்கொண்டதன் காரணமாக ஏற்பட்ட கடுமையான செரிமானக் கோளாறு மற்றும் உடல்நலப் பாதிப்பே யானையின் இந்த நிலைக்குக் காரணம் என வனவிலங்கு அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.


குறிப்பாக, யானையின் வாயினுள் ஆபத்தான பொலித்தீன் கழிவுகள் சிக்கியிருந்தமை கண்டறியப்பட்டுள்ளது.


இதனையடுத்து, சம்பவ இடத்தில் இருந்த வனவிலங்கு அதிகாரிகள் குச்சி ஒன்றின் உதவியுடன் யானையின் வாயினுள் சிக்கியிருந்த பொலித்தீன் கழிவுகளை மிகவும் அவதானமாக அகற்றியுள்ளனர்.


தொடர்ந்து, மிகவும் பலவீனமான நிலையில் காணப்படும் யானைக்கு உடல் வலிமையை மீட்டெடுக்கும் நோக்கில் பழங்கள் உள்ளிட்ட உணவுகள் வழங்கப்பட்டு வருகின்றன.


இதேவேளை, பாதிக்கப்பட்ட யானைக்கு வனவிலங்கு சுகாதாரப் பிரிவினரால் அவசர மருத்துவச் சிகிச்சைகளை வழங்குவதற்கான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். 

நெல் வயலில் மயங்கி விழுந்த காட்டு யானை – பொலித்தீன் கழிவுகளால் ஏற்பட்ட பரிதாப நிலை அம்பாறை மாவட்டத்தின் சம்மாந்துறை பகுதியில் உள்ள நெல் வயலொன்றில் காட்டு யானை ஒன்று பலவீனமடைந்து எழுந்திருக்க முடியாத நிலையில் வீழ்ந்து கிடந்த சம்பவம் பெரும் கவலையை ஏற்படுத்தியுள்ளது.கிழக்கு வனவிலங்கு மண்டலத்தின் அம்பாறை வனவிலங்கு அலுவலகத்தின் கீழ் இயங்கும் வளத்தாப்பிட்டி களப் பாதுகாப்புப் பிரிவுக்குட்பட்ட சம்மாந்துறை பிரிவு இலக்கம் 4 பகுதியில் உள்ள நெல் வயலொன்றிலேயே நேற்று (21) காலை குறித்த யானை கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.சம்பவம் தொடர்பில் தகவலறிந்து அங்கு சென்ற வனவிலங்கு அதிகாரிகள் மேற்கொண்ட ஆரம்பகட்ட விசாரணைகளில், சுமார் 15 வயதுடைய ஆண் யானை ஒன்றே இவ்வாறு பலவீனமடைந்து வீழ்ந்துள்ளமை தெரியவந்துள்ளது.மனிதர்களால் வீசப்படும் குப்பைகள் மற்றும் பொலித்தீன் கழிவுகளை உட்கொண்டதன் காரணமாக ஏற்பட்ட கடுமையான செரிமானக் கோளாறு மற்றும் உடல்நலப் பாதிப்பே யானையின் இந்த நிலைக்குக் காரணம் என வனவிலங்கு அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.குறிப்பாக, யானையின் வாயினுள் ஆபத்தான பொலித்தீன் கழிவுகள் சிக்கியிருந்தமை கண்டறியப்பட்டுள்ளது.இதனையடுத்து, சம்பவ இடத்தில் இருந்த வனவிலங்கு அதிகாரிகள் குச்சி ஒன்றின் உதவியுடன் யானையின் வாயினுள் சிக்கியிருந்த பொலித்தீன் கழிவுகளை மிகவும் அவதானமாக அகற்றியுள்ளனர்.தொடர்ந்து, மிகவும் பலவீனமான நிலையில் காணப்படும் யானைக்கு உடல் வலிமையை மீட்டெடுக்கும் நோக்கில் பழங்கள் உள்ளிட்ட உணவுகள் வழங்கப்பட்டு வருகின்றன.இதேவேளை, பாதிக்கப்பட்ட யானைக்கு வனவிலங்கு சுகாதாரப் பிரிவினரால் அவசர மருத்துவச் சிகிச்சைகளை வழங்குவதற்கான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். 

Advertisement

Advertisement

Advertisement