துறைமுகத்தில் இறக்குமதி செய்யப்படும் விலைக்கு எரிபொருள் கிடைப்பதில்லை. மின்சாரக் கட்டணத்தை 33 வீதத்தால் குறைப்போம் எனக் கூறிவிட்டு, தற்போது மீண்டும் அதனை அதிகரிக்க அரசு திட்டமிட்டுள்ளது.
இவ்வாறு எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸ குற்றம் சாட்டினார்.
பொலன்னறுவை மாவட்டம், பொலன்னறுவைத் தொகுதி, அரலகங்வில வட்டாரத்தில் இடம்பெற்ற ஐக்கிய மக்கள் சக்தியின் அங்கத்தவர் விரிவாக்க விசேட நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றும்போதே எதிர்க்கட்சித் தலைவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
அவர் மேலும் கூறுகையில்,
பயங்கரவாதத்திலிருந்து அரசைப் பாதுகாக்கும் சட்டமூலம் மற்றும் ஒழுங்கமைக்கப்பட்ட குற்றச்செயல்களைத் தடுக்கும் சட்டமூலங்களால் மக்களின் அடிப்படை உரிமைகள், பேச்சுரிமை மற்றும் ஜனநாயக உரிமைகள் மீறப்படுகின்றன.
பௌத்த மதத்துக்குரிய சிறப்பிடம் மற்றும் மதத் தலைவர்களின் காவி உடைக்குரிய மரியாதை பாதுகாக்கப்பட வேண்டும். பிக்குகளின் காவி உடையைக் களையச் செய்தமை போன்ற தவறுகளை அரசு செய்துள்ளது.
நெல்லுக்கு ரூ. 150 நிலையான விலை தருவதாகக் கூறிவிட்டு விவசாயிகளை அரசு ஏமாற்றியுள்ளது. உற்பத்திச் செலவுக்கேற்ப நியாயமான விலை கிடைக்காததால் விவசாயக் குடும்பங்கள் நிர்க்கதியில் தவிக்கின்றன.
எதிர்க்கட்சியில் இருந்தபோது அரிசி இறக்குமதியை எதிர்த்தவர்கள், தற்போது ஆட்சிக்கு வந்ததும் பல இலட்சம் மெட்ரிக் டொன் அரிசியை இறக்குமதி செய்து தரகுப் பணம் பெறுகின்றனர்.
நெதர்லாந்து போன்ற நாடுகளின் நவீன தொழில்நுட்ப முறைகளைப் பின்பற்றி, தேசிய விவசாயத் வேலைத்திட்டத்தை நடைமுறைப்படுத்தி 'ஸ்மார்ட் விவசாயியை' உருவாக்க வேண்டும் என்றார்.
மின்சாரக் கட்டணத்தை மீண்டும் உயர்த்தச் சதி - அரசு மீது எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பாய்ச்சல் துறைமுகத்தில் இறக்குமதி செய்யப்படும் விலைக்கு எரிபொருள் கிடைப்பதில்லை. மின்சாரக் கட்டணத்தை 33 வீதத்தால் குறைப்போம் எனக் கூறிவிட்டு, தற்போது மீண்டும் அதனை அதிகரிக்க அரசு திட்டமிட்டுள்ளது.இவ்வாறு எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸ குற்றம் சாட்டினார்.பொலன்னறுவை மாவட்டம், பொலன்னறுவைத் தொகுதி, அரலகங்வில வட்டாரத்தில் இடம்பெற்ற ஐக்கிய மக்கள் சக்தியின் அங்கத்தவர் விரிவாக்க விசேட நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றும்போதே எதிர்க்கட்சித் தலைவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.அவர் மேலும் கூறுகையில்,பயங்கரவாதத்திலிருந்து அரசைப் பாதுகாக்கும் சட்டமூலம் மற்றும் ஒழுங்கமைக்கப்பட்ட குற்றச்செயல்களைத் தடுக்கும் சட்டமூலங்களால் மக்களின் அடிப்படை உரிமைகள், பேச்சுரிமை மற்றும் ஜனநாயக உரிமைகள் மீறப்படுகின்றன.பௌத்த மதத்துக்குரிய சிறப்பிடம் மற்றும் மதத் தலைவர்களின் காவி உடைக்குரிய மரியாதை பாதுகாக்கப்பட வேண்டும். பிக்குகளின் காவி உடையைக் களையச் செய்தமை போன்ற தவறுகளை அரசு செய்துள்ளது.நெல்லுக்கு ரூ. 150 நிலையான விலை தருவதாகக் கூறிவிட்டு விவசாயிகளை அரசு ஏமாற்றியுள்ளது. உற்பத்திச் செலவுக்கேற்ப நியாயமான விலை கிடைக்காததால் விவசாயக் குடும்பங்கள் நிர்க்கதியில் தவிக்கின்றன.எதிர்க்கட்சியில் இருந்தபோது அரிசி இறக்குமதியை எதிர்த்தவர்கள், தற்போது ஆட்சிக்கு வந்ததும் பல இலட்சம் மெட்ரிக் டொன் அரிசியை இறக்குமதி செய்து தரகுப் பணம் பெறுகின்றனர்.நெதர்லாந்து போன்ற நாடுகளின் நவீன தொழில்நுட்ப முறைகளைப் பின்பற்றி, தேசிய விவசாயத் வேலைத்திட்டத்தை நடைமுறைப்படுத்தி 'ஸ்மார்ட் விவசாயியை' உருவாக்க வேண்டும் என்றார்.