• Oct 31 2026

மூதூர் பொது விளையாட்டு மைதான அபிவிருத்திக்கு 2 மில்லியன் ஒதுக்கீடு!

Ziya / Oct 31st 2026, 9:36 am
image

திருகோணமலை மாவட்டத்தின் 11 பிரதேச செயலகப் பிரிவுகளிலும் சகல அடிப்படை வசதிகளையும் கொண்ட தலா ஒரு பொது விளையாட்டு மைதானத்தை அமைப்பதற்கு அரசாங்கம் நடவடிக்கை எடுத்துள்ளதாக பாராளுமன்ற உறுப்பினர் ரொசன் அக்மீமன தெரிவித்துள்ளார்.


அரசாங்கத்தின் ஐந்தாண்டு அபிவிருத்தித் திட்டத்தின் கீழ், மாகாண விசேட அபிவிருத்தித் திட்டத்தின் ஊடாக இதற்கான நிதி ஒதுக்கீடுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.


இதற்கமைய, அடுத்த ஆண்டு திருகோணமலை மாவட்டத்தில் மூதூர், கிண்ணியா, சேருவில, வெருகல் மற்றும் கந்தளாய் ஆகிய ஐந்து பிரதேச செயலகப் பிரிவுகளிலும் பொது விளையாட்டு மைதானங்களை அபிவிருத்தி செய்வதற்கான பணிகள் ஆரம்பிக்கப்படவுள்ளன.


இதனைத் தொடர்ந்து, மாவட்டத்தின் ஏனைய பிரதேச செயலகப் பிரிவுகளும் இத்திட்டத்தின் கீழ் உள்வாங்கப்படும் என அவர் தெரிவித்தார்.


இதேவேளை, மூதூர் பொது விளையாட்டு மைதானத்தின் அபிவிருத்திப் பணிகளுக்காக 2 மில்லியன் ரூபா நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ள நிலையில், குறித்த மைதானத்தை பாராளுமன்ற உறுப்பினர் ரொசன் அக்மீமன வெள்ளிக்கிழமை (30)நேரில் சென்று பார்வையிட்டார்.


இதன்போதே ஊடகங்களுக்குக் கருத்துத் தெரிவித்த அவர், மாவட்டத்தின் அனைத்து பிரதேச செயலகப் பிரிவுகளிலும் விளையாட்டு உட்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்தும் நோக்கில் இத்திட்டம் முன்னெடுக்கப்படுவதாகக் குறிப்பிட்டார்.


இந்த விஜயத்தில் மூதூர் பிரதேச தேசிய மக்கள் சக்தியின் இணைப்பாளர் எம்.எச். சப்ரான், கிளீன் ஸ்ரீலங்கா வேலைத்திட்டத்தின் பிரதேச இணைப்பாளர், பிரஜா சக்தி அமைப்பின் தலைவர்கள் உள்ளிட்ட பலரும் கலந்துகொண்டனர்.

மூதூர் பொது விளையாட்டு மைதான அபிவிருத்திக்கு 2 மில்லியன் ஒதுக்கீடு திருகோணமலை மாவட்டத்தின் 11 பிரதேச செயலகப் பிரிவுகளிலும் சகல அடிப்படை வசதிகளையும் கொண்ட தலா ஒரு பொது விளையாட்டு மைதானத்தை அமைப்பதற்கு அரசாங்கம் நடவடிக்கை எடுத்துள்ளதாக பாராளுமன்ற உறுப்பினர் ரொசன் அக்மீமன தெரிவித்துள்ளார்.அரசாங்கத்தின் ஐந்தாண்டு அபிவிருத்தித் திட்டத்தின் கீழ், மாகாண விசேட அபிவிருத்தித் திட்டத்தின் ஊடாக இதற்கான நிதி ஒதுக்கீடுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.இதற்கமைய, அடுத்த ஆண்டு திருகோணமலை மாவட்டத்தில் மூதூர், கிண்ணியா, சேருவில, வெருகல் மற்றும் கந்தளாய் ஆகிய ஐந்து பிரதேச செயலகப் பிரிவுகளிலும் பொது விளையாட்டு மைதானங்களை அபிவிருத்தி செய்வதற்கான பணிகள் ஆரம்பிக்கப்படவுள்ளன.இதனைத் தொடர்ந்து, மாவட்டத்தின் ஏனைய பிரதேச செயலகப் பிரிவுகளும் இத்திட்டத்தின் கீழ் உள்வாங்கப்படும் என அவர் தெரிவித்தார்.இதேவேளை, மூதூர் பொது விளையாட்டு மைதானத்தின் அபிவிருத்திப் பணிகளுக்காக 2 மில்லியன் ரூபா நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ள நிலையில், குறித்த மைதானத்தை பாராளுமன்ற உறுப்பினர் ரொசன் அக்மீமன வெள்ளிக்கிழமை (30)நேரில் சென்று பார்வையிட்டார்.இதன்போதே ஊடகங்களுக்குக் கருத்துத் தெரிவித்த அவர், மாவட்டத்தின் அனைத்து பிரதேச செயலகப் பிரிவுகளிலும் விளையாட்டு உட்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்தும் நோக்கில் இத்திட்டம் முன்னெடுக்கப்படுவதாகக் குறிப்பிட்டார்.இந்த விஜயத்தில் மூதூர் பிரதேச தேசிய மக்கள் சக்தியின் இணைப்பாளர் எம்.எச். சப்ரான், கிளீன் ஸ்ரீலங்கா வேலைத்திட்டத்தின் பிரதேச இணைப்பாளர், பிரஜா சக்தி அமைப்பின் தலைவர்கள் உள்ளிட்ட பலரும் கலந்துகொண்டனர்.

Advertisement

Advertisement

Advertisement