• Oct 29 2026

நாமல் ராஜபக்ஷவுக்கு எதிரான 15 மில்லியன் ரூபாய் பணச்சலவை வழக்கு – நீதிமன்றம் பிறப்பித்த புதிய உத்தரவு

Chithra / Oct 29th 2026, 3:38 pm
image


பாராளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ உள்ளிட்ட சந்தேகநபர்களுக்கு எதிரான 15 மில்லியன் ரூபாய் பணச்சலவை தொடர்பான வழக்கில், சட்டமா அதிபரின் ஆலோசனைகள் இதுவரை கிடைக்கப்பெறவில்லை என கொழும்பு நீதவான் நீதிமன்றத்தில் இன்று (29) தெரிவிக்கப்பட்டுள்ளது.


பாராளுமன்ற உறுப்பினராகப் பதவி வகித்த காலத்தில் சட்டவிரோதமாக ஈட்டியதாகக் கூறப்படும் 15 மில்லியன் ரூபாயை தனியார் நிறுவனமொன்றில் முதலீடு செய்ததன் மூலம் பணச்சலவை தடுப்புச் சட்டத்தின் கீழ் குற்றம் புரிந்ததாக எழுந்த சந்தேகத்தின் அடிப்படையில் நாமல் ராஜபக்ஷ உள்ளிட்டோருக்கு எதிராக விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டிருந்தன.


நல்லாட்சி அரசாங்கக் காலத்தில் ஆரம்பிக்கப்பட்ட இந்த விசாரணைகள் 2016ஆம் ஆண்டில் நிறைவடைந்ததுடன், அது தொடர்பான சாட்சியங்கள் அடங்கிய கோவைகளும் சட்டமா அதிபருக்கு அனுப்பி வைக்கப்பட்டிருந்தன.


இந்நிலையில், குறித்த வழக்கு இன்று கொழும்பு பிரதான நீதவான் அசங்க எஸ். போதரமக முன்னிலையில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது.


இதன்போது, தற்போது விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள பாராளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்படவில்லை.


எனினும், பிணையில் விடுவிக்கப்பட்டுள்ள ஏனைய சந்தேகநபர்களான சுஜானி போகொல்லாகம, நித்ய சமரநாயக்க மற்றும் சுதர்ஷன பண்டார ஆகியோர் நீதிமன்றத்தில் ஆஜராகியிருந்தனர்.


விசாரணைகள் நிறைவடைந்து, அது தொடர்பான அனைத்து கோவைகளும் சட்டமா அதிபருக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ள போதிலும், மேலதிக சட்ட நடவடிக்கைகளை முன்னெடுப்பது தொடர்பில் இதுவரை எவ்வித ஆலோசனைகளும் கிடைக்கப்பெறவில்லை என பொலிஸ் நிதி மோசடி விசாரணைப் பிரிவு நீதிமன்றத்திற்கு அறிவித்தது.


இதனையடுத்து, வழக்கை எதிர்வரும் 2027ஆம் ஆண்டு பெப்ரவரி மாதம் 11ஆம் திகதி மீண்டும் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளுமாறு நீதவான் உத்தரவிட்டார்.


நாமல் ராஜபக்ஷவுக்கு எதிரான 15 மில்லியன் ரூபாய் பணச்சலவை வழக்கு – நீதிமன்றம் பிறப்பித்த புதிய உத்தரவு பாராளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ உள்ளிட்ட சந்தேகநபர்களுக்கு எதிரான 15 மில்லியன் ரூபாய் பணச்சலவை தொடர்பான வழக்கில், சட்டமா அதிபரின் ஆலோசனைகள் இதுவரை கிடைக்கப்பெறவில்லை என கொழும்பு நீதவான் நீதிமன்றத்தில் இன்று (29) தெரிவிக்கப்பட்டுள்ளது.பாராளுமன்ற உறுப்பினராகப் பதவி வகித்த காலத்தில் சட்டவிரோதமாக ஈட்டியதாகக் கூறப்படும் 15 மில்லியன் ரூபாயை தனியார் நிறுவனமொன்றில் முதலீடு செய்ததன் மூலம் பணச்சலவை தடுப்புச் சட்டத்தின் கீழ் குற்றம் புரிந்ததாக எழுந்த சந்தேகத்தின் அடிப்படையில் நாமல் ராஜபக்ஷ உள்ளிட்டோருக்கு எதிராக விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டிருந்தன.நல்லாட்சி அரசாங்கக் காலத்தில் ஆரம்பிக்கப்பட்ட இந்த விசாரணைகள் 2016ஆம் ஆண்டில் நிறைவடைந்ததுடன், அது தொடர்பான சாட்சியங்கள் அடங்கிய கோவைகளும் சட்டமா அதிபருக்கு அனுப்பி வைக்கப்பட்டிருந்தன.இந்நிலையில், குறித்த வழக்கு இன்று கொழும்பு பிரதான நீதவான் அசங்க எஸ். போதரமக முன்னிலையில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது.இதன்போது, தற்போது விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள பாராளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்படவில்லை.எனினும், பிணையில் விடுவிக்கப்பட்டுள்ள ஏனைய சந்தேகநபர்களான சுஜானி போகொல்லாகம, நித்ய சமரநாயக்க மற்றும் சுதர்ஷன பண்டார ஆகியோர் நீதிமன்றத்தில் ஆஜராகியிருந்தனர்.விசாரணைகள் நிறைவடைந்து, அது தொடர்பான அனைத்து கோவைகளும் சட்டமா அதிபருக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ள போதிலும், மேலதிக சட்ட நடவடிக்கைகளை முன்னெடுப்பது தொடர்பில் இதுவரை எவ்வித ஆலோசனைகளும் கிடைக்கப்பெறவில்லை என பொலிஸ் நிதி மோசடி விசாரணைப் பிரிவு நீதிமன்றத்திற்கு அறிவித்தது.இதனையடுத்து, வழக்கை எதிர்வரும் 2027ஆம் ஆண்டு பெப்ரவரி மாதம் 11ஆம் திகதி மீண்டும் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளுமாறு நீதவான் உத்தரவிட்டார்.

Advertisement

Advertisement

Advertisement