• Oct 29 2026

பாரிஸிலிருந்து தோஹா வழியாக இலங்கை வந்த இந்தியர்! விமான நிலையத்தில் காத்திருந்த அதிர்ச்சி

Chithra / Oct 29th 2026, 11:10 am
image


கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் சுமார் 45 கோடியே 40 இலட்சம் ரூபாய் பெறுமதியான போதைப்பொருட்களுடன் இந்தியப் பிரஜை ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.


இலங்கை சுங்கத்தின் போதைப்பொருள் கட்டுப்பாட்டுப் பிரிவு அதிகாரிகளால் நேற்று (28) மேற்கொள்ளப்பட்ட விசேட சோதனை நடவடிக்கையின்போதே குறித்த நபர் கைது செய்யப்பட்டுள்ளார்.


கைது செய்யப்பட்டவர் 46 வயதுடைய இந்திய நாட்டவர் என்பதுடன், அவர் தொழில்ரீதியாகப் பொறியியலாளர் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.


குறித்த நபர் பிரான்ஸின் பாரிஸ் நகரிலிருந்து கட்டாரின் தோஹா வழியாக, கட்டார் ஏர்வேஸ் நிறுவனத்திற்குச் சொந்தமான QR 654 என்ற விமானத்தில் இலங்கைக்கு வருகை தந்துள்ளார்.


இதன்போது, அவரது பயணப் பைகள் மீது சந்தேகமடைந்த சுங்க அதிகாரிகள் மேற்கொண்ட சோதனையில் பெருமளவிலான போதைப்பொருட்கள் மறைத்து வைக்கப்பட்டிருந்தமை கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.


தொடர்ந்து மேற்கொள்ளப்பட்ட பரிசோதனைகளில், அவை கொக்கைன் மற்றும் எக்ஸ்டசி (Ecstasy) வகை போதைப்பொருட்கள் என்பது உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.


கைப்பற்றப்பட்ட போதைப்பொருட்களின் மொத்த சந்தைப் பெறுமதி சுமார் 454 மில்லியன் ரூபாய் என மதிப்பிடப்பட்டுள்ளது.


இதனையடுத்து, சந்தேகநபர் மேலதிக விசாரணைகளுக்காக சுங்க போதைப்பொருள் கட்டுப்பாட்டுப் பிரிவு அதிகாரிகளால் தடுத்து வைக்கப்பட்டுள்ளார்.


சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.

பாரிஸிலிருந்து தோஹா வழியாக இலங்கை வந்த இந்தியர் விமான நிலையத்தில் காத்திருந்த அதிர்ச்சி கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் சுமார் 45 கோடியே 40 இலட்சம் ரூபாய் பெறுமதியான போதைப்பொருட்களுடன் இந்தியப் பிரஜை ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.இலங்கை சுங்கத்தின் போதைப்பொருள் கட்டுப்பாட்டுப் பிரிவு அதிகாரிகளால் நேற்று (28) மேற்கொள்ளப்பட்ட விசேட சோதனை நடவடிக்கையின்போதே குறித்த நபர் கைது செய்யப்பட்டுள்ளார்.கைது செய்யப்பட்டவர் 46 வயதுடைய இந்திய நாட்டவர் என்பதுடன், அவர் தொழில்ரீதியாகப் பொறியியலாளர் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.குறித்த நபர் பிரான்ஸின் பாரிஸ் நகரிலிருந்து கட்டாரின் தோஹா வழியாக, கட்டார் ஏர்வேஸ் நிறுவனத்திற்குச் சொந்தமான QR 654 என்ற விமானத்தில் இலங்கைக்கு வருகை தந்துள்ளார்.இதன்போது, அவரது பயணப் பைகள் மீது சந்தேகமடைந்த சுங்க அதிகாரிகள் மேற்கொண்ட சோதனையில் பெருமளவிலான போதைப்பொருட்கள் மறைத்து வைக்கப்பட்டிருந்தமை கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.தொடர்ந்து மேற்கொள்ளப்பட்ட பரிசோதனைகளில், அவை கொக்கைன் மற்றும் எக்ஸ்டசி (Ecstasy) வகை போதைப்பொருட்கள் என்பது உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.கைப்பற்றப்பட்ட போதைப்பொருட்களின் மொத்த சந்தைப் பெறுமதி சுமார் 454 மில்லியன் ரூபாய் என மதிப்பிடப்பட்டுள்ளது.இதனையடுத்து, சந்தேகநபர் மேலதிக விசாரணைகளுக்காக சுங்க போதைப்பொருள் கட்டுப்பாட்டுப் பிரிவு அதிகாரிகளால் தடுத்து வைக்கப்பட்டுள்ளார்.சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.

Advertisement

Advertisement

Advertisement