• Oct 29 2026

இந்தியாவில் பாஜக தலைவர்களுடன் சிறிநாத் சந்திப்பு

Aathira / Oct 29th 2026, 7:11 am
image

இலங்கைத் தமிழ் மக்களின் அரசியல் உரிமைகள், அரசியல் தீர்வு மற்றும் இந்தியாவில் வசிக்கும் இலங்கைத் தமிழர்களின் நிலைமை தொடர்பில் இந்தியாவில் முக்கிய சந்திப்புகளை நடத்தியுள்ளார் இலங்கைத் தமிழ் அரசுக் கட்சியின் மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் வைத்தியர் இளையதம்பி சிறிநாத்.

இந்தியாவுக்கு விஜயம் மேற்கொண்டுள்ள அவர், பாரதிய ஜனதா கட்சியின் முக்கிய நிர்வாகிகளைச் சந்தித்துக் கலந்துரையாடியுள்ளார்.

கடந்த செவ்வாய்க்கிழமை, ஒக்டோபர் 27ஆம் திகதி, புதுடெல்லியில் அமைந்துள்ள பாஜக தலைமை அலுவலகத்தில் அக்கட்சியின் தேசிய அமைப்புப் பொதுச் செயலாளர் பி.எல். சந்தோஷைச் சந்தித்துள்ளார்.

இந்தச் சந்திப்பின்போது, இலங்கைத் தமிழ் மக்களின் அரசியல் உரிமைகள், அரசியல் தீர்வுக்கான விடயங்கள் மற்றும் தற்போதைய அரசியல் சூழல் குறித்து விரிவாகக் கலந்துரையாடப்பட்டுள்ளது.

அத்துடன், வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் மக்களின் நலனை முன்னிறுத்தி முன்னெடுக்கப்பட வேண்டிய பல்துறை சார்ந்த உட்கட்டமைப்பு அபிவிருத்தித் திட்டங்கள் தொடர்பிலும் கருத்துப் பரிமாற்றம் இடம்பெற்றுள்ளது.

குறிப்பாக, இலங்கையிலிருந்து இடம்பெயர்ந்து தமிழ்நாட்டிலுள்ள முகாம்களில் வசித்து வரும் இலங்கைத் தமிழர்களின் தற்போதைய நிலைமை குறித்தும் இதன்போது கவனம் செலுத்தப்பட்டுள்ளது.

அவர்களின் இருப்பை உறுதிப்படுத்துதல், அடிப்படைத் தேவைகளைப் பூர்த்தி செய்தல் உள்ளிட்ட விடயங்களும் கலந்துரையாடப்பட்டுள்ளன.

இதனைத் தொடர்ந்து, பாஜகவின் தேசியச் செயலாளர் ம. வெங்கடேசனையும் சென்னையில் உள்ள அவரது இல்லத்தில் சிறிநாத் மரியாதை நிமித்தமாகச் சந்தித்துக் கலந்துரையாடியுள்ளார்.

இந்தச் சந்திப்புகள் தொடர்பில் மேலதிக விபரங்கள் வெளியாகும் நிலையில், இலங்கைத் தமிழ் மக்களின் அரசியல் உரிமைகள் மற்றும் நலன் சார்ந்த விடயங்கள் தொடர்பான அடுத்தகட்ட நகர்வுகள் கவனத்தைப் பெற்றுள்ளன.

இந்தியாவில் பாஜக தலைவர்களுடன் சிறிநாத் சந்திப்பு இலங்கைத் தமிழ் மக்களின் அரசியல் உரிமைகள், அரசியல் தீர்வு மற்றும் இந்தியாவில் வசிக்கும் இலங்கைத் தமிழர்களின் நிலைமை தொடர்பில் இந்தியாவில் முக்கிய சந்திப்புகளை நடத்தியுள்ளார் இலங்கைத் தமிழ் அரசுக் கட்சியின் மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் வைத்தியர் இளையதம்பி சிறிநாத்.இந்தியாவுக்கு விஜயம் மேற்கொண்டுள்ள அவர், பாரதிய ஜனதா கட்சியின் முக்கிய நிர்வாகிகளைச் சந்தித்துக் கலந்துரையாடியுள்ளார்.கடந்த செவ்வாய்க்கிழமை, ஒக்டோபர் 27ஆம் திகதி, புதுடெல்லியில் அமைந்துள்ள பாஜக தலைமை அலுவலகத்தில் அக்கட்சியின் தேசிய அமைப்புப் பொதுச் செயலாளர் பி.எல். சந்தோஷைச் சந்தித்துள்ளார்.இந்தச் சந்திப்பின்போது, இலங்கைத் தமிழ் மக்களின் அரசியல் உரிமைகள், அரசியல் தீர்வுக்கான விடயங்கள் மற்றும் தற்போதைய அரசியல் சூழல் குறித்து விரிவாகக் கலந்துரையாடப்பட்டுள்ளது.அத்துடன், வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் மக்களின் நலனை முன்னிறுத்தி முன்னெடுக்கப்பட வேண்டிய பல்துறை சார்ந்த உட்கட்டமைப்பு அபிவிருத்தித் திட்டங்கள் தொடர்பிலும் கருத்துப் பரிமாற்றம் இடம்பெற்றுள்ளது.குறிப்பாக, இலங்கையிலிருந்து இடம்பெயர்ந்து தமிழ்நாட்டிலுள்ள முகாம்களில் வசித்து வரும் இலங்கைத் தமிழர்களின் தற்போதைய நிலைமை குறித்தும் இதன்போது கவனம் செலுத்தப்பட்டுள்ளது.அவர்களின் இருப்பை உறுதிப்படுத்துதல், அடிப்படைத் தேவைகளைப் பூர்த்தி செய்தல் உள்ளிட்ட விடயங்களும் கலந்துரையாடப்பட்டுள்ளன.இதனைத் தொடர்ந்து, பாஜகவின் தேசியச் செயலாளர் ம. வெங்கடேசனையும் சென்னையில் உள்ள அவரது இல்லத்தில் சிறிநாத் மரியாதை நிமித்தமாகச் சந்தித்துக் கலந்துரையாடியுள்ளார்.இந்தச் சந்திப்புகள் தொடர்பில் மேலதிக விபரங்கள் வெளியாகும் நிலையில், இலங்கைத் தமிழ் மக்களின் அரசியல் உரிமைகள் மற்றும் நலன் சார்ந்த விடயங்கள் தொடர்பான அடுத்தகட்ட நகர்வுகள் கவனத்தைப் பெற்றுள்ளன.

Advertisement

Advertisement

Advertisement