வங்காள விரிகுடாவில் நிலைகொண்டிருந்த ‘அர்னாப்’ புயல் தற்போது வலுவிழந்துள்ள நிலையில், இலங்கையின் பல பகுதிகளில் இன்றும் (29) மழையுடனான வானிலை நிலவக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் அறிவித்துள்ளது.
இந்தியாவின் ஆந்திரப் பிரதேசத்தின் வடக்குக் கரையோரப் பகுதிக்கு அருகில் நிலைகொண்டிருந்த அர்னாப் புயல், தற்போது ஆழ்ந்த காற்றழுத்தத் தாழ்வு மண்டலமாக வலுவிழந்துள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
குறித்த காற்றழுத்தத் தொகுதி தொடர்ந்து வடக்கு நோக்கி நகர்ந்து, இன்று (29) காலை காற்றழுத்தத் தாழ்வு மண்டலமாகவும், மாலை 5.30 மணியளவில் குறைந்த காற்றழுத்தப் பகுதியாகவும் மேலும் வலுவிழக்கக்கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இதன் காரணமாக, வங்காள விரிகுடாவின் ஆழ்கடல் பகுதிகளில் புயலின் தாக்கம் படிப்படியாகக் குறைவடையும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதனையடுத்து, வங்காள விரிகுடாவின் ஆழ்கடல் பகுதிகளில் பலநாள் கடற்றொழிலில் ஈடுபடும் படகுகள் மற்றும் ஏனைய கடல்சார் நடவடிக்கைகளுக்காக விடுக்கப்பட்டிருந்த விசேட எச்சரிக்கை நீக்கப்படுவதாக வளிமண்டலவியல் திணைக்களம் அறிவித்துள்ளது.
இதேவேளை, மேல் மற்றும் சப்ரகமுவ மாகாணங்களிலும் கண்டி, நுவரெலியா, காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் பல இடங்களில் இடைக்கிடையே மழை பெய்யக்கூடும் என எதிர்வுகூறப்பட்டுள்ளது.
அத்துடன், ஊவா மாகாணத்திலும் மட்டக்களப்பு, அம்பாறை மற்றும் ஹம்பாந்தோட்டை மாவட்டங்களிலும் பிற்பகல் 1 மணிக்குப் பின்னர் சில இடங்களில் மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக்கூடும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
நாட்டின் ஏனைய பகுதிகளில் பெரும்பாலும் சீரான வானிலை நிலவக்கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது.
நாட்டைச் சூழவுள்ள கடற்பரப்புகளில் சில இடங்களில் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும் என்பதுடன், தென்மேற்குத் திசையிலிருந்து மணிக்கு 25 முதல் 35 கிலோமீற்றர் வேகத்தில் காற்று வீசக்கூடும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
குறிப்பாக, புத்தளம் முதல் காங்கேசன்துறை ஊடாக முல்லைத்தீவு வரையிலும், காலி முதல் ஹம்பாந்தோட்டை ஊடாக பொத்துவில் வரையிலும் உள்ள கடற்பரப்புகளில் காற்றின் வேகம் அவ்வப்போது மணிக்கு 45 கிலோமீற்றர் வரை அதிகரிக்கக்கூடும்.
இதனால் குறித்த கடற்பரப்புகள் அவ்வப்போது ஓரளவு கொந்தளிப்பாகக் காணப்படக்கூடும் எனவும் எச்சரிக்கப்பட்டுள்ளது.
எனவே, இடியுடன் கூடிய மழையின்போது ஏற்படக்கூடிய தற்காலிக பலத்த காற்று மற்றும் மின்னல் தாக்கங்களால் ஏற்படும் விபத்துகளைத் தவிர்ப்பதற்குத் தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு வளிமண்டலவியல் திணைக்களம் பொதுமக்களை அறிவுறுத்தியுள்ளது.
அர்னாப் புயலின் தற்போதைய நிலை என்ன கடற்றொழிலாளர்களுக்கு எச்சரிக்கை வங்காள விரிகுடாவில் நிலைகொண்டிருந்த ‘அர்னாப்’ புயல் தற்போது வலுவிழந்துள்ள நிலையில், இலங்கையின் பல பகுதிகளில் இன்றும் (29) மழையுடனான வானிலை நிலவக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் அறிவித்துள்ளது.இந்தியாவின் ஆந்திரப் பிரதேசத்தின் வடக்குக் கரையோரப் பகுதிக்கு அருகில் நிலைகொண்டிருந்த அர்னாப் புயல், தற்போது ஆழ்ந்த காற்றழுத்தத் தாழ்வு மண்டலமாக வலுவிழந்துள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.குறித்த காற்றழுத்தத் தொகுதி தொடர்ந்து வடக்கு நோக்கி நகர்ந்து, இன்று (29) காலை காற்றழுத்தத் தாழ்வு மண்டலமாகவும், மாலை 5.30 மணியளவில் குறைந்த காற்றழுத்தப் பகுதியாகவும் மேலும் வலுவிழக்கக்கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது.இதன் காரணமாக, வங்காள விரிகுடாவின் ஆழ்கடல் பகுதிகளில் புயலின் தாக்கம் படிப்படியாகக் குறைவடையும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.இதனையடுத்து, வங்காள விரிகுடாவின் ஆழ்கடல் பகுதிகளில் பலநாள் கடற்றொழிலில் ஈடுபடும் படகுகள் மற்றும் ஏனைய கடல்சார் நடவடிக்கைகளுக்காக விடுக்கப்பட்டிருந்த விசேட எச்சரிக்கை நீக்கப்படுவதாக வளிமண்டலவியல் திணைக்களம் அறிவித்துள்ளது.இதேவேளை, மேல் மற்றும் சப்ரகமுவ மாகாணங்களிலும் கண்டி, நுவரெலியா, காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் பல இடங்களில் இடைக்கிடையே மழை பெய்யக்கூடும் என எதிர்வுகூறப்பட்டுள்ளது.அத்துடன், ஊவா மாகாணத்திலும் மட்டக்களப்பு, அம்பாறை மற்றும் ஹம்பாந்தோட்டை மாவட்டங்களிலும் பிற்பகல் 1 மணிக்குப் பின்னர் சில இடங்களில் மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக்கூடும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.நாட்டின் ஏனைய பகுதிகளில் பெரும்பாலும் சீரான வானிலை நிலவக்கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது.நாட்டைச் சூழவுள்ள கடற்பரப்புகளில் சில இடங்களில் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும் என்பதுடன், தென்மேற்குத் திசையிலிருந்து மணிக்கு 25 முதல் 35 கிலோமீற்றர் வேகத்தில் காற்று வீசக்கூடும் என அறிவிக்கப்பட்டுள்ளது.குறிப்பாக, புத்தளம் முதல் காங்கேசன்துறை ஊடாக முல்லைத்தீவு வரையிலும், காலி முதல் ஹம்பாந்தோட்டை ஊடாக பொத்துவில் வரையிலும் உள்ள கடற்பரப்புகளில் காற்றின் வேகம் அவ்வப்போது மணிக்கு 45 கிலோமீற்றர் வரை அதிகரிக்கக்கூடும்.இதனால் குறித்த கடற்பரப்புகள் அவ்வப்போது ஓரளவு கொந்தளிப்பாகக் காணப்படக்கூடும் எனவும் எச்சரிக்கப்பட்டுள்ளது.எனவே, இடியுடன் கூடிய மழையின்போது ஏற்படக்கூடிய தற்காலிக பலத்த காற்று மற்றும் மின்னல் தாக்கங்களால் ஏற்படும் விபத்துகளைத் தவிர்ப்பதற்குத் தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு வளிமண்டலவியல் திணைக்களம் பொதுமக்களை அறிவுறுத்தியுள்ளது.