வெளிநாட்டில் பணிபுரியும் இலங்கை ஊழியர்களுக்கு அரசாங்கத்தினால் வழங்கப்பட வேண்டிய அனைத்து சலுகைகளையும் முழுமையாக வழங்குவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட வேண்டுமென ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க வலியுறுத்தியுள்ளார்.
ஜனாதிபதி அலுவலகத்தில் நேற்று (28) பிற்பகல் நடைபெற்ற இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகத்தின் அதிகாரிகளுடனான விசேட கலந்துரையாடலின்போதே ஜனாதிபதி இதனைத் தெரிவித்துள்ளார்.
நாட்டிற்குத் தேவையான அந்நியச் செலாவணியை ஈட்டித் தருவதன் மூலம் தேசிய பொருளாதாரத்திற்கு வெளிநாட்டில் பணிபுரியும் இலங்கையர்கள் முக்கிய பங்களிப்பை வழங்கி வருவதாக ஜனாதிபதி இதன்போது சுட்டிக்காட்டியுள்ளார்.
எனவே, அவர்களுக்கான நலன்புரித் திட்டங்கள் மற்றும் அரசாங்க சலுகைகள் உரிய முறையில் கிடைப்பதை உறுதிப்படுத்த வேண்டியதன் அவசியத்தையும் அவர் வலியுறுத்தியுள்ளார்.
குறிப்பாக, வெளிநாட்டு ஊழியர்களுக்கான வீட்டுத்திட்டம், கடன் வசதிகள் மற்றும் தீர்வை வரி விலக்கு (Duty Free) சலுகைகள் தொடர்பில் நிலவும் பிரச்சினைகள் குறித்தும் கவனம் செலுத்தப்பட்டுள்ளது.
அத்துடன், வெளிநாடுகளில் வசிக்கும் மற்றும் பணிபுரியும் இலங்கையர்கள் தொடர்பான துல்லியமான, புதுப்பிக்கப்பட்ட தரவுத் தொகுப்பொன்றைப் பராமரிப்பதன் அவசியத்தையும் ஜனாதிபதி சுட்டிக்காட்டியுள்ளார்.
இவ்வாறான தரவுத் தொகுப்பின் ஊடாக வெளிநாட்டு ஊழியர்களுக்கான நலன்புரித் திட்டங்களை மிகவும் ஒழுங்கமைக்கப்பட்ட மற்றும் செயற்திறனான முறையில் முன்னெடுக்க முடியும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
வெளிநாட்டில் பணிபுரியும் இலங்கையர்களுக்கு என்னென்ன சலுகைகள் ஜனாதிபதி விடுத்துள்ள பணிப்புரை வெளிநாட்டில் பணிபுரியும் இலங்கை ஊழியர்களுக்கு அரசாங்கத்தினால் வழங்கப்பட வேண்டிய அனைத்து சலுகைகளையும் முழுமையாக வழங்குவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட வேண்டுமென ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க வலியுறுத்தியுள்ளார்.ஜனாதிபதி அலுவலகத்தில் நேற்று (28) பிற்பகல் நடைபெற்ற இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகத்தின் அதிகாரிகளுடனான விசேட கலந்துரையாடலின்போதே ஜனாதிபதி இதனைத் தெரிவித்துள்ளார்.நாட்டிற்குத் தேவையான அந்நியச் செலாவணியை ஈட்டித் தருவதன் மூலம் தேசிய பொருளாதாரத்திற்கு வெளிநாட்டில் பணிபுரியும் இலங்கையர்கள் முக்கிய பங்களிப்பை வழங்கி வருவதாக ஜனாதிபதி இதன்போது சுட்டிக்காட்டியுள்ளார்.எனவே, அவர்களுக்கான நலன்புரித் திட்டங்கள் மற்றும் அரசாங்க சலுகைகள் உரிய முறையில் கிடைப்பதை உறுதிப்படுத்த வேண்டியதன் அவசியத்தையும் அவர் வலியுறுத்தியுள்ளார்.குறிப்பாக, வெளிநாட்டு ஊழியர்களுக்கான வீட்டுத்திட்டம், கடன் வசதிகள் மற்றும் தீர்வை வரி விலக்கு (Duty Free) சலுகைகள் தொடர்பில் நிலவும் பிரச்சினைகள் குறித்தும் கவனம் செலுத்தப்பட்டுள்ளது.அத்துடன், வெளிநாடுகளில் வசிக்கும் மற்றும் பணிபுரியும் இலங்கையர்கள் தொடர்பான துல்லியமான, புதுப்பிக்கப்பட்ட தரவுத் தொகுப்பொன்றைப் பராமரிப்பதன் அவசியத்தையும் ஜனாதிபதி சுட்டிக்காட்டியுள்ளார்.இவ்வாறான தரவுத் தொகுப்பின் ஊடாக வெளிநாட்டு ஊழியர்களுக்கான நலன்புரித் திட்டங்களை மிகவும் ஒழுங்கமைக்கப்பட்ட மற்றும் செயற்திறனான முறையில் முன்னெடுக்க முடியும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.