சீன அதிபர் ஷி ஜின்பிங்குடன் நடைபெறவுள்ள சந்திப்பில் ஈரான் விவகாரம் குறித்து பேசப்படுமா என அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்பிடம் கேள்வி எழுப்பப்பட்டது.
அதற்கு பதிலளித்த டிரம்ப், “நான் பல்வேறு விஷயங்கள் குறித்து பேசுவேன். அதுவும் அதில் அடங்கும். அனைத்தும் நன்றாகச் சென்று கொண்டிருக்கிறது” எனத் தெரிவித்தார்.
டிரம்ப்–ஷி ஜின்பிங் சந்திப்பில் வர்த்தகம், தொழில்நுட்பம், தைவான் மற்றும் செயற்கை நுண்ணறிவு உள்ளிட்ட பல்வேறு விவகாரங்கள் இடம்பெற உள்ள நிலையில், ஈரான் போரும் முக்கியமான பிரச்சினையாக உருவெடுத்துள்ளது.
குறிப்பாக, ஈரானுடனான போருக்கு முடிவு காண சீனாவின் செல்வாக்கைப் பயன்படுத்துவது குறித்து டிரம்ப் ஷி ஜின்பிங்குடன் ஆலோசிக்கக்கூடும் என சர்வதேச ஆய்வுகள் தெரிவிக்கின்றன.
ஈரானுடனான போரால் எரிசக்தி சந்தைகள் மற்றும் கடல் வர்த்தகப் பாதைகளும் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், இந்த விவகாரம் இரு தலைவர்களின் பேச்சுவார்த்தையில் முக்கிய இடம் பெறும் என எதிர்பார்க்கப்படுகிறது.
ஈரான் குறித்து ஷி ஜின்பிங்குடன் பேசுவீர்களா டிரம்பின் பதில் சீன அதிபர் ஷி ஜின்பிங்குடன் நடைபெறவுள்ள சந்திப்பில் ஈரான் விவகாரம் குறித்து பேசப்படுமா என அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்பிடம் கேள்வி எழுப்பப்பட்டது.அதற்கு பதிலளித்த டிரம்ப், “நான் பல்வேறு விஷயங்கள் குறித்து பேசுவேன். அதுவும் அதில் அடங்கும். அனைத்தும் நன்றாகச் சென்று கொண்டிருக்கிறது” எனத் தெரிவித்தார்.டிரம்ப்–ஷி ஜின்பிங் சந்திப்பில் வர்த்தகம், தொழில்நுட்பம், தைவான் மற்றும் செயற்கை நுண்ணறிவு உள்ளிட்ட பல்வேறு விவகாரங்கள் இடம்பெற உள்ள நிலையில், ஈரான் போரும் முக்கியமான பிரச்சினையாக உருவெடுத்துள்ளது.குறிப்பாக, ஈரானுடனான போருக்கு முடிவு காண சீனாவின் செல்வாக்கைப் பயன்படுத்துவது குறித்து டிரம்ப் ஷி ஜின்பிங்குடன் ஆலோசிக்கக்கூடும் என சர்வதேச ஆய்வுகள் தெரிவிக்கின்றன. ஈரானுடனான போரால் எரிசக்தி சந்தைகள் மற்றும் கடல் வர்த்தகப் பாதைகளும் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், இந்த விவகாரம் இரு தலைவர்களின் பேச்சுவார்த்தையில் முக்கிய இடம் பெறும் என எதிர்பார்க்கப்படுகிறது.