• Nov 01 2026

நவம்பரில் லிட்ரோ எரிவாயு விலை அதிகரிக்குமா? தட்டுப்பாடு நீங்குகிறதா? அதிரடி அறிவிப்பு

Chithra / Nov 1st 2026, 10:47 am
image


நவம்பர் மாதத்திற்கான லிட்ரோ சமையல் எரிவாயு விலையில் எவ்வித மாற்றமும் மேற்கொள்ளப்படமாட்டாது என லிட்ரோ எரிவாயு நிறுவனம் அறிவித்துள்ளது.


இதற்கமைய, 12.5 கிலோகிராம் நிறையுடைய வீட்டு உபயோக எரிவாயு சிலிண்டர் 4,365 ரூபாவுக்கும், 5 கிலோகிராம் சிலிண்டர் 1,750 ரூபாவுக்கும், 2.3 கிலோகிராம் சிலிண்டர் 815 ரூபாவுக்கும் தொடர்ந்தும் விற்பனை செய்யப்படவுள்ளது.


இதேவேளை, நவம்பர் மாதத்திற்காக மூன்று மில்லியன் எரிவாயு சிலிண்டர்களை சந்தைக்கு விநியோகிக்கத் தமது நிறுவனத்தினால் முடியும் என லிட்ரோ நிறுவனத்தின் விற்பனை, சந்தைப்படுத்தல் மற்றும் நிறுவன தொடர்புகள் பணிப்பாளர் ஜனக்க பத்திரண தெரிவித்துள்ளார்.


அனைத்து வணிக வாடிக்கையாளர்களுக்கும் தேவையான எரிவாயுவை விநியோகிப்பதன் ஊடாக நாட்டின் முழுமையான எரிவாயு தேவையைப் பூர்த்தி செய்ய முடியும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.


பொதுவாக ஒரு மாதத்திற்கு லிட்ரோ நிறுவனத்திற்கு 32,000 மெட்ரிக் தொன் எரிவாயுவும், போட்டி நிறுவனத்திற்கு 6,000 மெட்ரிக் தொன் எரிவாயுவுமாக மொத்தம் 38,000 மெட்ரிக் தொன் எரிவாயு தேவைப்படுவதாக அவர் தெரிவித்துள்ளார்.


எனினும், தற்போதைய தேவையைக் கருத்திற்கொண்டு நவம்பர் மாதத்திற்காக 44,000 மெட்ரிக் தொன் எரிவாயு  ஜியோ காஸ் (Geo Gas) நிறுவனத்தினூடாகக் கொள்வனவு செய்யப்பட்டு உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாகவும் அவர் கூறியுள்ளார்.


இதற்கிடையில், 3,900 மெட்ரிக் தொன் எரிவாயுவை ஏற்றிவந்த ''குட்வில்' (Goodwill) கப்பலில் இருந்து எரிவாயுவை இறக்கும் பணிகள் தற்போது முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.


மேலும், 3,900 மெட்ரிக் தொன் எரிவாயுவை ஏற்றியுள்ள  'கொரண்டைன்' (Quarantine) கப்பல் இன்று (01) நாட்டை வந்தடையவுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.


இதற்கமைய,  கொழும்பில் வழமைபோன்று எரிவாயு விநியோகம் இடம்பெறுவதுடன், ஏனைய பகுதிகளுக்கான விநியோகமும் இன்று (01) முதல் வழமைக்குத் திரும்பும் என ஜனக்க பத்திரண மேலும் தெரிவித்துள்ளார்.


நவம்பரில் லிட்ரோ எரிவாயு விலை அதிகரிக்குமா தட்டுப்பாடு நீங்குகிறதா அதிரடி அறிவிப்பு நவம்பர் மாதத்திற்கான லிட்ரோ சமையல் எரிவாயு விலையில் எவ்வித மாற்றமும் மேற்கொள்ளப்படமாட்டாது என லிட்ரோ எரிவாயு நிறுவனம் அறிவித்துள்ளது.இதற்கமைய, 12.5 கிலோகிராம் நிறையுடைய வீட்டு உபயோக எரிவாயு சிலிண்டர் 4,365 ரூபாவுக்கும், 5 கிலோகிராம் சிலிண்டர் 1,750 ரூபாவுக்கும், 2.3 கிலோகிராம் சிலிண்டர் 815 ரூபாவுக்கும் தொடர்ந்தும் விற்பனை செய்யப்படவுள்ளது.இதேவேளை, நவம்பர் மாதத்திற்காக மூன்று மில்லியன் எரிவாயு சிலிண்டர்களை சந்தைக்கு விநியோகிக்கத் தமது நிறுவனத்தினால் முடியும் என லிட்ரோ நிறுவனத்தின் விற்பனை, சந்தைப்படுத்தல் மற்றும் நிறுவன தொடர்புகள் பணிப்பாளர் ஜனக்க பத்திரண தெரிவித்துள்ளார்.அனைத்து வணிக வாடிக்கையாளர்களுக்கும் தேவையான எரிவாயுவை விநியோகிப்பதன் ஊடாக நாட்டின் முழுமையான எரிவாயு தேவையைப் பூர்த்தி செய்ய முடியும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.பொதுவாக ஒரு மாதத்திற்கு லிட்ரோ நிறுவனத்திற்கு 32,000 மெட்ரிக் தொன் எரிவாயுவும், போட்டி நிறுவனத்திற்கு 6,000 மெட்ரிக் தொன் எரிவாயுவுமாக மொத்தம் 38,000 மெட்ரிக் தொன் எரிவாயு தேவைப்படுவதாக அவர் தெரிவித்துள்ளார்.எனினும், தற்போதைய தேவையைக் கருத்திற்கொண்டு நவம்பர் மாதத்திற்காக 44,000 மெட்ரிக் தொன் எரிவாயு  ஜியோ காஸ் (Geo Gas) நிறுவனத்தினூடாகக் கொள்வனவு செய்யப்பட்டு உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாகவும் அவர் கூறியுள்ளார்.இதற்கிடையில், 3,900 மெட்ரிக் தொன் எரிவாயுவை ஏற்றிவந்த ''குட்வில்' (Goodwill) கப்பலில் இருந்து எரிவாயுவை இறக்கும் பணிகள் தற்போது முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.மேலும், 3,900 மெட்ரிக் தொன் எரிவாயுவை ஏற்றியுள்ள  'கொரண்டைன்' (Quarantine) கப்பல் இன்று (01) நாட்டை வந்தடையவுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.இதற்கமைய,  கொழும்பில் வழமைபோன்று எரிவாயு விநியோகம் இடம்பெறுவதுடன், ஏனைய பகுதிகளுக்கான விநியோகமும் இன்று (01) முதல் வழமைக்குத் திரும்பும் என ஜனக்க பத்திரண மேலும் தெரிவித்துள்ளார்.

Advertisement

Advertisement

Advertisement