• Oct 14 2026

இரகசியமாகக் கண்காணிக்கப்படும் வாகனங்கள் – சிக்கினால் கடும் கட்டுப்பாடுகள்! புதிய நடைமுறை அறிமுகம்!

Chithra / Oct 11th 2026, 11:08 am
image


நாட்டில் அதிகளவு புகையை வெளியேற்றும் வாகனங்களைக் கண்டறிவதற்காக, மோட்டார் போக்குவரத்துத் திணைக்களம் புதிய விசேட கண்காணிப்பு நடவடிக்கையொன்றை முன்னெடுக்கவுள்ளது.


இதற்கமைய, வாகனப் புகை வெளியேற்றப் பரிசோதனைத் திட்டத்தின் கீழ் விசேட புகைப்படப் பிரிவொன்றை நிறுவ நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.


குறித்த பிரிவின் ஊடாக, பொதுச் சாலைகளில் பயணிக்கும் வாகனங்கள் இரகசியமாகக் கண்காணிக்கப்படவுள்ளன.


இதற்காக நாடளாவிய ரீதியில் முக்கிய நகரங்களின் பிரதான இடங்களில் அதிகாரிகள் பணியமர்த்தப்படவுள்ளதுடன், அதிகளவு புகையை வெளியேற்றும் வாகனங்கள் புகைப்படம் எடுக்கப்படவுள்ளன.


இவ்வாறு பெறப்படும் புகைப்பட ஆதாரங்களின் அடிப்படையில், சம்பந்தப்பட்ட வாகன உரிமையாளர்களுக்கு அதே நாளில் வாகனங்களைப் பராமரிப்பதற்கான உத்தரவுகள் வழங்கப்படவுள்ளன.


குறித்த உத்தரவுகளைப் பெறும் வாகன உரிமையாளர்கள், தமது வாகனங்களில் காணப்படும் குறைபாடுகளைச் சரிசெய்து, நிர்ணயிக்கப்பட்ட காலப்பகுதிக்குள் வெரஹெரவில் அமைந்துள்ள வாகனப் புகை வெளியேற்றப் பரிசோதனை மையத்தில் பரிசோதனைக்காகச் சமர்ப்பிக்க வேண்டும்.


இந்த உத்தரவுகளைப் பின்பற்றத் தவறும் வாகனங்கள், மோட்டார் போக்குவரத்துத் திணைக்களத்தின் தரவுத்தளத்தில் கறுப்புப் பட்டியலில் சேர்க்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.


அவ்வாறு கறுப்புப் பட்டியலில் சேர்க்கப்படும் வாகனங்களுக்கு வருவாய் உரிமத்தைப் பெற்றுக்கொள்வதிலும், வாகன உரிமையை வேறொருவருக்கு மாற்றுவதிலும் கடுமையான கட்டுப்பாடுகள் விதிக்கப்படவுள்ளன.


இதனால், அதிகளவு புகையை வெளியேற்றும் வாகனங்களின் உரிமையாளர்கள் தமது வாகனங்களை உரிய முறையில் பராமரித்து, புகை வெளியேற்றத் தரநிலைகளைப் பேண வேண்டிய அவசியம் ஏற்பட்டுள்ளது.


இரகசியமாகக் கண்காணிக்கப்படும் வாகனங்கள் – சிக்கினால் கடும் கட்டுப்பாடுகள் புதிய நடைமுறை அறிமுகம் நாட்டில் அதிகளவு புகையை வெளியேற்றும் வாகனங்களைக் கண்டறிவதற்காக, மோட்டார் போக்குவரத்துத் திணைக்களம் புதிய விசேட கண்காணிப்பு நடவடிக்கையொன்றை முன்னெடுக்கவுள்ளது.இதற்கமைய, வாகனப் புகை வெளியேற்றப் பரிசோதனைத் திட்டத்தின் கீழ் விசேட புகைப்படப் பிரிவொன்றை நிறுவ நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.குறித்த பிரிவின் ஊடாக, பொதுச் சாலைகளில் பயணிக்கும் வாகனங்கள் இரகசியமாகக் கண்காணிக்கப்படவுள்ளன.இதற்காக நாடளாவிய ரீதியில் முக்கிய நகரங்களின் பிரதான இடங்களில் அதிகாரிகள் பணியமர்த்தப்படவுள்ளதுடன், அதிகளவு புகையை வெளியேற்றும் வாகனங்கள் புகைப்படம் எடுக்கப்படவுள்ளன.இவ்வாறு பெறப்படும் புகைப்பட ஆதாரங்களின் அடிப்படையில், சம்பந்தப்பட்ட வாகன உரிமையாளர்களுக்கு அதே நாளில் வாகனங்களைப் பராமரிப்பதற்கான உத்தரவுகள் வழங்கப்படவுள்ளன.குறித்த உத்தரவுகளைப் பெறும் வாகன உரிமையாளர்கள், தமது வாகனங்களில் காணப்படும் குறைபாடுகளைச் சரிசெய்து, நிர்ணயிக்கப்பட்ட காலப்பகுதிக்குள் வெரஹெரவில் அமைந்துள்ள வாகனப் புகை வெளியேற்றப் பரிசோதனை மையத்தில் பரிசோதனைக்காகச் சமர்ப்பிக்க வேண்டும்.இந்த உத்தரவுகளைப் பின்பற்றத் தவறும் வாகனங்கள், மோட்டார் போக்குவரத்துத் திணைக்களத்தின் தரவுத்தளத்தில் கறுப்புப் பட்டியலில் சேர்க்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.அவ்வாறு கறுப்புப் பட்டியலில் சேர்க்கப்படும் வாகனங்களுக்கு வருவாய் உரிமத்தைப் பெற்றுக்கொள்வதிலும், வாகன உரிமையை வேறொருவருக்கு மாற்றுவதிலும் கடுமையான கட்டுப்பாடுகள் விதிக்கப்படவுள்ளன.இதனால், அதிகளவு புகையை வெளியேற்றும் வாகனங்களின் உரிமையாளர்கள் தமது வாகனங்களை உரிய முறையில் பராமரித்து, புகை வெளியேற்றத் தரநிலைகளைப் பேண வேண்டிய அவசியம் ஏற்பட்டுள்ளது.

Advertisement

Advertisement

Advertisement