• May 20 2026

தாய்வானை தாக்கிய ரகசா சூறாவளி; 14 பேர் உயிரிழப்பு! 124 பேர் மாயம்

Chithra / Sep 24th 2025, 12:11 pm
image

தாய்வானின் பிரபலமான சுற்றுலா மையமான கிழக்கு மாகாணமான ஹுவாலியனில் ரகசா  சூறாவளி தாக்கி 14 பேர் உயிரிழந்துள்ளனர்.

சூறாவளியின் போது ஏற்பட்ட கடும் மழையினால் மலைகளில் உள்ள தடுப்பு வாவியில் நீர் நிரம்பி வழிந்து நகரத்தை வெள்ளத்தில் மூழ்கடித்ததில் 124 பேரைக் காணவில்லை என தீயணைப்புத் திணைக்களம் இன்று தெரிவித்துள்ளது.

திங்கட்கிழமை முதல் தாய்வானை தாக்கிய சூறாவளி தற்போது சீனாவின் தெற்கு கடற்கரையையும் ஆசிய நிதி மையமான ஹொங்கொங்கையும் தாக்கியுள்ளது.

கிழக்கு பகுதியில் பெய்த கடும் மழையால் ஏற்பட்ட மண்சரிவுகளால் உருவான தடுப்பு வாவி நேற்று பிற்பகல் அதன் கரைகளை உடைத்து குவாங்டாங் நகருக்குள் வெள்ளம் நீர் வடிந்தோடியுள்ளது. சுனாமி போன்று வெள்ளம் நீர் தாக்கியது என தெரிவிக்கப்படுகிறது.

இதேவேளை, இந்த சூறாவளி காரணமாக தெற்கு சீனாவின் குவாங்டாங் மாகாணத்திலிருந்து சுமார் 370,000 பேர் வெளியேற்றப்பட்டுள்ளனர்.

தெற்கு சீன பகுதியில் அடுத்த சில மணி நேரங்களுக்குள் பலத்த மழை பெய்யக்கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது, இதன் காரணமாக பாரிய மண்சரிவுகள் ஏற்பட வாய்ப்புள்ளதாக எதிர்கூறப்பட்டுள்ளது.

தாய்வானை தாக்கிய ரகசா சூறாவளி; 14 பேர் உயிரிழப்பு 124 பேர் மாயம் தாய்வானின் பிரபலமான சுற்றுலா மையமான கிழக்கு மாகாணமான ஹுவாலியனில் ரகசா  சூறாவளி தாக்கி 14 பேர் உயிரிழந்துள்ளனர்.சூறாவளியின் போது ஏற்பட்ட கடும் மழையினால் மலைகளில் உள்ள தடுப்பு வாவியில் நீர் நிரம்பி வழிந்து நகரத்தை வெள்ளத்தில் மூழ்கடித்ததில் 124 பேரைக் காணவில்லை என தீயணைப்புத் திணைக்களம் இன்று தெரிவித்துள்ளது.திங்கட்கிழமை முதல் தாய்வானை தாக்கிய சூறாவளி தற்போது சீனாவின் தெற்கு கடற்கரையையும் ஆசிய நிதி மையமான ஹொங்கொங்கையும் தாக்கியுள்ளது.கிழக்கு பகுதியில் பெய்த கடும் மழையால் ஏற்பட்ட மண்சரிவுகளால் உருவான தடுப்பு வாவி நேற்று பிற்பகல் அதன் கரைகளை உடைத்து குவாங்டாங் நகருக்குள் வெள்ளம் நீர் வடிந்தோடியுள்ளது. சுனாமி போன்று வெள்ளம் நீர் தாக்கியது என தெரிவிக்கப்படுகிறது.இதேவேளை, இந்த சூறாவளி காரணமாக தெற்கு சீனாவின் குவாங்டாங் மாகாணத்திலிருந்து சுமார் 370,000 பேர் வெளியேற்றப்பட்டுள்ளனர்.தெற்கு சீன பகுதியில் அடுத்த சில மணி நேரங்களுக்குள் பலத்த மழை பெய்யக்கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது, இதன் காரணமாக பாரிய மண்சரிவுகள் ஏற்பட வாய்ப்புள்ளதாக எதிர்கூறப்பட்டுள்ளது.

Advertisement

Advertisement

Advertisement