• Apr 18 2026

ஹோர்முஸ் ஜலசந்திக்கு நானும் அயதுல்லாவும் தான் ராஜா என முழங்கிய டிரம்ப்;ஈரானின் நக்கல் பதிவு வைரல்!

Ziya / Mar 24th 2026, 11:56 am
image

உலகளாவிய எரிசக்திப் போக்குவரத்தின் முக்கிய மையமான ஹோர்முஸ் ஜலசந்தியை (Strait of Hormuz) யார் கட்டுப்படுத்துவது என்பது தொடர்பாக, அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் மற்றும் ஈரானுக்கு இடையே ஒரு சுவாரஸ்யமான சமூக வலைத்தள மோதல் வெடித்துள்ளது.

ஈரான் மீதான தாக்குதல்களை 5 நாட்களுக்கு ஒத்திவைப்பதாக அறிவித்த டொனால்ட் டிரம்ப், "ஹோர்முஸ் ஜலசந்தியை நானும் அயதுல்லாவும் (ஈரானின் உச்ச தலைவர்) மட்டுமே கட்டுப்படுத்த முடியும்" எனத் தெரிவித்திருந்தார். 

தன்னை ஈரானின் அத்மீகத் தலைவருக்கு இணையான ஒரு சக்தியாக அவர் சித்தரித்துக் கொண்டது சர்வதேச அரசியலில் உற்று நோக்கப்பட்டது.

டிரம்பின் இந்தக் கருத்திற்கு தென்னாபிரிக்கா   ஈரான் தூதரகம்  நகைச்சுவையாக பதிலளித்துள்ளது.

ஒரு சிறுவர்கள் விளையாடும் 'பொம்மை ஸ்டீயரிங்' (Toy Steering Wheel) சக்கரத்தின் புகைப்படத்தைப் பகிர்ந்து,இவ்வாறு கட்டுப்படுத்துவார் என நகைச்சுவை கிண்டலாக பதிலளித்துள்ளது

ஜலசந்தியின் உண்மையான அதிகாரம் டிரம்பின் கைகளில் இல்லை என்பதையும், அவர் ஒரு பொம்மையைப் போலச் செயல்படுவதையும் ஈரான் இதன் மூலம் மறைமுகமாகச் சுட்டிக்காட்டியுள்ளது.


ஹோர்முஸ் ஜலசந்திக்கு நானும் அயதுல்லாவும் தான் ராஜா என முழங்கிய டிரம்ப்;ஈரானின் நக்கல் பதிவு வைரல் உலகளாவிய எரிசக்திப் போக்குவரத்தின் முக்கிய மையமான ஹோர்முஸ் ஜலசந்தியை (Strait of Hormuz) யார் கட்டுப்படுத்துவது என்பது தொடர்பாக, அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் மற்றும் ஈரானுக்கு இடையே ஒரு சுவாரஸ்யமான சமூக வலைத்தள மோதல் வெடித்துள்ளது.ஈரான் மீதான தாக்குதல்களை 5 நாட்களுக்கு ஒத்திவைப்பதாக அறிவித்த டொனால்ட் டிரம்ப், "ஹோர்முஸ் ஜலசந்தியை நானும் அயதுல்லாவும் (ஈரானின் உச்ச தலைவர்) மட்டுமே கட்டுப்படுத்த முடியும்" எனத் தெரிவித்திருந்தார். தன்னை ஈரானின் அத்மீகத் தலைவருக்கு இணையான ஒரு சக்தியாக அவர் சித்தரித்துக் கொண்டது சர்வதேச அரசியலில் உற்று நோக்கப்பட்டது.டிரம்பின் இந்தக் கருத்திற்கு தென்னாபிரிக்கா   ஈரான் தூதரகம்  நகைச்சுவையாக பதிலளித்துள்ளது.ஒரு சிறுவர்கள் விளையாடும் 'பொம்மை ஸ்டீயரிங்' (Toy Steering Wheel) சக்கரத்தின் புகைப்படத்தைப் பகிர்ந்து,இவ்வாறு கட்டுப்படுத்துவார் என நகைச்சுவை கிண்டலாக பதிலளித்துள்ளதுஜலசந்தியின் உண்மையான அதிகாரம் டிரம்பின் கைகளில் இல்லை என்பதையும், அவர் ஒரு பொம்மையைப் போலச் செயல்படுவதையும் ஈரான் இதன் மூலம் மறைமுகமாகச் சுட்டிக்காட்டியுள்ளது.

Advertisement

Advertisement

Advertisement