வங்காள விரிகுடாவில் உருவான தாழமுக்கம் இன்று மாலை அல்லது நாளை அதிகாலை வடக்கு மாகாணத்திற்கு மிக அருகாக நிலைகொள்ளும் என எதிர்பார்க்கப்படுவதாக யாழ்ப்பாண பல்கலைக்கழக புவியியற்துறை சிரேஷ்ட விரிவுரையாளர் நாகமுத்து பிரதீபராஜா அறிவித்துள்ளார்.
அவரால் இன்று (21) வெளியிடப்பட்ட வானிலை அறிக்கையில் இதனைத் தெரிவித்துள்ளார். இது தொடர்பில் அவர் வெளியிட்ட அறிக்கையில் உள்ளதாவது,
வங்காள விரிகுடாவில் நேற்றைய தினம் உருவான தாழமுக்கம் வடக்கு -வடமேற்கு திசை நோக்கி நகர்ந்து வருகின்றது.
இதன் காரணமாக தற்போது வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களின் பல பகுதிகளுக்கும் கிடைத்து வரும் கனமழை எதிர்வரும் 23 ஆம் திகதி வரை தொடரும் வாய்ப்புள்ளது.
எனவே வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களின் மக்கள் இது தொடர்பாக அவதானமாக இருப்பது அவசியம் என்று எச்சரிக்கை விடுத்துள்ளார்.
இன்று மாலை அல்லது நாளை வடக்கின் அருகே தாழமுக்கம்; அடுத்த பல மணித்தியாலங்கள் தொடரும் கனமழை வங்காள விரிகுடாவில் உருவான தாழமுக்கம் இன்று மாலை அல்லது நாளை அதிகாலை வடக்கு மாகாணத்திற்கு மிக அருகாக நிலைகொள்ளும் என எதிர்பார்க்கப்படுவதாக யாழ்ப்பாண பல்கலைக்கழக புவியியற்துறை சிரேஷ்ட விரிவுரையாளர் நாகமுத்து பிரதீபராஜா அறிவித்துள்ளார்.அவரால் இன்று (21) வெளியிடப்பட்ட வானிலை அறிக்கையில் இதனைத் தெரிவித்துள்ளார். இது தொடர்பில் அவர் வெளியிட்ட அறிக்கையில் உள்ளதாவது, வங்காள விரிகுடாவில் நேற்றைய தினம் உருவான தாழமுக்கம் வடக்கு -வடமேற்கு திசை நோக்கி நகர்ந்து வருகின்றது. இதன் காரணமாக தற்போது வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களின் பல பகுதிகளுக்கும் கிடைத்து வரும் கனமழை எதிர்வரும் 23 ஆம் திகதி வரை தொடரும் வாய்ப்புள்ளது. எனவே வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களின் மக்கள் இது தொடர்பாக அவதானமாக இருப்பது அவசியம் என்று எச்சரிக்கை விடுத்துள்ளார்.