• Jul 19 2026

சி.டி. விக்ரமரத்னவின் பூதவுடலுக்கு ரணில், ஷவேந்திர சில்வா இறுதி அஞ்சலி

Chithra / Jul 19th 2026, 12:26 pm
image


முன்னாள் பொலிஸ்மா அதிபர் சி.டி. விக்ரமரத்னவின் பூதவுடல் வைக்கப்பட்டுள்ள கொழும்பிலுள்ள தனியார் மலர்சாலைக்கு சென்ற முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க, அன்னாரின் பூதவுடலுக்கு இறுதி அஞ்சலி செலுத்தினார்.


இதேவேளை, முன்னாள் இராணுவத் தளபதி ஷவேந்திர சில்வாவும் சி.டி. விக்ரமரத்னவின் பூதவுடலுக்கு இறுதி மரியாதை செலுத்தினார்.


நாட்டின் 35 ஆவது பொலிஸ்மா அதிபராகப் பணியாற்றிய சி.டி. விக்ரமரத்ன, கடந்த 17 ஆம் திகதி காலை மாலபே, தலாஹேன பகுதியில் அமைந்துள்ள அவரது வீட்டில் துப்பாக்கிச் சூட்டுக் காயங்களுடன் உயிரிழந்த நிலையில் மீட்கப்பட்டார்.


அவரது மரணம் தற்கொலையாக இருக்கலாம் என பொலிஸார் சந்தேகம் வெளியிட்டுள்ள நிலையில், தனது பாதுகாப்பு உத்தியோகத்தரின் கைத்துப்பாக்கியைப் பயன்படுத்தி அவர் தன்னைத்தானே சுட்டுக்கொண்டிருக்கலாம் என ஆரம்பகட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது.


அவரது மார்பின் வலது பக்கத்தில் துப்பாக்கிச் சூட்டுக் காயம் காணப்பட்டதாகவும் விசாரணைகளில் தெரியவந்துள்ளது.


இந்நிலையில், முன்னாள் பொலிஸ்மா அதிபர் சி.டி. விக்ரமரத்னவின் இறுதிக்கிரியைகள் நாளை (20) பொரளை பொது மயானத்தில் முழுமையான பொலிஸ் மரியாதையுடன் இடம்பெறும் என பொலிஸ் ஊடகப் பேச்சாளர் உதவி பொலிஸ் அத்தியட்சகர் எஃப். யூ. வுட்லர் தெரிவித்துள்ளார்.


எனினும், பொலிஸ் ஒழுக்கக் கோவைகளின்படி தற்கொலை செய்துகொள்ளும் பொலிஸ் அதிகாரிகளுக்கு பொலிஸ் மரியாதை வழங்கப்படமாட்டாது என உயர் பொலிஸ் அதிகாரி ஒருவர் குறிப்பிட்டிருந்தார்.

 

இது தொடர்பில் கருத்து தெரிவித்த பொலிஸ் ஊடகப் பேச்சாளர், மரணம் தொடர்பாக இரண்டு பொலிஸ் குழுக்கள் விசாரணைகளை முன்னெடுத்து வருவதாகவும், பிரேதப் பரிசோதனை அறிக்கை இதுவரை கிடைக்கவில்லை எனவும் தெரிவித்தார்.


சம்பவ இடத்தில் கண்டெடுக்கப்பட்ட கைத்துப்பாக்கி மேலதிக பரிசோதனைகளுக்காக அரசாங்க இரசாயன பகுப்பாய்வாளர் திணைக்களத்திடம் ஒப்படைக்கப்படவுள்ளதாக மேல் மாகாண தெற்கு வலய குற்றத்தடுப்புப் பிரிவுக்குப் பொறுப்பான பிரதி பொலிஸ்மா அதிபர் சமந்த விஜேசேகர தெரிவித்துள்ளார்.


நீதிமன்றத்தில் விடயங்களை அறிக்கையிட்ட பின்னர், குறித்த கைத்துப்பாக்கியை  நாளை பகுப்பாய்வாளரிடம் ஒப்படைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் அவர் கூறினார்.


மேலும், சம்பவத்திற்கு முன்னதாக சி.டி. விக்ரமரத்னவின் மாலபே இல்லத்திற்கு வருகை தந்த நபர்கள் தொடர்பிலும், வீட்டின் சிசிடிவி காட்சிகளை அடிப்படையாகக் கொண்டும் பொலிஸார் விரிவான விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.


இந்தச் சம்பவம் தொடர்பான விசாரணையின் ஒரு பகுதியாக, சி.டி. விக்ரமரத்னவின் மனைவியிடமும் பொலிஸார் வாக்குமூலம் பெற்றுள்ளனர்.


இதன்போது, தனது மகனின் நீதிமன்ற விவகாரம் காரணமாக சி.டி. விக்ரமரத்ன அண்மைக் காலமாக மிகுந்த மன உளைச்சலில் இருந்ததாக அவர் தெரிவித்துள்ளதாக கூறப்படுகிறது.


இந்த மரணம் தொடர்பான விசாரணைகளை மேல் மாகாண தெற்கு வலய குற்றத்தடுப்புப் பிரிவினரும் மாலபே பொலிஸாரும் இணைந்து முன்னெடுத்து வருகின்றனர்.

சி.டி. விக்ரமரத்னவின் பூதவுடலுக்கு ரணில், ஷவேந்திர சில்வா இறுதி அஞ்சலி முன்னாள் பொலிஸ்மா அதிபர் சி.டி. விக்ரமரத்னவின் பூதவுடல் வைக்கப்பட்டுள்ள கொழும்பிலுள்ள தனியார் மலர்சாலைக்கு சென்ற முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க, அன்னாரின் பூதவுடலுக்கு இறுதி அஞ்சலி செலுத்தினார்.இதேவேளை, முன்னாள் இராணுவத் தளபதி ஷவேந்திர சில்வாவும் சி.டி. விக்ரமரத்னவின் பூதவுடலுக்கு இறுதி மரியாதை செலுத்தினார்.நாட்டின் 35 ஆவது பொலிஸ்மா அதிபராகப் பணியாற்றிய சி.டி. விக்ரமரத்ன, கடந்த 17 ஆம் திகதி காலை மாலபே, தலாஹேன பகுதியில் அமைந்துள்ள அவரது வீட்டில் துப்பாக்கிச் சூட்டுக் காயங்களுடன் உயிரிழந்த நிலையில் மீட்கப்பட்டார்.அவரது மரணம் தற்கொலையாக இருக்கலாம் என பொலிஸார் சந்தேகம் வெளியிட்டுள்ள நிலையில், தனது பாதுகாப்பு உத்தியோகத்தரின் கைத்துப்பாக்கியைப் பயன்படுத்தி அவர் தன்னைத்தானே சுட்டுக்கொண்டிருக்கலாம் என ஆரம்பகட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது.அவரது மார்பின் வலது பக்கத்தில் துப்பாக்கிச் சூட்டுக் காயம் காணப்பட்டதாகவும் விசாரணைகளில் தெரியவந்துள்ளது.இந்நிலையில், முன்னாள் பொலிஸ்மா அதிபர் சி.டி. விக்ரமரத்னவின் இறுதிக்கிரியைகள் நாளை (20) பொரளை பொது மயானத்தில் முழுமையான பொலிஸ் மரியாதையுடன் இடம்பெறும் என பொலிஸ் ஊடகப் பேச்சாளர் உதவி பொலிஸ் அத்தியட்சகர் எஃப். யூ. வுட்லர் தெரிவித்துள்ளார்.எனினும், பொலிஸ் ஒழுக்கக் கோவைகளின்படி தற்கொலை செய்துகொள்ளும் பொலிஸ் அதிகாரிகளுக்கு பொலிஸ் மரியாதை வழங்கப்படமாட்டாது என உயர் பொலிஸ் அதிகாரி ஒருவர் குறிப்பிட்டிருந்தார். இது தொடர்பில் கருத்து தெரிவித்த பொலிஸ் ஊடகப் பேச்சாளர், மரணம் தொடர்பாக இரண்டு பொலிஸ் குழுக்கள் விசாரணைகளை முன்னெடுத்து வருவதாகவும், பிரேதப் பரிசோதனை அறிக்கை இதுவரை கிடைக்கவில்லை எனவும் தெரிவித்தார்.சம்பவ இடத்தில் கண்டெடுக்கப்பட்ட கைத்துப்பாக்கி மேலதிக பரிசோதனைகளுக்காக அரசாங்க இரசாயன பகுப்பாய்வாளர் திணைக்களத்திடம் ஒப்படைக்கப்படவுள்ளதாக மேல் மாகாண தெற்கு வலய குற்றத்தடுப்புப் பிரிவுக்குப் பொறுப்பான பிரதி பொலிஸ்மா அதிபர் சமந்த விஜேசேகர தெரிவித்துள்ளார்.நீதிமன்றத்தில் விடயங்களை அறிக்கையிட்ட பின்னர், குறித்த கைத்துப்பாக்கியை  நாளை பகுப்பாய்வாளரிடம் ஒப்படைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் அவர் கூறினார்.மேலும், சம்பவத்திற்கு முன்னதாக சி.டி. விக்ரமரத்னவின் மாலபே இல்லத்திற்கு வருகை தந்த நபர்கள் தொடர்பிலும், வீட்டின் சிசிடிவி காட்சிகளை அடிப்படையாகக் கொண்டும் பொலிஸார் விரிவான விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.இந்தச் சம்பவம் தொடர்பான விசாரணையின் ஒரு பகுதியாக, சி.டி. விக்ரமரத்னவின் மனைவியிடமும் பொலிஸார் வாக்குமூலம் பெற்றுள்ளனர்.இதன்போது, தனது மகனின் நீதிமன்ற விவகாரம் காரணமாக சி.டி. விக்ரமரத்ன அண்மைக் காலமாக மிகுந்த மன உளைச்சலில் இருந்ததாக அவர் தெரிவித்துள்ளதாக கூறப்படுகிறது.இந்த மரணம் தொடர்பான விசாரணைகளை மேல் மாகாண தெற்கு வலய குற்றத்தடுப்புப் பிரிவினரும் மாலபே பொலிஸாரும் இணைந்து முன்னெடுத்து வருகின்றனர்.

Advertisement

Advertisement

Advertisement