• Jul 20 2026

செம்மணி மனித புதைகுழி அகழாய்வு: அமர்ந்த நிலையில் புதைக்கப்பட்ட எலும்புக்கூடு கண்டுபிடிப்பு

Chithra / Jul 19th 2026, 3:12 pm
image


யாழ்ப்பாணம் செம்மணி மனித புதைகுழி அகழாய்வில், கால்கள் மடக்கப்பட்ட அமர்ந்த நிலையில் புதைக்கப்பட்டிருந்த மனித எலும்புக்கூடு ஒன்று மீண்டும் அடையாளம் காணப்பட்டுள்ளது. 


யாழ்ப்பாணம் செம்மணி மனித புதைகுழி அகழாய்வின் மூன்றாம் கட்டத்தின் 37ஆம் நாள் பணிகள் இன்று (19), யாழ்ப்பாண நீதவான் நீதிமன்றத்தின் கண்காணிப்பில் முன்னெடுக்கப்பட்டன.


இன்றைய அகழாய்வின் போது மேலும் 9 மனித எலும்புக்கூடுகள் சுத்தம் செய்யப்பட்டு அடையாளம் காணப்பட்டன.


இதன் மூலம், மூன்று கட்டங்களாக முன்னெடுக்கப்பட்டுள்ள செம்மணி மனித புதைகுழி அகழாய்வில் இதுவரை மொத்தம் 446 மனித எலும்புக்கூடுகள் சுத்தம் செய்யப்பட்டு அடையாளம் காணப்பட்டுள்ளன. அவற்றில் 434 மனித எலும்புக்கூடுகள் முழுமையாக அகழ்ந்து எடுக்கப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.


மேலும், 429ஆம் இலக்க மனித எலும்புக்கூடு, கால்கள் மடக்கப்பட்ட அமர்ந்த நிலையில் புதைக்கப்பட்டிருந்தமை இன்று உறுதிப்படுத்தப்பட்டது.


கடந்த ஆண்டு நடைபெற்ற இரண்டாம் கட்ட அகழாய்வின்போதும் இதேபோன்ற நிலையில் புதைக்கப்பட்டிருந்த ஒரு மனித எலும்புக்கூடு கண்டுபிடிக்கப்பட்டிருந்தது. 


இதனால், செம்மணி மனித புதைகுழி அகழாய்வில் இவ்வாறான அமைப்பில் புதைக்கப்பட்ட மனித எலும்புக்கூடு அடையாளம் காணப்படுவது இது இரண்டாவது சந்தர்ப்பமாக பதிவாகியுள்ளது.


செம்மணி மனித புதைகுழி அகழாய்வு: அமர்ந்த நிலையில் புதைக்கப்பட்ட எலும்புக்கூடு கண்டுபிடிப்பு யாழ்ப்பாணம் செம்மணி மனித புதைகுழி அகழாய்வில், கால்கள் மடக்கப்பட்ட அமர்ந்த நிலையில் புதைக்கப்பட்டிருந்த மனித எலும்புக்கூடு ஒன்று மீண்டும் அடையாளம் காணப்பட்டுள்ளது. யாழ்ப்பாணம் செம்மணி மனித புதைகுழி அகழாய்வின் மூன்றாம் கட்டத்தின் 37ஆம் நாள் பணிகள் இன்று (19), யாழ்ப்பாண நீதவான் நீதிமன்றத்தின் கண்காணிப்பில் முன்னெடுக்கப்பட்டன.இன்றைய அகழாய்வின் போது மேலும் 9 மனித எலும்புக்கூடுகள் சுத்தம் செய்யப்பட்டு அடையாளம் காணப்பட்டன.இதன் மூலம், மூன்று கட்டங்களாக முன்னெடுக்கப்பட்டுள்ள செம்மணி மனித புதைகுழி அகழாய்வில் இதுவரை மொத்தம் 446 மனித எலும்புக்கூடுகள் சுத்தம் செய்யப்பட்டு அடையாளம் காணப்பட்டுள்ளன. அவற்றில் 434 மனித எலும்புக்கூடுகள் முழுமையாக அகழ்ந்து எடுக்கப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.மேலும், 429ஆம் இலக்க மனித எலும்புக்கூடு, கால்கள் மடக்கப்பட்ட அமர்ந்த நிலையில் புதைக்கப்பட்டிருந்தமை இன்று உறுதிப்படுத்தப்பட்டது.கடந்த ஆண்டு நடைபெற்ற இரண்டாம் கட்ட அகழாய்வின்போதும் இதேபோன்ற நிலையில் புதைக்கப்பட்டிருந்த ஒரு மனித எலும்புக்கூடு கண்டுபிடிக்கப்பட்டிருந்தது. இதனால், செம்மணி மனித புதைகுழி அகழாய்வில் இவ்வாறான அமைப்பில் புதைக்கப்பட்ட மனித எலும்புக்கூடு அடையாளம் காணப்படுவது இது இரண்டாவது சந்தர்ப்பமாக பதிவாகியுள்ளது.

Advertisement

Advertisement

Advertisement