• Oct 27 2026

யானைக்குப் பழம் கொடுக்கச் சென்றவருக்கு நேர்ந்த விபரீதம்! விகாரையில் நடந்த அதிர்ச்சிச் சம்பவம்

Chithra / Oct 27th 2026, 11:27 am
image


வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகளுடன் விகாரைக்குச் சென்ற சுற்றுலா வழிகாட்டி ஒருவருக்கு எதிர்பாராத விதமாக நேர்ந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.


அளுத்கம கந்தே விகாரைக்கு நேற்று பிற்பகல் வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகள் குழுவொன்று வான் ஒன்றில் சென்றுள்ளது.


அவர்களுடன் சென்ற சுற்றுலா வழிகாட்டி, விகாரையில் இருந்த யானைக்கு பழத்தட்டு ஒன்றை வழங்க முயன்றுள்ளார்.


ஆனால், அப்போது எதிர்பாராத விதமாக அந்த யானை அவரைத் தாக்கியுள்ளது.


இதில் படுகாயமடைந்த அவர் பலப்பிட்டிய ஆதார வைத்தியசாலைக்குக் கொண்டு செல்லப்பட்டுள்ளார்.


எனினும், வைத்தியசாலையில் அனுமதிக்கப்படும் போதே அவர் உயிரிழந்திருந்ததாகத் தெரிவிக்கப்படுகிறது.


உயிரிழந்தவர் அஹுங்கல்ல பகுதியைச் சேர்ந்த 34 வயதுடைய திருமணமாகாத சுற்றுலா வழிகாட்டி என அடையாளம் காணப்பட்டுள்ளார்.


அவரது சடலம் தற்போது பலப்பிட்டிய ஆதார வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது.


யானைக்குப் பழம் கொடுக்கச் சென்றவருக்கு நேர்ந்த விபரீதம் விகாரையில் நடந்த அதிர்ச்சிச் சம்பவம் வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகளுடன் விகாரைக்குச் சென்ற சுற்றுலா வழிகாட்டி ஒருவருக்கு எதிர்பாராத விதமாக நேர்ந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.அளுத்கம கந்தே விகாரைக்கு நேற்று பிற்பகல் வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகள் குழுவொன்று வான் ஒன்றில் சென்றுள்ளது.அவர்களுடன் சென்ற சுற்றுலா வழிகாட்டி, விகாரையில் இருந்த யானைக்கு பழத்தட்டு ஒன்றை வழங்க முயன்றுள்ளார்.ஆனால், அப்போது எதிர்பாராத விதமாக அந்த யானை அவரைத் தாக்கியுள்ளது.இதில் படுகாயமடைந்த அவர் பலப்பிட்டிய ஆதார வைத்தியசாலைக்குக் கொண்டு செல்லப்பட்டுள்ளார்.எனினும், வைத்தியசாலையில் அனுமதிக்கப்படும் போதே அவர் உயிரிழந்திருந்ததாகத் தெரிவிக்கப்படுகிறது.உயிரிழந்தவர் அஹுங்கல்ல பகுதியைச் சேர்ந்த 34 வயதுடைய திருமணமாகாத சுற்றுலா வழிகாட்டி என அடையாளம் காணப்பட்டுள்ளார்.அவரது சடலம் தற்போது பலப்பிட்டிய ஆதார வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது.

Advertisement

Advertisement

Advertisement