• Oct 27 2026

வயல்களில் அழுகும் மரக்கறிகள் – நுவரெலியா விவசாயிகளுக்கு ஏற்பட்ட பெரும் நெருக்கடி!

Chithra / Oct 27th 2026, 11:23 am
image


நுவரெலியா மாவட்டத்தில் தொடர்ச்சியாகப் பெய்துவரும் கனமழை காரணமாக மரக்கறிப் பயிர்ச்செய்கை கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளதுடன், விவசாயிகள் பெரும் பொருளாதார நஷ்டங்களை எதிர்கொண்டுள்ளனர்.


குறிப்பாக, லீக்ஸ், கோவா, கரட் உள்ளிட்ட மரக்கறிப் பயிர்கள் மஞ்சள் நிறமடைதல், அழுகுதல் மற்றும் விளைச்சல் குறைதல் போன்ற பாதிப்புகளுக்கு உள்ளாகியுள்ளன. அறுவடைக்குத் தயாராக இருந்த பயிர்களும் சேதமடைந்துள்ளதால், முதலீடு செய்த பணத்தைக்கூட மீளப் பெற்றுக்கொள்ள முடியாத நிலை ஏற்பட்டுள்ளதாக விவசாயிகள் கவலை தெரிவிக்கின்றனர்.


நானுஓயா பகுதியைச் சேர்ந்த விவசாயி ஒருவர், லீக்ஸ் பயிர்ச்செய்கைக்காக சுமார் 80,000 ரூபாய் செலவிட்ட போதிலும், கனமழையால் ஏற்பட்ட சேதங்கள் காரணமாக 10,000 ரூபாய் மட்டுமே வருமானமாகக் கிடைத்ததாகத் தெரிவித்துள்ளார்.


மேலும், சில விவசாய நிலங்களில் அமைந்துள்ள கட்டடங்களும் மழையினால் பகுதியளவில் இடிந்து சேதமடைந்துள்ளன. இதனால், அடுத்தகட்டப் பயிர்ச்செய்கையை ஆரம்பிப்பதற்குத் தேவையான நிதியின்றி விவசாயிகள் சிரமங்களை எதிர்கொண்டுள்ளனர்.


இந்நிலையில், நுவரெலியா மாவட்டத்தில் மழையினால் பாதிக்கப்பட்ட அனைத்து விவசாயிகளுக்கும் அரசாங்கம் உரிய இழப்பீட்டுத் தொகையை வழங்க வேண்டுமெனக் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.


கமநல சேவைகள் திணைக்களத்தின் ஊடாகப் பாதிக்கப்பட்ட விவசாயிகளை அடையாளம் கண்டு, அவர்களது விவசாய நிலங்களை நேரடியாகப் பார்வையிட்டு, ஏற்பட்டுள்ள சேதங்களை மதிப்பீடு செய்ய வேண்டும் எனவும் வலியுறுத்தப்பட்டுள்ளது.

வயல்களில் அழுகும் மரக்கறிகள் – நுவரெலியா விவசாயிகளுக்கு ஏற்பட்ட பெரும் நெருக்கடி நுவரெலியா மாவட்டத்தில் தொடர்ச்சியாகப் பெய்துவரும் கனமழை காரணமாக மரக்கறிப் பயிர்ச்செய்கை கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளதுடன், விவசாயிகள் பெரும் பொருளாதார நஷ்டங்களை எதிர்கொண்டுள்ளனர்.குறிப்பாக, லீக்ஸ், கோவா, கரட் உள்ளிட்ட மரக்கறிப் பயிர்கள் மஞ்சள் நிறமடைதல், அழுகுதல் மற்றும் விளைச்சல் குறைதல் போன்ற பாதிப்புகளுக்கு உள்ளாகியுள்ளன. அறுவடைக்குத் தயாராக இருந்த பயிர்களும் சேதமடைந்துள்ளதால், முதலீடு செய்த பணத்தைக்கூட மீளப் பெற்றுக்கொள்ள முடியாத நிலை ஏற்பட்டுள்ளதாக விவசாயிகள் கவலை தெரிவிக்கின்றனர்.நானுஓயா பகுதியைச் சேர்ந்த விவசாயி ஒருவர், லீக்ஸ் பயிர்ச்செய்கைக்காக சுமார் 80,000 ரூபாய் செலவிட்ட போதிலும், கனமழையால் ஏற்பட்ட சேதங்கள் காரணமாக 10,000 ரூபாய் மட்டுமே வருமானமாகக் கிடைத்ததாகத் தெரிவித்துள்ளார்.மேலும், சில விவசாய நிலங்களில் அமைந்துள்ள கட்டடங்களும் மழையினால் பகுதியளவில் இடிந்து சேதமடைந்துள்ளன. இதனால், அடுத்தகட்டப் பயிர்ச்செய்கையை ஆரம்பிப்பதற்குத் தேவையான நிதியின்றி விவசாயிகள் சிரமங்களை எதிர்கொண்டுள்ளனர்.இந்நிலையில், நுவரெலியா மாவட்டத்தில் மழையினால் பாதிக்கப்பட்ட அனைத்து விவசாயிகளுக்கும் அரசாங்கம் உரிய இழப்பீட்டுத் தொகையை வழங்க வேண்டுமெனக் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.கமநல சேவைகள் திணைக்களத்தின் ஊடாகப் பாதிக்கப்பட்ட விவசாயிகளை அடையாளம் கண்டு, அவர்களது விவசாய நிலங்களை நேரடியாகப் பார்வையிட்டு, ஏற்பட்டுள்ள சேதங்களை மதிப்பீடு செய்ய வேண்டும் எனவும் வலியுறுத்தப்பட்டுள்ளது.

Advertisement

Advertisement

Advertisement