நாட்டில் நிலவும் சீரற்ற காலநிலை காரணமாக புத்தளம் மாவட்டத்தில் ஏற்பட்டுள்ள கடுமையான வெள்ளப்பெருக்கைத் தொடர்ந்து, உடப்பு முத்துவாரம் அறுவாய் கடலுக்குத் திறந்துவிடப்பட்டுள்ளது.
தொடர்ச்சியாகப் பெய்துவரும் கனமழையால் புத்தளம் மாவட்டத்தின் பல பகுதிகளில் வெள்ளநீர் தேங்கியுள்ள நிலையில், அருகிலுள்ள கிராமங்களை வெள்ள அபாயத்திலிருந்து பாதுகாக்கும் நோக்கில் இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.
அதன்படி, நேற்று (26) திங்கட்கிழமை மாலை உடப்பு முத்துவாரம் அறுவாய் திறந்துவிடப்பட்டதையடுத்து, தேங்கியிருந்த வெள்ளநீர் கடலை நோக்கிப் பாய்ந்து செல்கின்றது.
இன்று (27) செவ்வாய்க்கிழமை காலை நிலவரப்படி, குறித்த அறுவாய் வழியாக வெள்ளநீர் மிக வேகமாகக் கடலுக்குள் பாய்ந்து செல்வதை அவதானிக்க முடிவதாகத் தெரிவிக்கப்படுகிறது.
இந்த நடவடிக்கையின் மூலம் அருகிலுள்ள கிராமங்களில் தேங்கியுள்ள வெள்ளநீரின் அளவு படிப்படியாகக் குறையும் என எதிர்பார்க்கப்படுகிறது.
புத்தளத்தில் கடும் வெள்ளப்பெருக்கு – கடலை நோக்கிச் சீறிப்பாயும் வெள்ளநீர் நாட்டில் நிலவும் சீரற்ற காலநிலை காரணமாக புத்தளம் மாவட்டத்தில் ஏற்பட்டுள்ள கடுமையான வெள்ளப்பெருக்கைத் தொடர்ந்து, உடப்பு முத்துவாரம் அறுவாய் கடலுக்குத் திறந்துவிடப்பட்டுள்ளது.தொடர்ச்சியாகப் பெய்துவரும் கனமழையால் புத்தளம் மாவட்டத்தின் பல பகுதிகளில் வெள்ளநீர் தேங்கியுள்ள நிலையில், அருகிலுள்ள கிராமங்களை வெள்ள அபாயத்திலிருந்து பாதுகாக்கும் நோக்கில் இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.அதன்படி, நேற்று (26) திங்கட்கிழமை மாலை உடப்பு முத்துவாரம் அறுவாய் திறந்துவிடப்பட்டதையடுத்து, தேங்கியிருந்த வெள்ளநீர் கடலை நோக்கிப் பாய்ந்து செல்கின்றது.இன்று (27) செவ்வாய்க்கிழமை காலை நிலவரப்படி, குறித்த அறுவாய் வழியாக வெள்ளநீர் மிக வேகமாகக் கடலுக்குள் பாய்ந்து செல்வதை அவதானிக்க முடிவதாகத் தெரிவிக்கப்படுகிறது.இந்த நடவடிக்கையின் மூலம் அருகிலுள்ள கிராமங்களில் தேங்கியுள்ள வெள்ளநீரின் அளவு படிப்படியாகக் குறையும் என எதிர்பார்க்கப்படுகிறது.