• Oct 27 2026

செம்மணி விசாரணையில் அரசின் தலையீடு இல்லை.! பிரதி அமைச்சர் பிரதீப் தெரிவிப்பு

Aathira / Oct 27th 2026, 6:35 am
image

செம்மணி மனிதப் புதைகுழி விவகாரம் தொடர்பான விசாரணையில் அரசு எந்தவித தலையீடோ அல்லது செல்வாக்கோ செலுத்தவில்லை என்றும், அது முற்றிலும் நேர்மையான முறையில் நடைபெற்று வருகின்றது என்றும் பெருந்தோட்ட மற்றும் உட்கட்டமைப்பு வசதிகள் துறை பிரதி அமைச்சர் சுந்தரலிங்கம் பிரதீப் தெரிவித்தார்.

யாழ். ஊடக அமையத்தில் நேற்று திங்கட்கிழமை நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின்போதே அவர் இதனைக் குறிப்பிட்டார்.

இது தொடர்பில் அவர் மேலும் தெரிவித்ததாவது:-

செம்மணி விவகாரத்தைப் பொறுத்தவரை கடந்த கால எந்தவொரு அரசும் செய்யாத நடவடிக்கைகளைத் தற்போதைய அரசு முன்னெடுத்து வருகின்றது. 

பலர் பல கருத்துக்களைத் தெரிவித்தபோதிலும், நாங்கள் இந்த விசாரணையில் எந்தவித தலையீட்டையோ அல்லது செல்வாக்கையோ செலுத்தாமல், நேர்மையான முறையில் அது நடைபெறுவதை உறுதி செய்துள்ளோம்.

செம்மணி விவகாரம் மட்டுமன்றி, நாட்டில் உள்ள அனைத்து விசாரணைகளையும் சுயாதீனமாகவும் நேர்மையாகவும் நடத்துவதற்குப் பூரண சுதந்திரத்தை வழங்கியுள்ளோம்.

செம்மணி விவகார விசாரணைகளுக்குத் தற்போதைய உள்நாட்டுப் பொறிமுறைகளே போதுமானதாக இருக்கின்றன என நினைக்கின்றேன். 

இந்த அரசின் மீதும் நாட்டின் நீதித்துறை மீதும் வரலாற்றில் முதன்முறையாக தமிழ், சிங்கள, முஸ்லிம் மக்கள் அனைவரும் ஒரே மாதிரியான நம்பிக்கையைக் கொண்டுள்ளனர்.

இந்த நம்பிக்கையின் அடிப்படையிலேயே அன்றாடம் நேர்மறையான மாற்றங்கள் நிகழ்ந்து வருகின்றன. எனவே, இந்த நம்பிக்கையின் அடிப்படையில் எல்லா அநீதிகளுக்கும் நீதி நிச்சயமாக கிடைக்கும் என்ற எதிர்பார்ப்பை நாங்கள் கொடுத்திருக்கின்றோம்  என்றார். 

செம்மணி விசாரணையில் அரசின் தலையீடு இல்லை. பிரதி அமைச்சர் பிரதீப் தெரிவிப்பு செம்மணி மனிதப் புதைகுழி விவகாரம் தொடர்பான விசாரணையில் அரசு எந்தவித தலையீடோ அல்லது செல்வாக்கோ செலுத்தவில்லை என்றும், அது முற்றிலும் நேர்மையான முறையில் நடைபெற்று வருகின்றது என்றும் பெருந்தோட்ட மற்றும் உட்கட்டமைப்பு வசதிகள் துறை பிரதி அமைச்சர் சுந்தரலிங்கம் பிரதீப் தெரிவித்தார்.யாழ். ஊடக அமையத்தில் நேற்று திங்கட்கிழமை நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின்போதே அவர் இதனைக் குறிப்பிட்டார்.இது தொடர்பில் அவர் மேலும் தெரிவித்ததாவது:-செம்மணி விவகாரத்தைப் பொறுத்தவரை கடந்த கால எந்தவொரு அரசும் செய்யாத நடவடிக்கைகளைத் தற்போதைய அரசு முன்னெடுத்து வருகின்றது. பலர் பல கருத்துக்களைத் தெரிவித்தபோதிலும், நாங்கள் இந்த விசாரணையில் எந்தவித தலையீட்டையோ அல்லது செல்வாக்கையோ செலுத்தாமல், நேர்மையான முறையில் அது நடைபெறுவதை உறுதி செய்துள்ளோம்.செம்மணி விவகாரம் மட்டுமன்றி, நாட்டில் உள்ள அனைத்து விசாரணைகளையும் சுயாதீனமாகவும் நேர்மையாகவும் நடத்துவதற்குப் பூரண சுதந்திரத்தை வழங்கியுள்ளோம்.செம்மணி விவகார விசாரணைகளுக்குத் தற்போதைய உள்நாட்டுப் பொறிமுறைகளே போதுமானதாக இருக்கின்றன என நினைக்கின்றேன். இந்த அரசின் மீதும் நாட்டின் நீதித்துறை மீதும் வரலாற்றில் முதன்முறையாக தமிழ், சிங்கள, முஸ்லிம் மக்கள் அனைவரும் ஒரே மாதிரியான நம்பிக்கையைக் கொண்டுள்ளனர்.இந்த நம்பிக்கையின் அடிப்படையிலேயே அன்றாடம் நேர்மறையான மாற்றங்கள் நிகழ்ந்து வருகின்றன. எனவே, இந்த நம்பிக்கையின் அடிப்படையில் எல்லா அநீதிகளுக்கும் நீதி நிச்சயமாக கிடைக்கும் என்ற எதிர்பார்ப்பை நாங்கள் கொடுத்திருக்கின்றோம்  என்றார். 

Advertisement

Advertisement

Advertisement