முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவின் மனைவி ஷிரந்தி ராஜபக்சவுக்கு இன்று (27) மாலை திறந்த இதய அறுவைச் சிகிச்சை மேற்கொள்ளப்படவுள்ளதாக ஜனாதிபதி சட்டத்தரணி அலி சப்ரி நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளார்.
கிரிஷ் நிறுவன விவகாரம் தொடர்பான வழக்கு இன்று (27) கொழும்பு பிரதம நீதவான் அசங்க எஸ். போதரகம முன்னிலையில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டபோதே இந்தத் தகவல் வெளியிடப்பட்டுள்ளது.
ஷிரந்தி ராஜபக்ச தற்போது இதயத் துடிப்பைச் சீராக்கும் கருவி (Pacemaker) பொருத்தப்பட்ட நிலையில் இருப்பதாகவும், அவருக்கு இன்று மாலை திறந்த இதய அறுவைச் சிகிச்சை மேற்கொள்ளப்படவுள்ளதாகவும் ஜனாதிபதி சட்டத்தரணி அலி சப்ரி நீதிமன்றத்தில் குறிப்பிட்டுள்ளார்.
இந்த நிலையில், ஷிரந்தி ராஜபக்சவின் விசேட மருத்துவ நிலைமையைக் கருத்திற்கொண்டு, கிரிஷ் நிறுவன விவகாரத்தில் சந்தேகநபராகப் பெயரிடப்பட்டுள்ள அவரது மகனும் நாடாளுமன்ற உறுப்பினருமான நாமல் ராஜபக்சவுக்குப் பிணை வழங்குமாறு அவர் நீதிமன்றத்திடம் கோரிக்கை விடுத்துள்ளார்.
குறித்த கோரிக்கையைப் பரிசீலித்த நீதிமன்றம், இது தொடர்பில் மேலதிக தீர்மானம் எடுப்பதற்காக வழக்கை நாளை (28) மீண்டும் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளுமாறு உத்தரவிட்டுள்ளது.
இதன்படி, நாமல் ராஜபக்சவின் பிணைக் கோரிக்கை தொடர்பான தீர்மானம் நாளைய விசாரணையின்போது எடுக்கப்படவுள்ளது.
மஹிந்தவின் மனைவி ஷிரந்திக்கு இதய அறுவைச் சிகிச்சை நீதிமன்றத்தில் வெளியான தகவல் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவின் மனைவி ஷிரந்தி ராஜபக்சவுக்கு இன்று (27) மாலை திறந்த இதய அறுவைச் சிகிச்சை மேற்கொள்ளப்படவுள்ளதாக ஜனாதிபதி சட்டத்தரணி அலி சப்ரி நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளார்.கிரிஷ் நிறுவன விவகாரம் தொடர்பான வழக்கு இன்று (27) கொழும்பு பிரதம நீதவான் அசங்க எஸ். போதரகம முன்னிலையில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டபோதே இந்தத் தகவல் வெளியிடப்பட்டுள்ளது.ஷிரந்தி ராஜபக்ச தற்போது இதயத் துடிப்பைச் சீராக்கும் கருவி (Pacemaker) பொருத்தப்பட்ட நிலையில் இருப்பதாகவும், அவருக்கு இன்று மாலை திறந்த இதய அறுவைச் சிகிச்சை மேற்கொள்ளப்படவுள்ளதாகவும் ஜனாதிபதி சட்டத்தரணி அலி சப்ரி நீதிமன்றத்தில் குறிப்பிட்டுள்ளார்.இந்த நிலையில், ஷிரந்தி ராஜபக்சவின் விசேட மருத்துவ நிலைமையைக் கருத்திற்கொண்டு, கிரிஷ் நிறுவன விவகாரத்தில் சந்தேகநபராகப் பெயரிடப்பட்டுள்ள அவரது மகனும் நாடாளுமன்ற உறுப்பினருமான நாமல் ராஜபக்சவுக்குப் பிணை வழங்குமாறு அவர் நீதிமன்றத்திடம் கோரிக்கை விடுத்துள்ளார்.குறித்த கோரிக்கையைப் பரிசீலித்த நீதிமன்றம், இது தொடர்பில் மேலதிக தீர்மானம் எடுப்பதற்காக வழக்கை நாளை (28) மீண்டும் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளுமாறு உத்தரவிட்டுள்ளது.இதன்படி, நாமல் ராஜபக்சவின் பிணைக் கோரிக்கை தொடர்பான தீர்மானம் நாளைய விசாரணையின்போது எடுக்கப்படவுள்ளது.