• Oct 27 2026

ராஜபக்ஷ குடும்பத்திற்கு என்ன நடக்கிறது? ஒரே நாளில் வெளியான இரு நீதிமன்ற உத்தரவுகள்!

Chithra / Oct 27th 2026, 3:42 pm
image


முன்னாள் அமைச்சர் பஷில் ராஜபக்ஷவுக்கு எதிராக திறந்த பிடியாணை பிறப்பிக்கப்பட்டுள்ள நிலையில், நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷவை தடுப்புக்காவலில் வைக்கவும் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.


மாத்தறை, பிரவுன்ஸ் ஹில் (Brown’s Hill) நில விவகாரம் தொடர்பாக முன்னாள் அமைச்சர் பஷில் ராஜபக்ஷவைக் கைது செய்யுமாறு மாத்தறை நீதவான் நீதிமன்றம் இன்று (27) திறந்த பிடியாணை பிறப்பித்துள்ளது.


குறித்த நில விவகாரம் தொடர்பில் நிதிக்குற்றப் புலனாய்வுப் பிரிவு (FCID) நீதிமன்றத்தில் சமர்ப்பித்த அறிக்கையைப் பரிசீலித்த பின்னரே இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.



இதேவேளை, சர்ச்சைக்குரிய எயார்பஸ் ஒப்பந்தம் தொடர்பான வழக்கில் நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷவை நாளை (28) நிரந்தர மூவரடங்கிய மேல்நீதிமன்ற நீதிபதிகள் குழாம் முன்னிலையில் ஆஜர்படுத்துமாறு கொழும்பு பிரதம நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.


அத்துடன், நாளைய தினம் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்படும் வரை அவரைத் தடுப்புக்காவலில் வைக்குமாறும் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளதாக எமது செய்தியாளர் தெரிவித்துள்ளார்.


இவ்வாறு ராஜபக்ஷ குடும்பத்தைச் சேர்ந்த இரு முக்கிய அரசியல் பிரமுகர்கள் தொடர்பாக ஒரே நாளில் வெளியாகியுள்ள நீதிமன்ற உத்தரவுகள் அரசியல் வட்டாரங்களில் கவனத்தை ஈர்த்துள்ளன.

ராஜபக்ஷ குடும்பத்திற்கு என்ன நடக்கிறது ஒரே நாளில் வெளியான இரு நீதிமன்ற உத்தரவுகள் முன்னாள் அமைச்சர் பஷில் ராஜபக்ஷவுக்கு எதிராக திறந்த பிடியாணை பிறப்பிக்கப்பட்டுள்ள நிலையில், நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷவை தடுப்புக்காவலில் வைக்கவும் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.மாத்தறை, பிரவுன்ஸ் ஹில் (Brown’s Hill) நில விவகாரம் தொடர்பாக முன்னாள் அமைச்சர் பஷில் ராஜபக்ஷவைக் கைது செய்யுமாறு மாத்தறை நீதவான் நீதிமன்றம் இன்று (27) திறந்த பிடியாணை பிறப்பித்துள்ளது.குறித்த நில விவகாரம் தொடர்பில் நிதிக்குற்றப் புலனாய்வுப் பிரிவு (FCID) நீதிமன்றத்தில் சமர்ப்பித்த அறிக்கையைப் பரிசீலித்த பின்னரே இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.இதேவேளை, சர்ச்சைக்குரிய எயார்பஸ் ஒப்பந்தம் தொடர்பான வழக்கில் நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷவை நாளை (28) நிரந்தர மூவரடங்கிய மேல்நீதிமன்ற நீதிபதிகள் குழாம் முன்னிலையில் ஆஜர்படுத்துமாறு கொழும்பு பிரதம நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.அத்துடன், நாளைய தினம் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்படும் வரை அவரைத் தடுப்புக்காவலில் வைக்குமாறும் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளதாக எமது செய்தியாளர் தெரிவித்துள்ளார்.இவ்வாறு ராஜபக்ஷ குடும்பத்தைச் சேர்ந்த இரு முக்கிய அரசியல் பிரமுகர்கள் தொடர்பாக ஒரே நாளில் வெளியாகியுள்ள நீதிமன்ற உத்தரவுகள் அரசியல் வட்டாரங்களில் கவனத்தை ஈர்த்துள்ளன.

Advertisement

Advertisement

Advertisement