அநுராதபுர புனித நகரில் சிவன், இராமர் மற்றும் சீதை கோயில்களை நிர்மாணிப்பதன் மூலம் பௌத்த மதத்துக்கு வழங்கப்பட்டுள்ள முன்னுரிமையை இல்லாதொழிக்க அரசாங்கம் முயற்சிப்பதாக பிவிதுறு ஹெல உறுமய கட்சியின் தலைவரும் முன்னாள் அமைச்சருமான உதய கம்மன்பில குற்றஞ்சாட்டியுள்ளார்.
கொழும்பிலுள்ள பிவிதுறு ஹெல உறுமய கட்சியின் தலைமையகத்தில் நேற்று (26) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்துத் தெரிவித்தபோதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
அநுராதபுர புனித நகரை அபிவிருத்தி செய்வதாகக் கூறி அரசாங்கம் புதிய வர்த்தமானி அறிவித்தலொன்றை வெளியிட்டுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.
குறித்த வர்த்தமானி அறிவித்தலின் ஊடாக அநுராதபுர புனித நகரில் ஏனைய மதங்களுக்கான வழிபாட்டுத் தலங்களை அமைப்பதற்கு அரசாங்கம் திட்டமிட்டுள்ளதாகவும் அவர் குற்றஞ்சாட்டியுள்ளார்.
குறிப்பாக, அநுராதபுர நகரில் சிவன் கோயில், இராமர் கோயில் மற்றும் சீதை கோயில் ஆகியவற்றை நிர்மாணிப்பதற்கான முயற்சிகள் முன்னெடுக்கப்படுவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
பௌத்த மதத்தின் முக்கியத்துவத்தை இரண்டாம் நிலைக்குத் தள்ளும் நோக்கிலேயே அரசாங்கம் இவ்வாறான நடவடிக்கைகளை மேற்கொள்வதாகவும் உதய கம்மன்பில குற்றஞ்சாட்டியுள்ளார்.
மேலும், ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க மற்றும் அமைச்சர் பிமல் ரத்நாயக்க ஆகியோரின் தலைமையில் முன்னெடுக்கப்படும் இந்த நடவடிக்கைகள் தொடர்பில் சிங்கள பௌத்த மக்கள் அவதானத்துடன் இருக்க வேண்டும் எனவும் அவர் வலியுறுத்தியுள்ளார்.
அநுராதபுரம் வரலாற்றுச் சிறப்புமிக்க புனித நகரமாக விளங்குவதால், அபிவிருத்தி என்ற பெயரில் அங்கு புதிய கட்டுமானப் பணிகளை முன்னெடுப்பது புராதன தொல்பொருள் சின்னங்களுக்குப் பாதிப்பை ஏற்படுத்தக்கூடும் எனவும் அவர் எச்சரித்துள்ளார்.
அநுராதபுர புனித நகரில் இந்துக் கோயில்கள் அரசின் திட்டம் என்ன புதிய சர்ச்சையை கிளப்பிய கம்மன்பில அநுராதபுர புனித நகரில் சிவன், இராமர் மற்றும் சீதை கோயில்களை நிர்மாணிப்பதன் மூலம் பௌத்த மதத்துக்கு வழங்கப்பட்டுள்ள முன்னுரிமையை இல்லாதொழிக்க அரசாங்கம் முயற்சிப்பதாக பிவிதுறு ஹெல உறுமய கட்சியின் தலைவரும் முன்னாள் அமைச்சருமான உதய கம்மன்பில குற்றஞ்சாட்டியுள்ளார்.கொழும்பிலுள்ள பிவிதுறு ஹெல உறுமய கட்சியின் தலைமையகத்தில் நேற்று (26) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்துத் தெரிவித்தபோதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.அநுராதபுர புனித நகரை அபிவிருத்தி செய்வதாகக் கூறி அரசாங்கம் புதிய வர்த்தமானி அறிவித்தலொன்றை வெளியிட்டுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.குறித்த வர்த்தமானி அறிவித்தலின் ஊடாக அநுராதபுர புனித நகரில் ஏனைய மதங்களுக்கான வழிபாட்டுத் தலங்களை அமைப்பதற்கு அரசாங்கம் திட்டமிட்டுள்ளதாகவும் அவர் குற்றஞ்சாட்டியுள்ளார்.குறிப்பாக, அநுராதபுர நகரில் சிவன் கோயில், இராமர் கோயில் மற்றும் சீதை கோயில் ஆகியவற்றை நிர்மாணிப்பதற்கான முயற்சிகள் முன்னெடுக்கப்படுவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.பௌத்த மதத்தின் முக்கியத்துவத்தை இரண்டாம் நிலைக்குத் தள்ளும் நோக்கிலேயே அரசாங்கம் இவ்வாறான நடவடிக்கைகளை மேற்கொள்வதாகவும் உதய கம்மன்பில குற்றஞ்சாட்டியுள்ளார்.மேலும், ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க மற்றும் அமைச்சர் பிமல் ரத்நாயக்க ஆகியோரின் தலைமையில் முன்னெடுக்கப்படும் இந்த நடவடிக்கைகள் தொடர்பில் சிங்கள பௌத்த மக்கள் அவதானத்துடன் இருக்க வேண்டும் எனவும் அவர் வலியுறுத்தியுள்ளார்.அநுராதபுரம் வரலாற்றுச் சிறப்புமிக்க புனித நகரமாக விளங்குவதால், அபிவிருத்தி என்ற பெயரில் அங்கு புதிய கட்டுமானப் பணிகளை முன்னெடுப்பது புராதன தொல்பொருள் சின்னங்களுக்குப் பாதிப்பை ஏற்படுத்தக்கூடும் எனவும் அவர் எச்சரித்துள்ளார்.