• Oct 26 2026

கனமழையால் தாழிறங்கிய பிரதான வீதி – முறிந்து விழுந்த பாரிய மரம் – போக்குவரத்து பாதிப்பு!

Chithra / Oct 26th 2026, 4:27 pm
image


நாட்டில் நிலவும் கடும் மழையுடனான சீரற்ற வானிலை காரணமாக, நுவரெலியா செல்லும் பிரதான வீதியின் ஒரு பகுதி தாழிறங்கியுள்ளதால் வாகனப் போக்குவரத்து கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளது.


பூண்டுலோயாவிலிருந்து நுவரெலியா நோக்கிச் செல்லும் பிரதான வீதியில், பரணவத்த பகுதியில் இன்று (26) காலை இந்தச் சம்பவம் இடம்பெற்றுள்ளது.


தொடர்ச்சியாகப் பெய்துவரும் கனமழை காரணமாக பிரதான வீதியின் கீழ்ப்பகுதி தாழிறங்கியுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.


இதன் காரணமாக இன்று காலை முதல் குறித்த வீதியூடான வாகனப் போக்குவரத்துக்கு இடையூறு ஏற்பட்டுள்ளதுடன், சாரதிகளும் பொதுமக்களும் பெரும் சிரமங்களை எதிர்நோக்கியுள்ளனர்.


தற்போதைய நிலையில், குறித்த வீதியூடாக முச்சக்கர வண்டிகள் மற்றும் மோட்டார் சைக்கிள்கள் மாத்திரமே பயணித்து வருவதாகத் தெரிவிக்கப்படுகிறது.


ஏனைய வாகனங்களின் போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ள நிலையில், வீதி தாழிறங்கியுள்ள பகுதியில் மேலும் சேதங்கள் ஏற்படக்கூடிய அபாயமும் காணப்படுகிறது.


நாட்டில் தொடர்ச்சியாகக் கனமழை பெய்துவரும் நிலையில், மலைநாட்டுப் பகுதிகளில் பயணிக்கும் வாகனச் சாரதிகள் மிகுந்த அவதானத்துடன் செயற்பட வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது.


இதேவேளை நாட்டில் நிலவும் சீரற்ற வானிலை காரணமாக, கண்டி - தெல்தோட்டை பகுதியில் பிரதான வீதியில் பாரிய மரமொன்று முறிந்து விழுந்ததால் போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது.


தெல்தோட்டை பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட தெல்தோட்டை வாடிகொட பகுதியிலிருந்து ரிக்கிலகஸ்கட நோக்கிச் செல்லும் பிரதான வீதியிலேயே இந்தச் சம்பவம் இடம்பெற்றுள்ளது.


குறித்த பகுதியில் பெய்துவரும் கடும் மழையினால் வீதியோரத்தில் இருந்த பாரிய மரமொன்று முறிந்து வீதியின் குறுக்கே விழுந்துள்ளது.


இதன் காரணமாக அந்த வீதியூடான வாகனப் போக்குவரத்துக்கு இடையூறு ஏற்பட்டதுடன், பொதுமக்களும் சிரமங்களை எதிர்நோக்கியுள்ளனர்.


இந்நிலையில், வீதியில் முறிந்து விழுந்த மரத்தை வெட்டி அகற்றும் பணிகளில் பிரதேச மக்கள் ஈடுபட்டு வருகின்றனர்.

கனமழையால் தாழிறங்கிய பிரதான வீதி – முறிந்து விழுந்த பாரிய மரம் – போக்குவரத்து பாதிப்பு நாட்டில் நிலவும் கடும் மழையுடனான சீரற்ற வானிலை காரணமாக, நுவரெலியா செல்லும் பிரதான வீதியின் ஒரு பகுதி தாழிறங்கியுள்ளதால் வாகனப் போக்குவரத்து கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளது.பூண்டுலோயாவிலிருந்து நுவரெலியா நோக்கிச் செல்லும் பிரதான வீதியில், பரணவத்த பகுதியில் இன்று (26) காலை இந்தச் சம்பவம் இடம்பெற்றுள்ளது.தொடர்ச்சியாகப் பெய்துவரும் கனமழை காரணமாக பிரதான வீதியின் கீழ்ப்பகுதி தாழிறங்கியுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.இதன் காரணமாக இன்று காலை முதல் குறித்த வீதியூடான வாகனப் போக்குவரத்துக்கு இடையூறு ஏற்பட்டுள்ளதுடன், சாரதிகளும் பொதுமக்களும் பெரும் சிரமங்களை எதிர்நோக்கியுள்ளனர்.தற்போதைய நிலையில், குறித்த வீதியூடாக முச்சக்கர வண்டிகள் மற்றும் மோட்டார் சைக்கிள்கள் மாத்திரமே பயணித்து வருவதாகத் தெரிவிக்கப்படுகிறது.ஏனைய வாகனங்களின் போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ள நிலையில், வீதி தாழிறங்கியுள்ள பகுதியில் மேலும் சேதங்கள் ஏற்படக்கூடிய அபாயமும் காணப்படுகிறது.நாட்டில் தொடர்ச்சியாகக் கனமழை பெய்துவரும் நிலையில், மலைநாட்டுப் பகுதிகளில் பயணிக்கும் வாகனச் சாரதிகள் மிகுந்த அவதானத்துடன் செயற்பட வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது.இதேவேளை நாட்டில் நிலவும் சீரற்ற வானிலை காரணமாக, கண்டி - தெல்தோட்டை பகுதியில் பிரதான வீதியில் பாரிய மரமொன்று முறிந்து விழுந்ததால் போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது.தெல்தோட்டை பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட தெல்தோட்டை வாடிகொட பகுதியிலிருந்து ரிக்கிலகஸ்கட நோக்கிச் செல்லும் பிரதான வீதியிலேயே இந்தச் சம்பவம் இடம்பெற்றுள்ளது.குறித்த பகுதியில் பெய்துவரும் கடும் மழையினால் வீதியோரத்தில் இருந்த பாரிய மரமொன்று முறிந்து வீதியின் குறுக்கே விழுந்துள்ளது.இதன் காரணமாக அந்த வீதியூடான வாகனப் போக்குவரத்துக்கு இடையூறு ஏற்பட்டதுடன், பொதுமக்களும் சிரமங்களை எதிர்நோக்கியுள்ளனர்.இந்நிலையில், வீதியில் முறிந்து விழுந்த மரத்தை வெட்டி அகற்றும் பணிகளில் பிரதேச மக்கள் ஈடுபட்டு வருகின்றனர்.

Advertisement

Advertisement

Advertisement