• Oct 24 2026

கல்முனை அல்-அஸ்ஹர் வித்தியாலயத்தில் பழைய மாணவர் சங்கம் விசேட கூட்டம்!

Ziya / Oct 24th 2026, 2:21 pm
image

1869 ஆம் ஆண்டு ஆரம்பிக்கப்பட்டு நீண்ட நெடிய வரலாற்றைக் கொண்ட கல்முனை அல்-அஸ்ஹர் வித்தியாலயத்தின் பெருமையையும் பாரம்பரியத்தையும் பாதுகாத்து, அதன் எதிர்கால வளர்ச்சி மற்றும் முன்னேற்றத்தை உறுதிப்படுத்தும் நோக்கில், நீண்டகாலமாகச் செயற்பாடற்று இருந்த பழைய மாணவர் சங்கத்தை  மீண்டும் ஸ்தாபிப்பதற்கான விசேட கூட்டம் எதிர்வரும் நவம்பர் மாதம் 01 ஆம் திகதி நடைபெறவுள்ளது.


இப்பாடசாலையில் கல்வி கற்ற அனைத்துப் பழைய மாணவர்களையும் மீண்டும் ஒரே கூரையின் கீழ் ஒன்றிணைத்து, பாடசாலையின் கல்வி வளர்ச்சி, மாணவர்களின் ஒழுக்க மேம்பாடு, உட்கட்டமைப்பு வசதிகளின் அபிவிருத்தி மற்றும் மாணவர்களின் எதிர்கால நல்வாழ்வு ஆகியவற்றுக்குப் பங்களிக்கும் ஒரு பலமிக்க அமைப்பை உருவாக்குவதே இக் கூட்டத்தின் பிரதான நோக்கமாகும்.


 எனவே, அல்-அஸ்ஹர் வித்தியாலயத்தில் கல்வி பயின்ற அனைத்துப் பழைய மாணவர்களும், பாடசாலையின் நலன்விரும்பிகளும் இம்முயற்சியில் ஆர்வத்துடன் பங்கேற்று, தாய் பாடசாலையின் மறுமலர்ச்சிக்காகவும் எதிர்கால வளர்ச்சிக்காகவும் ஒன்றிணைந்து செயற்பட முன்வருமாறு சங்கம் அமைக்கும் ஏற்பாட்டுக் குழுவினர் அன்புடன் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.


மேலும், இச் செய்தியினைத் தங்களது சக பழைய மாணவர்கள், நண்பர்கள் மற்றும் பாடசாலையுடன் தொடர்புடைய அனைத்துத் தரப்பினருக்கும் பகிர்ந்து இக் கூட்டம் பெருவெற்றி பெற ஒத்துழைக்குமாறும் கேட்கப்பட்டுள்ளனர்.

கல்முனை அல்-அஸ்ஹர் வித்தியாலயத்தில் பழைய மாணவர் சங்கம் விசேட கூட்டம் 1869 ஆம் ஆண்டு ஆரம்பிக்கப்பட்டு நீண்ட நெடிய வரலாற்றைக் கொண்ட கல்முனை அல்-அஸ்ஹர் வித்தியாலயத்தின் பெருமையையும் பாரம்பரியத்தையும் பாதுகாத்து, அதன் எதிர்கால வளர்ச்சி மற்றும் முன்னேற்றத்தை உறுதிப்படுத்தும் நோக்கில், நீண்டகாலமாகச் செயற்பாடற்று இருந்த பழைய மாணவர் சங்கத்தை  மீண்டும் ஸ்தாபிப்பதற்கான விசேட கூட்டம் எதிர்வரும் நவம்பர் மாதம் 01 ஆம் திகதி நடைபெறவுள்ளது.இப்பாடசாலையில் கல்வி கற்ற அனைத்துப் பழைய மாணவர்களையும் மீண்டும் ஒரே கூரையின் கீழ் ஒன்றிணைத்து, பாடசாலையின் கல்வி வளர்ச்சி, மாணவர்களின் ஒழுக்க மேம்பாடு, உட்கட்டமைப்பு வசதிகளின் அபிவிருத்தி மற்றும் மாணவர்களின் எதிர்கால நல்வாழ்வு ஆகியவற்றுக்குப் பங்களிக்கும் ஒரு பலமிக்க அமைப்பை உருவாக்குவதே இக் கூட்டத்தின் பிரதான நோக்கமாகும். எனவே, அல்-அஸ்ஹர் வித்தியாலயத்தில் கல்வி பயின்ற அனைத்துப் பழைய மாணவர்களும், பாடசாலையின் நலன்விரும்பிகளும் இம்முயற்சியில் ஆர்வத்துடன் பங்கேற்று, தாய் பாடசாலையின் மறுமலர்ச்சிக்காகவும் எதிர்கால வளர்ச்சிக்காகவும் ஒன்றிணைந்து செயற்பட முன்வருமாறு சங்கம் அமைக்கும் ஏற்பாட்டுக் குழுவினர் அன்புடன் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.மேலும், இச் செய்தியினைத் தங்களது சக பழைய மாணவர்கள், நண்பர்கள் மற்றும் பாடசாலையுடன் தொடர்புடைய அனைத்துத் தரப்பினருக்கும் பகிர்ந்து இக் கூட்டம் பெருவெற்றி பெற ஒத்துழைக்குமாறும் கேட்கப்பட்டுள்ளனர்.

Advertisement

Advertisement

Advertisement