• Apr 22 2026

பொல்லால் தாக்கி மகனை கொடூரமாக கொன்ற தந்தை; ஆபத்தான நிலையில் தாய்!

Chithra / Sep 20th 2025, 10:51 am
image



குருநாகல் - தேவாலேகம பொலிஸ் பிரிவின் பட்டுவத்த பகுதியில்  குடும்பத் தகராறு காரணமாக ஒருவர் தனது மனைவி மற்றும் மகனைத் தாக்கியதில் மகன் உயிரிழந்துள்ளார்.

இச் சம்பவம் நேற்று நள்ளிரவு இடம்பெற்றுள்ளது. 

தாக்குதலில் காயமடைந்த மனைவி கேகாலை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

உயிரிழந்தவர் பட்டுவத்த - ஹெலமட பகுதியைச் சேர்ந்த  35 வயதுடையவர் என பொலிஸார் தெரிவித்தனர். 

தேவாலேகம பொலிஸ் நிலையத்திற்கு கிடைத்த தகவலையடுத்து, சம்பவம் குறித்து விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.

பொல்லு ஒன்றால் தாக்கப்பட்டதால் இந்தக் கொலை இடம்பெற்றதாக ஆரம்ப விசாரணைகளில் தெரியவந்துள்ளது.

உடல் மீதான நீதவான் விசாரணை நடத்த திட்டமிடப்பட்டுள்ள நிலையில், 

தேவாலேகம பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.


பொல்லால் தாக்கி மகனை கொடூரமாக கொன்ற தந்தை; ஆபத்தான நிலையில் தாய் குருநாகல் - தேவாலேகம பொலிஸ் பிரிவின் பட்டுவத்த பகுதியில்  குடும்பத் தகராறு காரணமாக ஒருவர் தனது மனைவி மற்றும் மகனைத் தாக்கியதில் மகன் உயிரிழந்துள்ளார்.இச் சம்பவம் நேற்று நள்ளிரவு இடம்பெற்றுள்ளது. தாக்குதலில் காயமடைந்த மனைவி கேகாலை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.உயிரிழந்தவர் பட்டுவத்த - ஹெலமட பகுதியைச் சேர்ந்த  35 வயதுடையவர் என பொலிஸார் தெரிவித்தனர். தேவாலேகம பொலிஸ் நிலையத்திற்கு கிடைத்த தகவலையடுத்து, சம்பவம் குறித்து விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.பொல்லு ஒன்றால் தாக்கப்பட்டதால் இந்தக் கொலை இடம்பெற்றதாக ஆரம்ப விசாரணைகளில் தெரியவந்துள்ளது.உடல் மீதான நீதவான் விசாரணை நடத்த திட்டமிடப்பட்டுள்ள நிலையில், தேவாலேகம பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

Advertisement

Advertisement

Advertisement