நாட்டில் அண்மையில் ஏற்பட்ட திடீர் மின்தடையைத் தொடர்ந்து, நுரைச்சோலை அனல் மின் உற்பத்தி நிலையத்தின் மூன்று மின் உற்பத்தி அலகுகளும் இதுவரை வழமைக்குத் திரும்பவில்லை என அதன் நிர்வாகம் தெரிவித்துள்ளது.
இதன் காரணமாக, எதிர்வரும் நாட்களில் நாட்டின் மின்சார உற்பத்தியில் பாதிப்புகள் ஏற்படக்கூடும் என எரிசக்தி நிபுணர்கள் எச்சரித்துள்ளனர்.
கடந்த 17ஆம் திகதி நாடு முழுவதும் ஏற்பட்ட திடீர் மின்தடையால் பல பகுதிகளில் சுமார் ஏழு மணித்தியாலங்களுக்கு மின்சார விநியோகம் தடைப்பட்டிருந்தது.
இதனைத் தொடர்ந்து, நுரைச்சோலை அனல் மின் நிலையத்தின் மூன்று மின் உற்பத்தி அலகுகளும் முழுமையாகச் செயலிழந்தன.
பாதுகாப்பு நடைமுறைகளின் ஒரு பகுதியாக குறித்த மின் நிலையம் தேசிய மின்சாரக் கட்டமைப்பிலிருந்து தற்காலிகமாகத் துண்டிக்கப்பட்டுள்ள நிலையில், நாட்டின் மின் உற்பத்தித் திறனில் 810 மெகாவாட் இழப்பு ஏற்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதேவேளை, நாடளாவிய ரீதியில் ஏற்பட்ட திடீர் மின்தடைக்கான உண்மையான காரணத்தைக் கண்டறிவதற்காக தேசிய மின்சார அமைப்பு இயக்குநரகம் (NSO) உள்ளக விசாரணைகளை ஆரம்பித்துள்ளது.
இதற்கிடையில், மேல் கொத்மலை மின் உற்பத்தி நிலையத்தில் ஏற்பட்ட தொழில்நுட்பக் கோளாறே நாடளாவிய மின்தடைக்குக் காரணமாக இருக்கலாம் என எரிசக்தி அமைச்சர் அனுர கருணாதிலக்க நேற்று தெரிவித்திருந்தார்.
நுரைச்சோலை அனல் மின் நிலையத்தின் மூன்று அலகுகளும் செயலிழந்துள்ளதால், எதிர்வரும் நாட்களில் மின்சார விநியோகத்தில் பாதிப்புகள் ஏற்படுமா என்ற கேள்வி எழுந்துள்ளது.
எனினும், நாட்டில் தற்போது நிலவும் சாதகமான மழைவீழ்ச்சி காரணமாக நீர்மின் உற்பத்தி அதிகரித்துள்ளதுடன், மின்சாரத்திற்கான கேள்வியும் ஒப்பீட்டளவில் குறைவடைந்துள்ளது.
இதனால், நுரைச்சோலை மின் நிலையத்தின் 810 மெகாவாட் உற்பத்தித் திறன் இழப்புக்கு மத்தியிலும் நாட்டின் மின்சார விநியோகத்தைச் சீராகப் பேண முடியும் என தேசிய மின்சார அமைப்பு இயக்குநரகம் நம்பிக்கை வெளியிட்டுள்ளது.
அத்துடன், எதிர்வரும் நாட்களில் மின்சார விநியோகத்தை மிகவும் கவனமாக முகாமைத்துவம் செய்து, பொதுமக்களுக்கு ஏற்படக்கூடிய இடையூறுகளைக் குறைப்பதற்கான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படும் எனவும் உறுதியளிக்கப்பட்டுள்ளது.
நுரைச்சோலையின் மூன்று அலகுகளும் தொடர்ந்தும் முடக்கம் – மீண்டும் இருளில் மூழ்குமா இலங்கை நாட்டில் அண்மையில் ஏற்பட்ட திடீர் மின்தடையைத் தொடர்ந்து, நுரைச்சோலை அனல் மின் உற்பத்தி நிலையத்தின் மூன்று மின் உற்பத்தி அலகுகளும் இதுவரை வழமைக்குத் திரும்பவில்லை என அதன் நிர்வாகம் தெரிவித்துள்ளது.இதன் காரணமாக, எதிர்வரும் நாட்களில் நாட்டின் மின்சார உற்பத்தியில் பாதிப்புகள் ஏற்படக்கூடும் என எரிசக்தி நிபுணர்கள் எச்சரித்துள்ளனர்.கடந்த 17ஆம் திகதி நாடு முழுவதும் ஏற்பட்ட திடீர் மின்தடையால் பல பகுதிகளில் சுமார் ஏழு மணித்தியாலங்களுக்கு மின்சார விநியோகம் தடைப்பட்டிருந்தது.இதனைத் தொடர்ந்து, நுரைச்சோலை அனல் மின் நிலையத்தின் மூன்று மின் உற்பத்தி அலகுகளும் முழுமையாகச் செயலிழந்தன.பாதுகாப்பு நடைமுறைகளின் ஒரு பகுதியாக குறித்த மின் நிலையம் தேசிய மின்சாரக் கட்டமைப்பிலிருந்து தற்காலிகமாகத் துண்டிக்கப்பட்டுள்ள நிலையில், நாட்டின் மின் உற்பத்தித் திறனில் 810 மெகாவாட் இழப்பு ஏற்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.இதேவேளை, நாடளாவிய ரீதியில் ஏற்பட்ட திடீர் மின்தடைக்கான உண்மையான காரணத்தைக் கண்டறிவதற்காக தேசிய மின்சார அமைப்பு இயக்குநரகம் (NSO) உள்ளக விசாரணைகளை ஆரம்பித்துள்ளது.இதற்கிடையில், மேல் கொத்மலை மின் உற்பத்தி நிலையத்தில் ஏற்பட்ட தொழில்நுட்பக் கோளாறே நாடளாவிய மின்தடைக்குக் காரணமாக இருக்கலாம் என எரிசக்தி அமைச்சர் அனுர கருணாதிலக்க நேற்று தெரிவித்திருந்தார்.நுரைச்சோலை அனல் மின் நிலையத்தின் மூன்று அலகுகளும் செயலிழந்துள்ளதால், எதிர்வரும் நாட்களில் மின்சார விநியோகத்தில் பாதிப்புகள் ஏற்படுமா என்ற கேள்வி எழுந்துள்ளது.எனினும், நாட்டில் தற்போது நிலவும் சாதகமான மழைவீழ்ச்சி காரணமாக நீர்மின் உற்பத்தி அதிகரித்துள்ளதுடன், மின்சாரத்திற்கான கேள்வியும் ஒப்பீட்டளவில் குறைவடைந்துள்ளது.இதனால், நுரைச்சோலை மின் நிலையத்தின் 810 மெகாவாட் உற்பத்தித் திறன் இழப்புக்கு மத்தியிலும் நாட்டின் மின்சார விநியோகத்தைச் சீராகப் பேண முடியும் என தேசிய மின்சார அமைப்பு இயக்குநரகம் நம்பிக்கை வெளியிட்டுள்ளது.அத்துடன், எதிர்வரும் நாட்களில் மின்சார விநியோகத்தை மிகவும் கவனமாக முகாமைத்துவம் செய்து, பொதுமக்களுக்கு ஏற்படக்கூடிய இடையூறுகளைக் குறைப்பதற்கான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படும் எனவும் உறுதியளிக்கப்பட்டுள்ளது.