கிளிநொச்சி கல்மடுக்குளத்தின் கீழ் பெரும்போக நெற்ச்செய்கை மேற்கொள்ளப்பட்டு வரும் நெத்தலியாறு பகுதியில் இன்றையதினம் உயிரிழந்த நிலையில் யானை ஒன்று மீட்கப்பட்டுள்ளது.
குறித்த யானையானது பெரும்போக நெற்ச்செய்கையை பாதுகாக்கும் நோக்குடன் சட்டவிரோதமாக அமைக்கப்பட்ட மின்சார வேலியில் சிக்குண்டு உயிரிழந்திருக்கலாம் என சந்தேகிக்கப்படுகின்றது.
வன ஜீவராசிகள் திணைக்களத்தினர் குறித்த பகுதியில் அனுமதியின்றி மின்சார வேலியை அமைத்து யானை ஒன்று இறப்பதற்கு காரணமாக அமைந்த குற்றச்சாட்டில், மின்சார வேலி அமைத்த சந்தேக நபர் வன ஜீவராசிகள் தினைக்களத்தினால் கைது செய்யப்பட்டுள்ளார்.
கைது செய்யப்பட்ட சந்தேக நபர் நாளைய தினம் கிளிநொச்சி நீதிமன்றத்தில் முற்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
குறித்த விடயம் தொடர்பாக மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
கிளிநொச்சியில் உயிரிழந்த நிலையில் மீட்கப்பட்ட யானை சந்தேகநபர் கைது கிளிநொச்சி கல்மடுக்குளத்தின் கீழ் பெரும்போக நெற்ச்செய்கை மேற்கொள்ளப்பட்டு வரும் நெத்தலியாறு பகுதியில் இன்றையதினம் உயிரிழந்த நிலையில் யானை ஒன்று மீட்கப்பட்டுள்ளது. குறித்த யானையானது பெரும்போக நெற்ச்செய்கையை பாதுகாக்கும் நோக்குடன் சட்டவிரோதமாக அமைக்கப்பட்ட மின்சார வேலியில் சிக்குண்டு உயிரிழந்திருக்கலாம் என சந்தேகிக்கப்படுகின்றது. வன ஜீவராசிகள் திணைக்களத்தினர் குறித்த பகுதியில் அனுமதியின்றி மின்சார வேலியை அமைத்து யானை ஒன்று இறப்பதற்கு காரணமாக அமைந்த குற்றச்சாட்டில், மின்சார வேலி அமைத்த சந்தேக நபர் வன ஜீவராசிகள் தினைக்களத்தினால் கைது செய்யப்பட்டுள்ளார். கைது செய்யப்பட்ட சந்தேக நபர் நாளைய தினம் கிளிநொச்சி நீதிமன்றத்தில் முற்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.குறித்த விடயம் தொடர்பாக மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.