• May 12 2026

இலங்கையில் தங்கத்தின் விலையில் திடீர் மாற்றம்

Chithra / May 11th 2026, 1:34 pm
image

சர்வதேச சந்தையில் தங்கத்தின் விலையில் ஏற்பட்ட மாற்றத்தைத் தொடர்ந்து, இலங்கையிலும் இன்றைய தினம் (11) தங்க விலை குறைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.


இதன்படி, சர்வதேச சந்தையில் ஒரு அவுண்ஸ் தங்கத்தின் விலை 4,665 அமெரிக்க டொலர்களாக பதிவாகியுள்ளது. மேலும், ஒரு அவுண்ஸ் வெள்ளியின் விலை 80 டொலர்களாக காணப்படுகிறது.


இந்நிலையில், உள்நாட்டு சந்தையில் தங்கத்தின் விலை 2,000 ரூபாவால் குறைந்துள்ளதாக அகில இலங்கை நகை வியாபாரிகள் சங்கம் தெரிவித்துள்ளது.


அதன்படி, 24 கரட் தங்கம் ஒரு பவுண் 394,000 ரூபாயாக விற்பனை செய்யப்படுகின்றது.


அதேவேளை, 22 கரட் தங்கம் ஒரு பவுண் 362,500 ரூபாயாக விற்பனை செய்யப்படுகின்றது.


மேலும், 24 கரட் தங்கத்தின் ஒரு கிராம் 49,250 ரூபாயாகவும், 22 கரட் தங்கத்தின் ஒரு கிராம் 45,313 ரூபாயாகவும் விற்பனை செய்யப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இலங்கையில் தங்கத்தின் விலையில் திடீர் மாற்றம் சர்வதேச சந்தையில் தங்கத்தின் விலையில் ஏற்பட்ட மாற்றத்தைத் தொடர்ந்து, இலங்கையிலும் இன்றைய தினம் (11) தங்க விலை குறைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.இதன்படி, சர்வதேச சந்தையில் ஒரு அவுண்ஸ் தங்கத்தின் விலை 4,665 அமெரிக்க டொலர்களாக பதிவாகியுள்ளது. மேலும், ஒரு அவுண்ஸ் வெள்ளியின் விலை 80 டொலர்களாக காணப்படுகிறது.இந்நிலையில், உள்நாட்டு சந்தையில் தங்கத்தின் விலை 2,000 ரூபாவால் குறைந்துள்ளதாக அகில இலங்கை நகை வியாபாரிகள் சங்கம் தெரிவித்துள்ளது.அதன்படி, 24 கரட் தங்கம் ஒரு பவுண் 394,000 ரூபாயாக விற்பனை செய்யப்படுகின்றது.அதேவேளை, 22 கரட் தங்கம் ஒரு பவுண் 362,500 ரூபாயாக விற்பனை செய்யப்படுகின்றது.மேலும், 24 கரட் தங்கத்தின் ஒரு கிராம் 49,250 ரூபாயாகவும், 22 கரட் தங்கத்தின் ஒரு கிராம் 45,313 ரூபாயாகவும் விற்பனை செய்யப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Advertisement

Advertisement

Advertisement