• Nov 05 2026

18 மாதங்களில் இலங்கையில் என்ன மாற்றம் ஏற்படப்போகிறது? சீனாவின் அறிவிப்பு

Chithra / Nov 2nd 2026, 1:15 pm
image


இலங்கையில் அனர்த்தத்திற்குப் பின்னரான அவசரகால புனரமைப்புப் பணிகளுக்காக சீனா வழங்கும் உதவித் திட்டத்தின் கீழ் நிர்மாணிக்கப்படவுள்ள முதலாவது பாலத்திற்கான அடிக்கல் நாட்டும் நிகழ்வு நேற்று  (01) ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றுள்ளது.


இலங்கைக்கான சீனத் தூதரகம் தனது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில் இந்தத் தகவலைத் தெரிவித்துள்ளது.


இதன்படி, குறித்த உதவித் திட்டத்தின் கீழ் நிர்மாணிக்கப்படவுள்ள ஒன்பது பாலங்களும் உயர்தரத் தரநிலைகள் மற்றும் அதிகபட்ச பாதுகாப்பு ஏற்பாடுகளுடன் 18 மாதங்களுக்குள் பூர்த்தி செய்யப்படவுள்ளதாக சீனத் தூதரகம் குறிப்பிட்டுள்ளது.


குறித்த பாலங்களை மீள்நிர்மாணிப்பதன் மூலம் போக்குவரத்துத் தொடர்புகள் துண்டிக்கப்பட்ட சமூகங்களை மீண்டும் இணைக்கவும், பொருளாதார நடவடிக்கைகளின் மீளெழுச்சி மற்றும் உறுதித்தன்மையை வலுப்படுத்தவும் முடியும் என சீனத் தூதரகம் சுட்டிக்காட்டியுள்ளது.


இதன் மூலம் இலங்கை மக்களுக்கு நேரடியான நன்மைகள் கிடைக்கும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.


அத்துடன், இலங்கை – சீனா இடையிலான மூலோபாய ஒத்துழைப்புப் பங்காண்மையை மேலும் ஆழப்படுத்தி, பகிரப்பட்ட எதிர்காலத்தைக் கொண்ட சீன – இலங்கை சமூகத்தைக் கட்டியெழுப்புவதுடன், அரிசி – இறப்பர் ஒப்பந்தத்தின் உணர்வைத் தலைமுறை தலைமுறையாக முன்னெடுத்துச் செல்ல வேண்டும் என்றும் சீனத் தூதரகம் தனது பதிவில் வலியுறுத்தியுள்ளது.


18 மாதங்களில் இலங்கையில் என்ன மாற்றம் ஏற்படப்போகிறது சீனாவின் அறிவிப்பு இலங்கையில் அனர்த்தத்திற்குப் பின்னரான அவசரகால புனரமைப்புப் பணிகளுக்காக சீனா வழங்கும் உதவித் திட்டத்தின் கீழ் நிர்மாணிக்கப்படவுள்ள முதலாவது பாலத்திற்கான அடிக்கல் நாட்டும் நிகழ்வு நேற்று  (01) ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றுள்ளது.இலங்கைக்கான சீனத் தூதரகம் தனது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில் இந்தத் தகவலைத் தெரிவித்துள்ளது.இதன்படி, குறித்த உதவித் திட்டத்தின் கீழ் நிர்மாணிக்கப்படவுள்ள ஒன்பது பாலங்களும் உயர்தரத் தரநிலைகள் மற்றும் அதிகபட்ச பாதுகாப்பு ஏற்பாடுகளுடன் 18 மாதங்களுக்குள் பூர்த்தி செய்யப்படவுள்ளதாக சீனத் தூதரகம் குறிப்பிட்டுள்ளது.குறித்த பாலங்களை மீள்நிர்மாணிப்பதன் மூலம் போக்குவரத்துத் தொடர்புகள் துண்டிக்கப்பட்ட சமூகங்களை மீண்டும் இணைக்கவும், பொருளாதார நடவடிக்கைகளின் மீளெழுச்சி மற்றும் உறுதித்தன்மையை வலுப்படுத்தவும் முடியும் என சீனத் தூதரகம் சுட்டிக்காட்டியுள்ளது.இதன் மூலம் இலங்கை மக்களுக்கு நேரடியான நன்மைகள் கிடைக்கும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.அத்துடன், இலங்கை – சீனா இடையிலான மூலோபாய ஒத்துழைப்புப் பங்காண்மையை மேலும் ஆழப்படுத்தி, பகிரப்பட்ட எதிர்காலத்தைக் கொண்ட சீன – இலங்கை சமூகத்தைக் கட்டியெழுப்புவதுடன், அரிசி – இறப்பர் ஒப்பந்தத்தின் உணர்வைத் தலைமுறை தலைமுறையாக முன்னெடுத்துச் செல்ல வேண்டும் என்றும் சீனத் தூதரகம் தனது பதிவில் வலியுறுத்தியுள்ளது.

Advertisement

Advertisement

Advertisement