அமெரிக்காவில் வேகமாக அதிகரித்து வரும் செயற்கை நுண்ணறிவு (ஏ.ஐ) தரவு மையங்கள், கார்பன் உமிழ்வை பெருமளவில் அதிகரிக்கக்கூடும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
சியாரா கிளப் வெளியிட்ட ஆய்வின்படி, 2030ஆம் ஆண்டுக்குள் அமெரிக்காவின் மின்சார உற்பத்தித் துறையின் கார்பன் டையாக்சைடு உமிழ்வு 2.1 பில்லியன் மெட்ரிக் தொன்னாக அதிகரிக்கலாம். இது 2025ஆம் ஆண்டை விட 618 மில்லியன் தொன் அல்லது சுமார் 42 சதவீத உயர்வாகும்.
ஏ.ஐ தரவு மையங்களின் மின்சாரத் தேவையைப் பூர்த்தி செய்வதற்காக இயற்கை எரிவாயு மின் நிலையங்கள் அமைக்கப்படுவது இந்த அதிகரிப்புக்கு முக்கியக் காரணமாகக் குறிப்பிடப்படுகிறது.
அமேசான் வெப் சர்வீசஸ் மற்றும் மைக்ரோசொப்ட் உள்ளிட்ட நிறுவனங்கள் தரவு மையங்களை விரிவுபடுத்தி வரும் நிலையில், புதுப்பிக்கத்தக்க ஆற்றலைப் பயன்படுத்தாவிட்டால் உலகளாவிய காலநிலை இலக்குகள் பாதிக்கப்படலாம் என சுற்றுச்சூழல் நிபுணர்கள் எச்சரித்துள்ளனர்.
அமெரிக்காவின் ஏ.ஐ தரவு மையங்களால் சுற்றுச்சூழலுக்கு புதிய அச்சுறுத்தல் அமெரிக்காவில் வேகமாக அதிகரித்து வரும் செயற்கை நுண்ணறிவு (ஏ.ஐ) தரவு மையங்கள், கார்பன் உமிழ்வை பெருமளவில் அதிகரிக்கக்கூடும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.சியாரா கிளப் வெளியிட்ட ஆய்வின்படி, 2030ஆம் ஆண்டுக்குள் அமெரிக்காவின் மின்சார உற்பத்தித் துறையின் கார்பன் டையாக்சைடு உமிழ்வு 2.1 பில்லியன் மெட்ரிக் தொன்னாக அதிகரிக்கலாம். இது 2025ஆம் ஆண்டை விட 618 மில்லியன் தொன் அல்லது சுமார் 42 சதவீத உயர்வாகும்.ஏ.ஐ தரவு மையங்களின் மின்சாரத் தேவையைப் பூர்த்தி செய்வதற்காக இயற்கை எரிவாயு மின் நிலையங்கள் அமைக்கப்படுவது இந்த அதிகரிப்புக்கு முக்கியக் காரணமாகக் குறிப்பிடப்படுகிறது.அமேசான் வெப் சர்வீசஸ் மற்றும் மைக்ரோசொப்ட் உள்ளிட்ட நிறுவனங்கள் தரவு மையங்களை விரிவுபடுத்தி வரும் நிலையில், புதுப்பிக்கத்தக்க ஆற்றலைப் பயன்படுத்தாவிட்டால் உலகளாவிய காலநிலை இலக்குகள் பாதிக்கப்படலாம் என சுற்றுச்சூழல் நிபுணர்கள் எச்சரித்துள்ளனர்.