• Nov 03 2026

குகைக்குள் அழுங்கு வேட்டைக்கு சென்றவருக்கு நேர்ந்த சோகம்!

Chithra / Nov 2nd 2026, 12:47 pm
image


பதுளை – கொஸ்லந்த, தியஹிதிதென்ன வனப்பகுதியில் அமைந்துள்ள குகை ஒன்றிற்குள் விலங்கு ஒன்றை வேட்டையாடுவதற்காகச் சென்ற நபர் ஒருவர், பாறை சரிந்து விழுந்ததில் உயிரிழந்த நிலையில் மீட்கப்பட்டுள்ளார்.


இந்தச் சம்பவம் நேற்று (01) காலை இடம்பெற்றுள்ளதாகப் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.


கொஸ்லந்த, தியஹிதிதென்ன – உவா மாவெலகம பகுதியைச் சேர்ந்த 30 வயதுடைய  ஆர். ரமேஷ் என்ற தினக்கூலித் தொழிலாளியே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.


குறித்த நபர் நேற்று அருகில் வசிக்கும் 17 வயதுடைய இளைஞர் ஒருவருடன் இணைந்து அழுங்கு ஒன்றைப் பிடிப்பதற்காக வனப்பகுதிக்குச் சென்றுள்ளார்.


இதன்போது, குகைக்குள் இருந்த பாறைகளை அகற்ற முயன்றபோது, திடீரெனப் பாரிய பாறை ஒன்று சரிந்து அவர் மீது விழுந்துள்ளது. இதனால் அவர் குகைக்குள் சிக்கி உயிரிழந்துள்ளார்.


சம்பவத்தின்போது, உயிரிழந்தவரின் கால்கள் மாத்திரம் குகைக்கு வெளியே சுமார் இரண்டு அடி தூரத்திற்குத் தெரிந்த நிலையில், உடலின் ஏனைய பகுதிகள் குகைக்குள் சிக்கியிருந்ததாகத் தெரிவிக்கப்படுகிறது.


தகவலறிந்து சம்பவ இடத்திற்குச் சென்ற கொஸ்லந்த பொலிஸார், நீண்ட முயற்சிக்குப் பின்னர் சடலத்தை மீட்டுள்ளனர்.


சம்பவம் நடந்த சமயத்தில் உயிரிழந்தவரின் மனைவி ரத்தினபுரி பகுதியில் இருந்ததாகப் பொலிஸார் தெரிவித்தனர்.


சம்பவம் தொடர்பில் ஊவா மாகாணம் மற்றும் பதுளை மாவட்ட சிரேஷ்ட பொலிஸ் அதிகாரிகளின் ஆலோசனையின் கீழ் கொஸ்லந்த பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.

குகைக்குள் அழுங்கு வேட்டைக்கு சென்றவருக்கு நேர்ந்த சோகம் பதுளை – கொஸ்லந்த, தியஹிதிதென்ன வனப்பகுதியில் அமைந்துள்ள குகை ஒன்றிற்குள் விலங்கு ஒன்றை வேட்டையாடுவதற்காகச் சென்ற நபர் ஒருவர், பாறை சரிந்து விழுந்ததில் உயிரிழந்த நிலையில் மீட்கப்பட்டுள்ளார்.இந்தச் சம்பவம் நேற்று (01) காலை இடம்பெற்றுள்ளதாகப் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.கொஸ்லந்த, தியஹிதிதென்ன – உவா மாவெலகம பகுதியைச் சேர்ந்த 30 வயதுடைய  ஆர். ரமேஷ் என்ற தினக்கூலித் தொழிலாளியே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.குறித்த நபர் நேற்று அருகில் வசிக்கும் 17 வயதுடைய இளைஞர் ஒருவருடன் இணைந்து அழுங்கு ஒன்றைப் பிடிப்பதற்காக வனப்பகுதிக்குச் சென்றுள்ளார்.இதன்போது, குகைக்குள் இருந்த பாறைகளை அகற்ற முயன்றபோது, திடீரெனப் பாரிய பாறை ஒன்று சரிந்து அவர் மீது விழுந்துள்ளது. இதனால் அவர் குகைக்குள் சிக்கி உயிரிழந்துள்ளார்.சம்பவத்தின்போது, உயிரிழந்தவரின் கால்கள் மாத்திரம் குகைக்கு வெளியே சுமார் இரண்டு அடி தூரத்திற்குத் தெரிந்த நிலையில், உடலின் ஏனைய பகுதிகள் குகைக்குள் சிக்கியிருந்ததாகத் தெரிவிக்கப்படுகிறது.தகவலறிந்து சம்பவ இடத்திற்குச் சென்ற கொஸ்லந்த பொலிஸார், நீண்ட முயற்சிக்குப் பின்னர் சடலத்தை மீட்டுள்ளனர்.சம்பவம் நடந்த சமயத்தில் உயிரிழந்தவரின் மனைவி ரத்தினபுரி பகுதியில் இருந்ததாகப் பொலிஸார் தெரிவித்தனர்.சம்பவம் தொடர்பில் ஊவா மாகாணம் மற்றும் பதுளை மாவட்ட சிரேஷ்ட பொலிஸ் அதிகாரிகளின் ஆலோசனையின் கீழ் கொஸ்லந்த பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.

Advertisement

Advertisement

Advertisement