எரிபொருள் விலைகள் அதிகரித்துள்ள நிலையில், முச்சக்கர வண்டிகளுக்கான சவாரிக் கட்டணங்களை உயர்த்துவதற்குத் திட்டமிடப்பட்டுள்ளதாகவும், பேருந்து கட்டணங்களில் எவ்வித மாற்றமும் மேற்கொள்ளப்பட மாட்டாது எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதன்படி, தற்போது முச்சக்கர வண்டிகளின் முதல் கிலோமீற்றருக்கு அறவிடப்படும் 110 ரூபாய் கட்டணத்தை 120 ரூபாயாகவும், இரண்டாவது கிலோமீற்றர் முதல் அறவிடப்படும் 90 ரூபாய் கட்டணத்தை 100 ரூபாயாகவும் அதிகரிக்க முன்மொழியப்பட்டுள்ளது.
தேசிய ஐக்கிய முச்சக்கர வண்டி ஓட்டுநர்கள் மற்றும் கைத்தொழிலாளர்கள் சங்கத்தின் பிரதான செயலாளர் எல். ரோஹண பெரேரா இதனைத் தெரிவித்துள்ளார்.
கடந்த மாதத்தைப் போலவே இந்த மாதமும் எரிபொருள் விலைகள் அதிகரித்துள்ளதுடன், ஒட்டுமொத்தமாக லீற்றர் ஒன்றுக்கு 25 ரூபாய் வரை விலை உயர்ந்துள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
இதன் காரணமாக அன்றாட நுகர்வுப் பொருட்களின் விலைகளும் அதிகரித்துள்ளதுடன், சந்தையில் சமையல் எரிவாயுவைப் பெற்றுக்கொள்வதிலும் சிக்கல் நிலவுவதால் முச்சக்கர வண்டி ஓட்டுநர்கள் பெரும் நெருக்கடிக்கு உள்ளாகியுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
முன்மொழியப்பட்டுள்ள புதிய கட்டணத் திருத்தம் தொடர்பான யோசனையைத் தேசிய போக்குவரத்து ஆணைக்குழுவிடம் சமர்ப்பிக்கவுள்ளதாகவும், எதிர்வரும் சில நாட்களில் அதன் பதிலை எதிர்பார்த்துள்ளதாகவும் அவர் கூறியுள்ளார்.
இதற்கு சாதகமான பதில் கிடைக்காவிட்டால், கட்டண மீட்டர்களைத் திருத்தியமைக்கும் நிறுவனங்களுடன் கலந்துரையாடி கட்டணங்களை அதிகரிக்க வேண்டிய நிலை ஏற்படும் எனவும் அவர் எச்சரித்துள்ளார்.
இதேவேளை, எரிபொருள் விலைகள் அதிகரித்துள்ள போதிலும், பேருந்து கட்டணங்களில் எவ்வித மாற்றமும் மேற்கொள்ளப்பட மாட்டாது என இலங்கை தனியார் பேருந்து உரிமையாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.
இது தொடர்பில் கருத்துத் தெரிவித்த சங்கத்தின் தலைவர் கெமுனு விஜேரத்ன, பேருந்து கட்டணத் திருத்தத்துக்கான விலைச் சூத்திரத்தின்படி, எரிபொருள் விலை அதிகரிப்பு 4 சதவீத எல்லையை எட்டாத காரணத்தினால் கட்டணங்களை உயர்த்த முடியாது எனக் குறிப்பிட்டுள்ளார்.
எனினும், பேருந்து சேவைகளைத் தொடர்ந்து முன்னெடுப்பதில் நஷ்டத்தை எதிர்கொள்ள வேண்டியுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
இதற்கமைய, குறுகிய தூர பேருந்து சேவைகளில் நாளொன்றுக்கு சுமார் 1,000 ரூபாயும், நீண்ட தூர சேவைகளில் நாளொன்றுக்கு சுமார் 2,000 ரூபாயும் நஷ்டம் ஏற்படுவதாகவும் கெமுனு விஜேரத்ன மேலும் சுட்டிக்காட்டியுள்ளார்.
எரிபொருள் விலை உயர்வால் போக்குவரத்து கட்டணங்களும் உயர்கிறதா வெளியானது அதிர்ச்சி அறிவிப்பு எரிபொருள் விலைகள் அதிகரித்துள்ள நிலையில், முச்சக்கர வண்டிகளுக்கான சவாரிக் கட்டணங்களை உயர்த்துவதற்குத் திட்டமிடப்பட்டுள்ளதாகவும், பேருந்து கட்டணங்களில் எவ்வித மாற்றமும் மேற்கொள்ளப்பட மாட்டாது எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.இதன்படி, தற்போது முச்சக்கர வண்டிகளின் முதல் கிலோமீற்றருக்கு அறவிடப்படும் 110 ரூபாய் கட்டணத்தை 120 ரூபாயாகவும், இரண்டாவது கிலோமீற்றர் முதல் அறவிடப்படும் 90 ரூபாய் கட்டணத்தை 100 ரூபாயாகவும் அதிகரிக்க முன்மொழியப்பட்டுள்ளது.தேசிய ஐக்கிய முச்சக்கர வண்டி ஓட்டுநர்கள் மற்றும் கைத்தொழிலாளர்கள் சங்கத்தின் பிரதான செயலாளர் எல். ரோஹண பெரேரா இதனைத் தெரிவித்துள்ளார்.கடந்த மாதத்தைப் போலவே இந்த மாதமும் எரிபொருள் விலைகள் அதிகரித்துள்ளதுடன், ஒட்டுமொத்தமாக லீற்றர் ஒன்றுக்கு 25 ரூபாய் வரை விலை உயர்ந்துள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.இதன் காரணமாக அன்றாட நுகர்வுப் பொருட்களின் விலைகளும் அதிகரித்துள்ளதுடன், சந்தையில் சமையல் எரிவாயுவைப் பெற்றுக்கொள்வதிலும் சிக்கல் நிலவுவதால் முச்சக்கர வண்டி ஓட்டுநர்கள் பெரும் நெருக்கடிக்கு உள்ளாகியுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.முன்மொழியப்பட்டுள்ள புதிய கட்டணத் திருத்தம் தொடர்பான யோசனையைத் தேசிய போக்குவரத்து ஆணைக்குழுவிடம் சமர்ப்பிக்கவுள்ளதாகவும், எதிர்வரும் சில நாட்களில் அதன் பதிலை எதிர்பார்த்துள்ளதாகவும் அவர் கூறியுள்ளார்.இதற்கு சாதகமான பதில் கிடைக்காவிட்டால், கட்டண மீட்டர்களைத் திருத்தியமைக்கும் நிறுவனங்களுடன் கலந்துரையாடி கட்டணங்களை அதிகரிக்க வேண்டிய நிலை ஏற்படும் எனவும் அவர் எச்சரித்துள்ளார்.இதேவேளை, எரிபொருள் விலைகள் அதிகரித்துள்ள போதிலும், பேருந்து கட்டணங்களில் எவ்வித மாற்றமும் மேற்கொள்ளப்பட மாட்டாது என இலங்கை தனியார் பேருந்து உரிமையாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.இது தொடர்பில் கருத்துத் தெரிவித்த சங்கத்தின் தலைவர் கெமுனு விஜேரத்ன, பேருந்து கட்டணத் திருத்தத்துக்கான விலைச் சூத்திரத்தின்படி, எரிபொருள் விலை அதிகரிப்பு 4 சதவீத எல்லையை எட்டாத காரணத்தினால் கட்டணங்களை உயர்த்த முடியாது எனக் குறிப்பிட்டுள்ளார்.எனினும், பேருந்து சேவைகளைத் தொடர்ந்து முன்னெடுப்பதில் நஷ்டத்தை எதிர்கொள்ள வேண்டியுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.இதற்கமைய, குறுகிய தூர பேருந்து சேவைகளில் நாளொன்றுக்கு சுமார் 1,000 ரூபாயும், நீண்ட தூர சேவைகளில் நாளொன்றுக்கு சுமார் 2,000 ரூபாயும் நஷ்டம் ஏற்படுவதாகவும் கெமுனு விஜேரத்ன மேலும் சுட்டிக்காட்டியுள்ளார்.