• May 01 2026

வெளிநாடுகளுக்கு செல்லும் பௌத்த பிக்குகளுக்கு இனி கடும் கட்டுப்பாடு! அநுர அரசு அதிரடி

Chithra / May 1st 2026, 11:18 am
image

வெளிநாடுகளுக்குப் பயணம் செய்யும் பௌத்த பிக்குகளுக்கான கட்டுப்பாடுகளை இலங்கை அரசு மேலும் கடுமைப்படுத்தியுள்ளது.


புதிய நடைமுறைகளின் படி, வெளிநாடுகளுக்குச் செல்லும் பௌத்த பிக்குகள் தங்களது மூத்த பிக்கு, பிராந்திய பௌத்த தலைவர் மற்றும் சம்பந்தப்பட்ட பீடங்களின் மகாநாயக்க தேரர்கள் ஆகியோரிடமிருந்து பரிந்துரைகளை பெறுவது கட்டாயமாக்கப்பட்டுள்ளது.


இந்த சட்டம் முன்பே இயற்றப்பட்டிருந்தாலும், தற்போது அது கடுமையாக அமல்படுத்தப்படும் என புத்தசாசன, சமய மற்றும் கலாச்சார விவகாரங்களுக்கான பிரதி அமைச்சர் கமகெதர திஸாநாயக்க தெரிவித்துள்ளார்.


ஜனாதிபதி அனுர குமார திஸாநாயக்க மற்றும் பௌத்த தேரர்கள் இடையே நடைபெற்ற முக்கிய சந்திப்பின் பின்னரே இந்த தீர்மானம் எடுக்கப்பட்டதாகவும் அவர் குறிப்பிட்டார்.


இந்த புதிய நடைமுறை அவசியமானதாக கருதப்படுவதுடன், மகாநாயக்க தேரர்களுக்கும் இதுகுறித்து விளக்கமளிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.


தாய்லாந்திலிருந்து பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்திற்கு திரும்பிய 22 பௌத்த பிக்குகள் பெருமளவிலான போதைப்பொருட்களுடன் கைது செய்யப்பட்ட சமீபத்திய சம்பவம் இந்த கடும் நடவடிக்கைக்கு முக்கிய காரணமாக பார்க்கப்படுகிறது.


இதன் மூலம் பௌத்த சங்கத்தின் கௌரவத்தையும் ஒழுங்கையும் பாதுகாக்க அரசு நடவடிக்கை எடுத்துள்ளதாக அதிகாரிகள் வலியுறுத்துகின்றனர்.

வெளிநாடுகளுக்கு செல்லும் பௌத்த பிக்குகளுக்கு இனி கடும் கட்டுப்பாடு அநுர அரசு அதிரடி வெளிநாடுகளுக்குப் பயணம் செய்யும் பௌத்த பிக்குகளுக்கான கட்டுப்பாடுகளை இலங்கை அரசு மேலும் கடுமைப்படுத்தியுள்ளது.புதிய நடைமுறைகளின் படி, வெளிநாடுகளுக்குச் செல்லும் பௌத்த பிக்குகள் தங்களது மூத்த பிக்கு, பிராந்திய பௌத்த தலைவர் மற்றும் சம்பந்தப்பட்ட பீடங்களின் மகாநாயக்க தேரர்கள் ஆகியோரிடமிருந்து பரிந்துரைகளை பெறுவது கட்டாயமாக்கப்பட்டுள்ளது.இந்த சட்டம் முன்பே இயற்றப்பட்டிருந்தாலும், தற்போது அது கடுமையாக அமல்படுத்தப்படும் என புத்தசாசன, சமய மற்றும் கலாச்சார விவகாரங்களுக்கான பிரதி அமைச்சர் கமகெதர திஸாநாயக்க தெரிவித்துள்ளார்.ஜனாதிபதி அனுர குமார திஸாநாயக்க மற்றும் பௌத்த தேரர்கள் இடையே நடைபெற்ற முக்கிய சந்திப்பின் பின்னரே இந்த தீர்மானம் எடுக்கப்பட்டதாகவும் அவர் குறிப்பிட்டார்.இந்த புதிய நடைமுறை அவசியமானதாக கருதப்படுவதுடன், மகாநாயக்க தேரர்களுக்கும் இதுகுறித்து விளக்கமளிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.தாய்லாந்திலிருந்து பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்திற்கு திரும்பிய 22 பௌத்த பிக்குகள் பெருமளவிலான போதைப்பொருட்களுடன் கைது செய்யப்பட்ட சமீபத்திய சம்பவம் இந்த கடும் நடவடிக்கைக்கு முக்கிய காரணமாக பார்க்கப்படுகிறது.இதன் மூலம் பௌத்த சங்கத்தின் கௌரவத்தையும் ஒழுங்கையும் பாதுகாக்க அரசு நடவடிக்கை எடுத்துள்ளதாக அதிகாரிகள் வலியுறுத்துகின்றனர்.

Advertisement

Advertisement

Advertisement